Sunday, May 10, 2015

படித்ததில் பிடித்தது...




இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்.....உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாட்டின் அரசியலும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
*fathi*.........

Saturday, May 9, 2015

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

இரண்டு மன்னர்களின் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .”நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”
வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்வி”ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.


தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்”விடை சொல்கிறேன். அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”
அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”
அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.
கிழவியிடம் வந்தான் வேண்டியதைக்கேள்என்றான்.
அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்
அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”
அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள் ”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”
ஆம்!
பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

Sunday, May 3, 2015

புறா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் தெரியுமா?

பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப் பார்த்தால் அதில் சிறு சிறு கற்களாக பல கற்கள் இருப்பதை பார்க்கலாம்.
இதற்கு காரணம் நமக்குத் தெரிந்து கோழிகள் இரை என்று நினைத்து கற்களையும் சேர்த்து விழுங்கிவிடுவதாக்கத்தான் இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் கோழிகள் மற்றும் பறவைகள் உணவுடன் சேர்த்து கற்களை தெரிந்தே உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதற்காக இந்த கோழிகள் மற்றும் பறவை இனத்தில் சில கற்களையும் சேர்த்து விழுங்குகிறது என்ற ஆராய்ந்துப் பார்க்கையில் மிகவும் விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கோழிகள் தாங்கள் உண்ணும் தீனி நன்கு ஜீரணமாவதற்கு சற்று அதிக உறைவுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிக் கற்களை உணவுடன் சேர்த்து உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த கோழிகள் தான் தங்களின் உணவு ஜீரணத்திற்காக கற்களை உண்கிறது என்றால் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவலை பறவைகளின் ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் என்றால் நம்புவீர்களா 1?. ஆம் நண்பர்களே..! புறா போன்ற சிறியப் பறவைகள் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள கற்களை உண்ணுவதாக விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள்.


உயர்ந்த மரக்கிளையில் வாழும் புறா போன்ற பறவைகள் தங்களின் வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் உயரமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து சிறு சிறு கற்களை சேமித்து வைத்துக்கொள்கின்றனவாம். இதற்கு காரணம் பறவைகளின் இளமை முடிந்து முதுமை ஏற்பட்டு, இனி தங்களால் பறந்து சென்று இறை தேட இயலாது என்ற நிலை வரும்பொழுது அந்தக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி வருகின்றன.


இறுதியில் இரைப்பையில் அதிக கற்கள் சேர்ந்து பாரம் அதிகமான நிலையில் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பறக்க முயற்சி செய்யாமல் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், பறவையின் அடிப்படை இயற்பியல் அறிவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Friday, April 17, 2015

நட்பின் இலக்கணம் இதுதான்...!



சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீஆதி கோரக்கநாத சுவாமி, பட்டாணி சுவாமி திருக்கோயிலில் களை கட்டியது களரி திருவிழா. கடந்த பங்குனி 27-ம் தேதி தொடங்கிய இத்திருவிழா தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சுமார் 200 வருடம் பழமையானது.

இங்கு கோரக்கநாத சுவாமி என்கிற முனிவரும், அவருடைய இஸ்லாமிய நண்பருமான பட்டாணி சுவாமியும் வணங்கப்படுகின்றனர். ஒரே கோயிலில் இரு மதத்தினர் வணங்கும் நடைமுறை வேறெங்கும் காணுதற்கரிய காட்சி. இது அவ்வூர் மக்களின் சமத்துவத்துக்கான அடையாளம்.
கோரக்கரின் பிறப்பு:

ஒரு கடற்கரை பகுதியில் சிவபெருமானின் உபதேசத்தை மீன் ஒன்று கேட்க, அதன் பயனாய் அந்த மீன் மனித உருவம் பெற்று அவர் மச்சேந்திரர் என்று வணங்கப்பட்டார். சிவஞானம் கொண்ட மச்சேந்திரர் ஒவ்வொரு ஊராக செல்லும்போது உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அடைகிறார். ஒரு வீட்டில் யாசகம் கேட்கிறார். தனக்கு பிச்சை அளித்த பெண்மணி குழந்தை பேறின்றி இருப்பதை அறிந்து கொண்டார். உடனே அந்த பெண்ணின் கையில் சிறிதளவு விபூதியை கொடுத்து அதனை உட்கொண்டால் குழந்தைபேறு அடைவாய் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றார். யாசகம் கேட்கும் பிச்சைக்காரன் சொன்னதை உண்மை என்று நம்புகிறாளே என்று ஊரார் கேலி செய்ய, அந்த விபூதியை அடுப்பறையில் வீசிவிட்டாள் அந்த பெண்.

12வருடங்களுக்கு கழித்து மச்சேந்திரர் மீண்டும் அப்பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் ''எங்கே உன் மகன்?'' என்று கேட்டார். அந்தப் பெண்ணோ நீங்கள் கொடுத்த விபூதியை நான் அடுப்பறையில் வீசிவிட்டதாக சொல்ல, கடும் சினங்கொண்ட மச்சேந்திரர் அடுப்பருகே சென்று கோரக்கர் என்று கூப்பிட 12 வயது பாலகன் ஒருவன் எழுந்து, அவர் அடி பணிந்தான். சுற்றி நின்றவர்கள் யாவரும் விழி விரிய பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுதே அவன் மச்சேந்திரருக்கு சீடனாகி அவர் பின்னாலயே புறப்பட்டு சென்று விட்டான். மச்சேந்திரரிடம் ஞான உபதேசம் பெற்று பல ஊர்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வரும் வழியில் தமிழகத்துக்கு வருகிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆலயமாக வழிபட்டுச் சென்ற கோரக்கருக்கு, ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள திருப்புவனத்தில் பட்டாணி ராவுத்தர் என்ற இஸ்லாமியர் நண்பராகிறார். சாதி மதம் கடந்தது தானே நட்பு. அப்படிபட்ட நட்புக்கு இலக்கணமாக விளங்கிய அவ்விருவரும் ஒன்றாக பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். ஒன்றாகவே ஜீவ சமாதியும் அடைந்தனர். மத பேதம் கடந்த அவர்களது நட்பை போற்றும் வகையில் அவர்களது நினைவாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் உருவாக்கப்பட்டு, இரு நண்பர்களும் மூலதெய்வங்களாக வணங்கப்படுகின்றனர்.

இக்கோயிலில் களரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. களரி பூஜையில் கோரக்கரின் நண்பனான பட்டாணி ராவுத்தருக்கு இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜையானது நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடத்தபடுகிறது. அப்போது பெண்கள் விரதம் இருந்து கோயில் முன் அமர்ந்து பொங்கல் வைத்தும், ரொட்டி சுட்டு படைத்தும் கோரக்கரையும், பட்டாணி ராவுத்தரையும் வழிபடுகின்றனர்.


Wednesday, March 25, 2015

இருபது ரூபாய் நோட்டில் காணப்படும் இடம்

                                
இந்திய ரூபாய் நோட்டுகளிலேயே இரண்டு கரன்சி நோட்டுகளில் மட்டுமே இந்தியாவின் பூகோள இடங்கள் இடம் பெற்றுள்ளன. நூறு ரூபாய் நோட்டில் இமயமலையின் பனி படர்ந்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இருபது ரூபாய் நோட்டில் அந்தமான் தீவின் இயற்கைக் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தமானின் பாம்பு பிளாட் துறைமுகத்தில் இருந்து ஹாரியட் மலைக்கு செல்லும் வழியில் இருபது ரூபாய் நோட்டில் இடம் பெற்ற இயற்கை காட்சியைக் காணலாம். இருபது ரூபாய் வியூ பாய்ண்ட் என்ற பெயரிலேயே இந்த இடம் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் மற்ற சுற்றுலா இடங்களை போல் வர்த்தகமயமாக பிரபலப்படுத்தி லாபம் சம்பாதிக்கும் இடமாக இந்த இருபது ரூபாய் வியூ பாய்ன்ட் மாறவில்லை. ஒரு காலத்தில் ஹாரியாட் மலையில் அந்தமானின் தலைமை கமிஷனரின் கோடைகால வசிப்பிடம் இருந்தது. அந்தமானிலேயே இரண்டாவது உயரமலையான இதில் இப்போது இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். தென்னை, பனை மரங்கள் சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதி அந்தமான் கடலை நோக்கி காணப்படுகிறது.

அதன் முனையில் 72மீட்டர் உயரமான வடக்கு கரை கலங்கரை விளக்கத்தையும், தெற்கு கரையில் நிக்கோபர் தீவின் முனையில் உள்ள இந்திரா முனை கலங்கரை விளக்கத்தையும் காண முடிகிறது. இரண்டு கலங்கரை விளக்கங்களும் 1972ல் தான் கட்டப்பட்டன. தெற்கு கரை கலங்கரை விளக்கத்தை விட வடக்குக் கரை கலங்கரை விளக்கம் இரண்டு மடங்கு பெரியது. போர்ட் பிளேர் துறைமுகத்தின் நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு கரை கலங்கரை விளக்கத்திலிருந்து 12 வினாடிகளுக்கு ஒரு முறை இரண்டு வெள்ளை நிற ஒளி பாய்ச்சப்பட்டு கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது.

வார்ப்பு இரும்பால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கங்கள் மீது வண்ணங்களால் பட்டைகள் வரையப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஹாரியாட் மலையில் அந்தமானின் தலைமை கமிஷனரின் கோடைகால வசிப்பிடம் இருந்தது. அந்தமானிலேயே இரண்டாவது உயரமலையான இதில் இப்போது இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். தென்னை, பனை மரங்கள் சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதி அந்தமான் கடலை நோக்கி காணப்படுகிறது.

அதன் முனையில் 72மீட்டர் உயரமான வடக்கு கரை கலங்கரை விளக்கத்தையும், தெற்கு கரையில் நிக்கோபர் தீவின் முனையில் உள்ள இந்திரா முனை கலங்கரை விளக்கத்தையும் காண முடிகிறது. இரண்டு கலங்கரை விளக்கங்களும் 1972ல் தான் கட்டப்பட்டன. தெற்கு கரை கலங்கரை விளக்கத்தை விட வடக்குக் கரை கலங்கரை விளக்கம் இரண்டு மடங்கு பெரியது. போர்ட் பிளேர் துறைமுகத்தின் நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு கரை கலங்கரை விளக்கத்திலிருந்து 12 வினாடிகளுக்கு ஒரு முறை இரண்டு வெள்ளை நிற ஒளி பாய்ச்சப்பட்டு கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது. வார்ப்பு இரும்பால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கங்கள் மீது வண்ணங்களால் பட்டைகள் வரையப்பட்டுள்ளன.