Thursday, November 3, 2016

சாயம் போன சூரியகாந்தி எண்ணெய் ஊஷார் . . .





“சரி நண்பர்களே .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…”

“எங்கப்பா மாசத்துக்கு அல்லது வாரத்திற்கு ஒரு தடவைதான்…”

“மாசத்துக்கு அல்லது வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்ற, உடம்புக்குள்ள எப்படி கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படி சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

“ஆமாம்ப்பா . எப்படி..”

“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?”

“என்னாண்ணே சொல்றீங்க…?”

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)

“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

“இல்லைண்ணே..”

“பாரு… உண்மை புரியும்…”

“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

“என்னா தெரியும்…”

“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”

“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”

“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு…

“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”

“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”

“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”

“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?

பிரதோஷ காலத்திலே சிவலிங்கம்




பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.


பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை?

கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும்

பிரதோஷ விரதமாவது யாது?

சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)

Wednesday, November 2, 2016

தீபாவளி வரலாறு.


#இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான்.
இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுவதல்ல.
#சமணர்கள், #பௌத்தர்கள், #சீக்கியர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
சமண மத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரரான வர்த்தமான #மகாவீரர்மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
மாமன்னர் #அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தீபாவளி தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் சங்கமத் திருநாள்.
“#சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி” என்று மூன்றாவது சீக்கிய குருவான குரு #அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
சீக்கியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் ஹர்மந்திர் சாஹிப் எனப்படும் #பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான்.
அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய #குரு_ராம்தாஸ் 1577ம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார்.
இப்பணியை முழுமையாக்கி #அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்துவந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.
சீக்கியர்களின் எழுச்சிக் காலமாகக் கருதப்படும் காலம் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங்கின் காலம் (1595 – 1644). இவர் அப்போதைய முகலாய மன்னர் #ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார்.
அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு #குவாலியர்கோட்டையிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
#முஸ்லிமாக_மதம்_மாற_வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன.
அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் தாண்டிய குரு #கோவிந்த_சிங்கின் பெருமையை மன்னர் #ஜஹாங்கீர் உணர்ந்தார்.
இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார்.
ஆனால், தன்னுடன் #சிறையிலுள்ள_52_இந்து_மன்னர்களையும்விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.
கடைசியில் குருவின் மனவலிமையே வென்றது.
ஒரு தீபாவளி நன்னாளில் குரு கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் #ஜஹாங்கீர்.
1619, அக்டோபர் 26ம் நாள் இந்த சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்வு நடைபெற்றது.(இணைக்கப் பட்டுள்ள ஓவியத்தைப் பார்க்கவும்.சிறையில் இருந்து வெளியே வரும் குரு கோவிந்த் சிங்)
அதனை ஆண்டுதோறும் நினைவுகூரும் விதமாக, 
#பந்தி_சோர்_திவஸ்’ என்ற விழா சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது. வரும் இந்நாளில் அமிர்தசரஸ் திருக்குளத்தில் சீக்கியக் குழந்தைகள் வண்ண விளக்குகளை மிதக்கவிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.
சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699ம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக, முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார்.
அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகியும் குரு கோவிந்தரின் பால்ய நண்பருமான குரு பாயி #மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737, டிசம்பரில் கைது செய்யப்பட்டு லாகூர் கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு #லாகூர் ஆளுநர் #சஹாரியா_கானால் கடும் சித்ரவதைக்கு ஆளாகி பாயி மணிசிங் தீபாவளியன்று பலியானார்.
அவரது மரணம் சீக்கியர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. ஏற்கனவே பத்தாவது குருவான குரு கோவிந்தரால் அமைக்கப்பட்ட 
#கால்சா_படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலை காரணமாக அமைந்தது.
இவ்வாறாக, தியாக மயமான சரித்திர நிகழ்வுகளின் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனிதமான நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர்.
இனி #இந்துக்களின்_தீபாவளி பற்றிக் காண்போம்.
நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும்.
.தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை.
வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, போன்ற தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.என்பது தத்துவம்.
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
[1]....#கிருஷ்ணர், #நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
[2].....இராமாயண இதிகாசத்தில், #இராமர், #இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் #அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
[3]...கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் 
கேதாரகௌரி விரதம் முடிவுற்றது. இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
எனவே புனிதமான பாரம்பரியம் மிக்க நாளான தீபாவளி நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல்




இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன் மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின் இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து போகிறது....!!!!

இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும் வழங்க பட்டுள்ளது.

குழந்தை வேண்டி அதிகாலையில் அரசமரத்தை சுற்றும் பெண்கள் அனைவரும் அங்கு வெளிப்படும் வாயுவை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் மனித செல்லினுள் காணப்படும் DNA வின் பின்னிய ரிப்பன் வடிவத்தை

(double helix) மனதில் கற்பனைசெய்துகொண்டால் முழுமையான கர்பத்திற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.

இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு வணங்கும் பொது DNA வின் வடிவம் அவர்களின் மனதை ஆட்கொள்ளும் அல்லவா..?

நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானத்தை நினைத்து பெருமிதம் அடைவோம்....!!!!

கந்தர் சஷ்டி கவசமும் உடலியலும்

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.
அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.
இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.
தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.
இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.
அவர் சொன்னதாவது:
முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.
உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..
மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!
மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!
மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!
மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!
என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.
இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.
பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.
என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.
நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.
மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.
நானும் சொல்லத் துவங்கினேன்.
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!
கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.
ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.
அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்
ஓம் சரவணபவ
- சித்தர்கள் தபோவனம்