Friday, January 8, 2016

படித்தால் அறிவு வருமா ?


விளக்கம் ;

படித்தால் அறிவு வராது ?ஏன் ?வரும் என்றால்,வந்தது ஒரு நாளைக்குப் போகும் என்பது "சித்தாந்தம்"அறிவு என்பது ஏரி ஜலம்போல் எங்காவதுதேங்கியிருக்கின்றதா?அல்லது கடைகளில் விற்கின்றதா ?அறிவு விற்பதாயின் தனவந்தர்கள் (பணக்காரர்)ஒரு கிலோ ஆயிரம் (லட்சம்)ரூபாய் ஆனாலும் வாங்கித் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவார்களே !ஆகவே ,அறிவு விளைகின்றபொருளுமன்று ;ஒரு புறமிருந்து மற்றொரு புறம் வருகின்ற பொருளுமன்று .
கற்கண்டில் தித்திப்பு இருப்பது போலவும் மலரில் மணம் இருப்பது போலவும் ஆன்மாவில் அறிவு இருக்கின்றது.ஆன்மாவே அறிவிப் பொருள்தான்.
"பாராதி பூதம்நீ அல்லை உன்னிப் 
பார்இந் திரியம் கரணம்நீ அல்லை 
ஆராயும் உணர்வுநீ என்றான் -ஐயன் 
அன்பாய் உரைத்தசொல் ஆனந்தம் தோழி."
-
தாயுமானார்.
கற்கண்டில் வேப்பெண்ணெய் தடவி விட்டால் அதன் இனிப்பை வேப்பெண்ணெய் தடுத்து நிற்கும்.
எலெக்ட்ரிக் பல்பின் மீது தார் பூசிவிட்டால் அதன் ஒளியைத் தார் தடுத்து நிற்கும்.அதுபோல் ஆன்மாவின் அறிவுப் பிரகாசத்தை அறியாமையாகிய ஒன்று தடுத்து மறைத்திருக்கின்றது.அவ்வாறு மறைத்திருக்கின்ற அறியாமை படிப்பதனால் விலகுகின்றது.துணியில் உள்ள வெண்மையாகிய உண்மையை அழுக்கு மறைத்திருக்கின்றது.
சவுக்காரமிட்டுத் (சோப்பு)துணியைத் துவைப்பதானால் அழுக்கு நீங்கியவுடன் அதன் இயற்கையாகிய வெண்மையைத் துணி அடைகின்றது.
மறைந்திருக்கின்ற மணலை எடுத்தவுடன் "" நீர் "" ஊற்றெடுத்து வெளிப்படுவதுபோல் மறைத்திருக்கின்ற அறியாமை நீங்கியவுடன் ""அறிவு""வெளிப்பட்டுத் தோன்றுகின்றது.
'இல்லது தோன்றாது,உள்ளது சிதையாது ;என்பது சத்காரியவாதம்.
ஆகவே,ஆன்மாவில் இல்லாத,அறிவு நூதனமாகத் தோன்றுவதில்லை.
எனவே ,படித்தால் அறிவு வராது என்பது முடிந்த முடிவு.படித்தால் அறியாமை தேயும் ;உள்ள அறிவு வெளிப்படும் 
அகவே ஆன்மீக புத்தகம் படியிங்கள் 
படித்ததில் பிடித்ததை பகிருங்கள் தெளிவு கிடைக்கும் 
"
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு.
-
குறள்.
விளக்கம் ;தெய்வத்திரு வாரியார் சுவாமிகள்.

Tuesday, January 5, 2016

மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள சில அமானுஷ்ய இடங்கள்!!!



வட சென்டினல் தீவு (North Sentinel Island) 


வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஒன்று தான் இந்த வட சென்டினல் தீவு. ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஓர் சின்ன தீவு தான். இங்கு இன்றும் வெளியுலகம் தெரியாத காட்டுவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஓர் நேஷனல் ஜியாக்ராபிக் (national geographic) இயக்குனர் இவர்களை படம்பிடிக்க, தொடர்புகொள்ள அனுமதி கோரியது. ஆனால், இந்திய அரசு அவர்களை தொடர்புக்கொள்ள அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

லாஸ்குக்ஸ் குகைகள் (Lascaux Caves)


தெற்கு பிரான்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த லாஸ்குக்ஸ் குகைகள் (Lascaux Caves).இங்கு ஏறத்தாழ 20,000 வருடங்களுக்கும் பழமையான ஓவியங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிருகங்களின் ஓவியங்கள் தான். மார்செல் ரவிதத் எனும் 18 வயது இளைஞன் இந்த குகையை கடந்த 1942-ம் ஆண்டு தன் நண்பர்களுடன் கண்டுபிடித்தான்.
 
பிறகு இவனது நண்பர்களுடன் ஊருக்குள் சென்று இப்படி ஒரு குகையை கண்டதை கூறினான். 1948-ம் ஆண்டு இந்த குகை மக்களுக்காக திறந்துவிடப்பட்டது. ஆனால் மக்களிடம் இருந்து வெளிப்படம் CO2 இந்த ஓவியங்களை அழிக்கிறது என்பதால் யுனெஸ்கோ இந்த இடத்திற்கு மக்கள் செல்ல 1963-ம் ஆண்டு தடைவிதித்தது.
 
மெட்ரோ 2 (Metro 2)
மாஸ்கோவில் இருக்கும் ஓரிடம் தான் இந்த மெட்ரோ 2. இதன் கோட் பெயர் D-6. இந்த இடத்தில் 30,000 மக்களை தங்க வைக்க முடியும். இது கிரெம்ளினிலிருந்து எப்எஸ்பி தலைமையகம் வரை செல்ல வழியை இணைக்கிறது. இந்த இடமும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

ஐஸ் கிராண்ட் புனிதப்பள்ளி (Ise Grand Shrine)

பி.சி நான்காம் நூற்றாண்டில் இருந்து இந்த புனிதப்பள்ளி இருப்பதாய் கூற்றுகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இருக்கும் நூற்றுக்கணக்கான புனிதப்பள்ளிகளில் இது மிகவும் அச்சமிக்க இடமாக கருதப்படுகிறது. ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்ப நபர்களை தவிர இந்த இடத்திற்கு வேறு யாரும் செல்ல முடியாது.

அரச குடும்பத்தை தவிர இந்த இடத்தினுள் என்ன இருக்கிறது என வேறு யாரும் கண்டதில்லை. வெளியில் இருந்து இதன் கூரையை தவிர வேறு எதையும் மக்கள் கண்டதில்லை என இவ்விடத்தை சுற்றி இருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

கிழக்கு ரெண்வெல், சாலமன் தீவுகள் (East Rennell, Solomon Islands)

கிழக்கு ரெண்வெல், சாலமன் தீவுகள் (East Rennell, Solomon Islands) கிழக்கு ரெண்வெல் தீவுகள் யுனெஸ்கோவால் உலக மரபு இடமாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இங்குள்ள உள்ளூர் மக்களால் இந்த இடத்தில் இராட்சத மனிதர்கள் இருப்பதாகவும், அவர்கள் தலையை கொய்து நரமாமிசம் உண்பவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஈஸ்டர் தீவு, சிலி (Easer Island, Chile) 
பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த ஈஸ்டர் தீவு. உலகில் உள்ள தனிமைப்படுத்தப்படுள்ள இடங்களில் இதுவும் ஒன்று. இது சிலியுடன் இணைந்திருக்கும் ஓர் பகுதி. பண்டைய காலம் முதலே இந்த இடம் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் விதத்தில் தான் அமைக்கப்படிருந்ததாக கூறப்படுகிறது.

பாம்புகள் தீவு (Snake Island) 
பிரேசிலில் இருக்கும் ஸ்ம் பாலொ கடற்கரை பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பாம்புகள் தீவு. ஒவ்வொரு சதுர அடியிலும் ஒரு பாம்பையாவது நீங்கள் இங்கு காண முடியும். கோல்டன் பிட்வைப்பர் (Golden Pit Viper) எனும் வகையை சேர்ந்த பாம்புகள் தான் இங்கு அதிகமாக இருக்கின்றன.

பிரேசிலின் கப்பற்படை அதிகாரிகள் இந்த தீவையும், இந்த வகை பாம்புகளையும் காக்க, இந்த இடத்தை மூடி வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மட்டுமே இந்த தீவிற்கு சென்று வர முடியும். பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இங்கு செல்ல முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

போவேக்லியா, இத்தாலி (Poveglia, Italy)

வடக்கு இத்தாலி பகுதியில் வெனிஸ் மற்றும் லிடோ இடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது இந்த சிறிய தீவு. 1348-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட ஓர் பிளேக் நோய் தொற்றினால் மக்கள் பெரும்பாலானோர் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இங்கு இருந்தவர்கள் இப்போது வெனிஸ் பகுதியில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிளேக் நோயால் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்றும் அவர்களை பெரிய பெரிய பிணத்தை எரிக்கும் கட்டைகளை வைத்து ஒட்டுமொத்தமாக எரித்தனர் என்றும் கூறுகிறார்கள். இன்றளவும் இந்த இடத்திற்கு செல்ல மக்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.