
நாம் போட்டோஷாப்பில் படங்களை உருவாக்கும் போது பல்வேறு எஃபெக்ட்களைக் கொண்டு படங்களை வடிவமைப்போம்.உதாரணமாக பில்டர்கள், Blending போன்றவற்றைப் பயன்படுத்தி படத்தின் அழகை மேம்படுத்துவோம்.ஆனால் ஒரே விதமான எஃபெக்ட்கள் பல படங்களுக்கு தேவைப்பட்டால் என்ன செய்வது? ஒவ்வொரு படத்திற்கும் பல முறை தனித்தனியாக செய்து கொண்டிருந்தால் பல மணி நேரங்கள் ஆகும்.இந்த நேரத்தில் உங்களுக்கு உதவுவது தான் Action Palette ஆகும்.
உதாரணமாக ஒரு படத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை பல படங்களுக்கு பொருத்திக்கொள்ள முடியும்.
Action Palette ஐ திறக்க Alt + F9 அல்லது window-> Actions அழுத்தவும்
Actions என்றால் என்ன? போட்டோஷாப்பில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆக்ஷன் தான்.லேயர் உருவாக்குவது, வண்ணம் கொடுப்பது போன்ற செயல்களே ஆகும். இதன் மூலம் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவு செய்து கொண்டு அதை பல முறை எத்தனை படங்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நீங்கள் உருவாக்கிய அதே வரிசையில் (Sequence of Actions) செயல்கள் உருவாக்கப்படும்.இதனால் பல மணிநேரம் மிச்சமாகிறது.


வண்ணத்தை சரி செய்வது,பில்டர் அமைப்புகள், Blending வேலைகள் போன்ற அனைத்தும் பதிவாகும்.தேவையான செயல்களை செய்து முடித்து விட்டு “Stop” பட்டனை அழுத்தவும்.


No comments:
Post a Comment