Saturday, December 7, 2013

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு சிறப்பு பகுதி 1



* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.
* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.
* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.
* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.
* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.
* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.
* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).
* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.
* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.
* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.
* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.
* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.
* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.
* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.
* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.
* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.
* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.
* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.
* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

Sunday, December 1, 2013

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு டிசம்பர் முக்கிய தினங்கள்



1 - எய்ட்ஸ் தினம்
2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
2 - உலக மாசு தடுப்பு நாள்
3 - ஊனமுற்றோர் தினம்
4 - தேசிய கடற்படை தினம்
5 - உலகத் தன்னார்வலர் தினம்
7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
7 - கொடி நாள்
9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
12 - உலக அமைதி நாள்
13 - உலக ஆஸ்துமா தினம்
14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்
18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம் பிறந்தநாள்)
23 - உலக விவசாயிகள் தினம்
24 - தேசிய நுகர்வோர் தினம்
25 - கீழவெண்மணி நினைவு நாள்
25 - கிறிஸ்துமஸ்
26 - சுனாமி தினம்

டி.என்.பி.எஸ்.சி - ஆங்கில சொல்லுக்கான தமிழ் சொல்



car : மகிழுந்து , சிற்றுந்து , சீருந்து .
lorry : சரக்குந்து , சுமையுந்து ,
சுமை ஊர்தி , பாரஊர்தி .
motorcycle : விசையுந்து ,மிதியுந்து .
bicycle : மிதிவண்டி .
van : கூடுந்து , மூடுந்து .
bus : பேருந்து .
helicopter : உலங்கூர்தி /உலங்கு வானூர்தி
aeroplane : வானுர்தி , வான்கலம் ,
விமானம் .
tractor : ஏருந்து , உழுவை/
உழுபொறி/ உழவு இயந்திரம்.

செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது.



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்ணில் ஏவப்பட்ட, 'மங்கல்யான்' செயற்கைக்கோள் இன்று புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, 'மங்கல்யான்' செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு 'மங்கல்யான்' செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது.

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான், விண்வெளியில் பயணித்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடையும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது.

Friday, November 29, 2013

சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமானது

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்று வட்டத்தை நெருங்கியதும் அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை. ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது. சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அனேகமாக அது சிதறுண்டு போயிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது. தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது. நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன். மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம்.

ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம். தப்பிப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது. ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.