Tuesday, November 18, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 5

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
71. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?
72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது?
73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது?
82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?
83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது?
84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?
85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது?
88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது?
89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?
90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?
91. "சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?
93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?
94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?
95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?
96. தமிழக அரசின் மாநில மரம் எது?
97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன?
101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது? 104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?
105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்?
106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை?
107. உலகின் மிகப்பெரிய நாடு எது?
108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது?
109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்?
110. யூத மதத்தின் புனித நூல் எது?
விடைகள்:
71. 1,492
72. வாஷிங்டன்
73. ரா.பி.சேதுப்பிள்ளை
74. 1955
75. 1967
76. 1968
77. 1996
78. 12,500
79. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
80. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
81. ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு
82. மேட்டூர் அணை
83. பீஜிங் (சீனா)
84. கனடா - வான்கோவர் நகரம்
85. ஓடோஸ்கோப் (Odoscope)
86. பெங்களூரு
87. மகாராஷ்டிரா
88. பீகார்
89. 18 சதவீதம்
90. 2 சதவீதம்
91. பாலகங்காதர திலகர்
92. 7,516 கி.மீ
93. அல்பேனியா
94. வங்காளதேசம்
95. 4,120
96. பனை மரம்
97. 47 வருடங்கள்
98. 19 வருடங்கள்
99. AB
100. 32,80,483 ச.கி.மீ.
101. 75,166 கி.மீ
102. 15,200 கி.மீ
103. பிரம்மபுத்திரா
104. ஜெர்மனி
105. அகிலன் - ஜெயகாந்தன்
106. குஜராத், ஆந்திரம்
107. ரஷ்யா
108. பரம்வீர் சக்ரா
109. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
110. தோரா (Torah) 

நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
 

டிஎன்பிஎஸ்சி 4 குரூப் - IV மாதிரி வினா - விடை 4

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது?
42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்?
43. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?
44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது?
45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்?
46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?
47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?
48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?
49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?
50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
51. உலோகங்களில் லேசானது எது?
52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?
54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. 2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... 3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள் 4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது 5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?
55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?
56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது?
57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது?
58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது?
59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்?
60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்?
61. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
62. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது?
63. உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது?
64. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது?
65. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
66. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்?
67. முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்?
68. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை?
69. திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது?
70. பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
விடைகள்: 41. சுவிட்சர்லாந்து 42. 8.10.1932 43. 8 தலைப்புகள் 44. நெதர்லாந்து 45. நரசிம்மவர்மன் 46. இத்தாலி 47. 65 48. பத்திரிக்கை 49. பாதுகாப்புத்துறை 50. கோபால கிருஷ்ண கோகலே 51. லித்தியம் 52. அரிஸ்டாட்டில் 53. கொன்றைவேந்தன் 54. மூதுரை 55. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை 56. 47 57. 61 58. 42-வது சட்டத்திருத்தம் 59. 6.8.1952, பிரதமர் 60. அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர் 61. 1945 62. பிரிவு 315 (Article 315) 63. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL) 64. பிரிவு எண் 136 65. கர்ணம் மல்லேஸ்வரி 66. சரோஜினி நாயுடு 67. சிவபாக்கியம் 68. 1 கோடியே 20லட்சம் 69. சீனா 70. மகாராஷ்டிரா 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 3

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.
5 உலக புற்றுநோய் தினம் எது?
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?
24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?
33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?
விடைகள்:
1. 52 ஆண்டுகள்
2. செம்ஸ்போர்டு பிரபு
3. கிருஷ்ணா நதி
4. 1. ராஜஸ்தான்
2. மத்திய பிரதேசம்
3. மகாராஷ்டிரா
5. பிப்ரவரி 4
6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. அமெரிக்கா
9. ஜப்பான்
10. 60
11. குஜராத் (அகமதாபாத்).
12. 962
13. 1912
14. லடாக் விமானத்தளம்.
15. விவசாயத் துறையில்
16. முதலாவது திட்டம்
17. பிரித்வி
18. 5 ஆண்டுகள்
19. 1945
20. 1944
21. Income
22. Rate of Indirect Tax
23. 2002
24. 4-வது இடம்
25. சாளுக்கியர்கள்
26. ஜோகன்ஸ்பர்க்
27. அமெரிக்கா
28. அயர்லாந்து
29. டாக்டர். ஜன் மத்தால்
30. 2002
31. 1951
32. வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்
33. பிளிம்சால் கோடுகள்
34. 2003
35. சிக்கிம் (0.05%)
36. ஏழாவது இடம்
37. 640
38. 74.04% (2001-ல் 64.38%)
39. 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்
40. வாரன் ஹேஸ்டிங்ஸ் 

நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
 

டிஎன்பிஎஸ்சி | குரூப் - IV மாதிரி வினா - விடை 2

குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.
அலகு-1 (பொது அறிவியல்)
இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.
வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.
தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.
விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.
அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)
வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.
அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.
புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.
பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.
அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.
அலகு 3 (புவியியல்)
பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.
அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)
சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.
அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)
அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அலகு 6 (இந்திய பொருளாதாரம்)
இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.
அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)
இந்திய தேசியத் தலைவர்களான காந்திஜி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.
அலகு 8 (திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை)
கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு. 

நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
 

டிஎன்பிஎஸ்சி | குரூப் - IV மாதிரி வினா – விடை 1

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாண வர்கள் பொது தமிழ் பாடத் தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
`வெற்றிக்கொடி' பகுதி மூலம் உயர்கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக ஏராளமான தகவல்களை மாணவ, மாணவி களுக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்
இந்து' நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவி களுக்கு உதவும் வகையில் நல்ல தரமான மாதிரி வினா-விடைகளை வெளியிட இருக்கிறது.
டிப்ஸ்.. டிப்ஸ்..
• அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.
• கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
• முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
• என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
• தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
• உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!

நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)