Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

Wednesday, July 10, 2013

கூகுளின் சில மேஜிக் வார்த்தைகள்...



தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது.

Let it Snow:
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.

Tilt:
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.

Do a Barrel Roll:
இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.

Hanukkah:
இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.

Saturday, October 16, 2010

Google - PDF பைல்களை மட்டும் தனியாக தேட

நாம் இணையத்தில் ஏதாவது தேடுவதாக இருந்தால் Google தான் பயன் படுத்துகிறோம். கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.

நாம் ஏதாவது புத்தகம், டுடொரியல், கதை போன்றவைகளை PDF பார்மெட்டில் எதிர்பார்ப்போம். இப்பொழுது Google-யில் PDF பார்மெட் பைல்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என பார்ப்போம்.

நீங்கள் Google தேட விரும்பும் வார்த்தை டைப் செய்து பிறகு Filetype:pdf
என கொடுத்து Search செய்தால் அனைத்தும் PDF பார்மெட்டிலேயெ கிடைக்கும்.  உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


Friday, June 25, 2010

உள்ளங்கையில் பயனுள்ள இணையதளம்

இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை.


பல இணைய தளங்கள் நாம் அன்றாடம் செல்லும் இணைய தளங்களாக அமைகின்றன. இவற்றில் இமெயில், புதிய தகவல்கள், உறவுகளுக்கு கடிதங்கள், கேள்விகளுக்குப் பதில்கள் எனப் பலவகையான செயல்களை மேற்கொள்கிறோம்.




இந்த தளங்கள் அன்றாடம் செல்ல வேண்டிய தளங்களாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவற்றை அடைய இந்த தளங்களின் முகவரிகளை டைப் செய்திட வேண்டும். அல்லது அதன் தொடக்க எழுத்துக்களையாவது அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக இது போன்ற அடிக்கடி அனைவரும் பயன்படும் தளங்களுக்கு பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்வது போல லிங்க்குகளை ஒரே தளத்தில் அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதனைத்தான் http://www.MyEverydayPage.com என்ற தளம் செய்கிறது.



இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை. இந்த தளத்தை உங்கள் ஹோ ம் பேஜாக வைத்துக் கொண்டால் இணையத்தைத் திறந்தவுடன் உங்களுடைய அனைத்து தளங்களும் உங்கள் கண் முன்னால் டெஸ்க் டாப்பில் நீங்கள் கிளிக் செய்வதற்காகக் காத்திருக்கும்.



அனைவரும் எப்படியும் செல்ல வேண்டிய தளங்களுக்கென (Most Visited Websites) ஒரு தனிப் பிரிவு அமைத்து அதில் : yahoo, google, orkut, hotmail, rediff, facebook, youtube போன்ற தளங்களுக்கான லிங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களை உற்சாகப் படுத்தி சிந்திக்க வைத்திட சான்றோரின் பொன்மொழிகள் தரப்படுகின்றன. இவற்றுடன் இனிமையான மியூசிக் இசைக்கப்படுகிறது. பாடல் ஒலிக்கிறது. இந்த தளத்தில் உள்ள பிரிவுகளைப் படித்தால் உங்களுக்கு என்ன என்ன தளங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவரும்.


Top Emailing Websites / Search Engines /Photos & Wallpapers/Social Networking Websites /Google Tools /Finance /Downloads /Office Productivity /Health Conscious/Mind Power & Spirituality/Technical Paradise/Entertainment இவற்றில் ஒவ்வொரு பிரிவி லும் குறைந்தது 7 தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


நிச்சயம் நீங்கள் இதுவரை பார்க்காத தளங்களும் இந்த பட்டியலில் இருக்கும். இந்த தளங்களைப் பெறுவதற்குக் கிளிக் செய்திடும் முன் கர்சரை இதன் அருகே கொண்டு சென்றவுடனேயே அதன் தம்ப் நெயில் படம் பெரிதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக யாஹூ இமெயில் தளம் சென்றவுடன் அத்தளத்தின் முகப்புப் பக்கம் தெரியும். தவறுதலாக யாஹூ வின் முதன்மைப் பக்கத்திற்குப் பதிலாக இதனைக் கிளிக் செய்வது இதனால் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்த தளத்தை ரெப்ரெஷ் செய்தால் பொன்மொழிகள் மாறுகின்றன. பாட்டு தரப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் அருமையான பாட்டு ஒன்று டவுண்லோட் ஆகி இசைக்கப்படுகிறது. நீங்கள் எந்த தளத்தை யேனும் அனைவருக்கும் பயனுள்ள தளம் என்று எண்ணினால் அது குறித்து இவர்களுக்கு எழுதலாம். இந்த முயற்சி எல்லாருக்கும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப் பட்டது என்றும் அதனால் இத்தகைய தளம் இருப்பதை அனைவருக்கும் சொல்லுங் கள் என்று வேண்டுகோளும் இந்த தளத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தால் இதனை நீங்கள் விரும்பி பார்ப்பீர்கள் என்பது உறுதி. ஏனென்றால் நம்முடைய பொன்னான நேரத்தை இது அதிகம் மிச்சப்படுத்துகிறது.

இன்டர்நெட் ஹிஸ்டரி

இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்தும் புதியவரா நீங்கள்? அல்லது வெகு நாட்க ளாகவே பயன்படுத்தி வருகிறீர்களா? எப்படி இருந்தாலும் தலைப்பைப் படித்த பின்னர் இன்டர்நெட் ஹிஸ்டரி என்றால் என்ன என்று அறிய சற்று ஆர்வமாக இருப்பீர்கள் அல்லவா? இந்த குறிப்பினைப் படித்துவிடுங்கள்.
இன்டர்நெட்டில் எந்த தளங்களுக்கெல்லாம் நீங்கள் அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒருவர் சென்று பிரவுஸ் செய்துள்ளார் என்று காட்டும் இடமே இன்டர்நெட் ஹிஸ்டரி. நீங்கள் சென்ற தளம் அல்லது குடும்பத்தில் ஒருவர் சென்ற தளம் குறித்து அறிய நீங்கள் முயற்சிக்கையில் இது உதவும். அல்லது ஏற்கனவே நீங்கள் சென்ற பயனுள்ள தளம் ஒன்றின் முகவரி உங்களுக்கு மறந்து போயிருக்கலாம்.

அதனைப் பெறவும் இந்த ஹிஸ்டரி உதவும். ஒரு நாளில் சராசரியாக எத்தனை வெப்சைட்டுகளுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள் என்று அறியவும் நீங்கள் முயற்சிக்கும் போதும் இது உதவும். உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியினை நீங்கள் அவ்வப்போது சென்று பார்ப்பது நல்லது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் ஹிஸ்டரி பட்டன் நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனைக் காண வழி தரப்பட்டுள்ளது. இடது மூலையில் ஒரு சிறிய ஸ்டார் ஐகானை நீங்கள் காணலாம். அதில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ஹிஸ்டரி என்று இருப்பதில் உள்ள சிறிய அம்புக்குறி மீது கிளிக் செய்தால் கீழாக ஒரு மெனு கிடைக்கும். அந்த மெனுவில் உள்ள பிரிவுகளில் பை டேட் என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள்.



உடனே உங்கள் இன்டர்நெட் ஹிஸ்டரி கிடைக்கும். வரிசையாக உங்கள் தேடுதலுக்கேற்ற வகையில் நீங்கள் சென்று பிரவுஸ் செய்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இந்த தளங்களில் காட்டப்படும் வெப்சைட் முகவரிகளில் மீது கிளிக் செய்தும் நீங்கள் அந்த தளங்களுக்குச் செல்லலாம். தேதி வாரியாக, தளங்கள் வரிசையாக, இன்று பார்த்த தளங்கள், அடிக்கடி சென்று பார்த்த தளங்கள் என வகை வகையாக இவற்றைப் பார்க்கலாம். இந்த பட்டியல்களில் இருந்து தளங்களின் முகவரிகளை நீக்கவும் செய்திடலாம்.