Friday, August 21, 2020

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:

அருகம்புல்லும் பிள்ளையாரும்
*********************************
சுலபன் என்ற மன்னன் ஜம்பா என்ற தென்னா ட்டு நகரம் ஒன்றை பெருமையுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனும் அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் நகரில் நடைபெறும் கதாகாலட் சேபத்தைக் கேட்கச் செல்வதை வழ க்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு கோயிலில் கதாகாலட்சேபம் நடக்கும் அரங்கி ல் ஏழை அந்தணன் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வறுமையின் கொடுமையினால் குறைந்த அளவு உடையுடனே அவர் காணப்பட்டார். தர்ம நெறியோடும், கருணையுள்ளத்தோடும் அரசாளும் மன்னன் அன்று ஏனோ விதியின் காரணமாக அந்த அந்தணரைப் பார்த்து சிரித்து விட்டார்.

மன்னரின் சிரிப்பால் மேலும் அவமானமடை ந்த அவர் கூனிக்குறுகி அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் போய் நின்றார். அந்த நிலை மன்னனை மேலும் சிரிப்புக் குள்ளாக்கியது. அதைக் கண்டு அந்தணருக்குக் கோபம் தலைக்கேறியது.

மன்னரைப் பார்த்து, 'ஏழ்மையில் வாழும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவு கெட்ட அரசே ! பல்லைக்காட்டி என்னைக் கேலி செய்ததால் நீ ஒரு எருதாக மாறக் கடவாய்' என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணம் மன்னன் எருதாக உருமாறினான்.

தன் கணவர் எருதாக மாறியதைக் கண்ட அரசி அந்தணன் மீது கோபமுற்று, மன்னர் என்றும் பாராமல் கோபமுற்று 'என் கணவரை எருதாக மாறிட சாபம் கொடுத்த நீ பொதி சுமக்கும் ஒரு கழுதையாக மாறக் கடவாய்..' என்று சபித்தாள். அந்தணர் அடுத்த கணம் கழுதையாக மாறினார்.

கழுதையாக மாறினாலும் நெறி தவறாது அந்தணன் வாழ்ந்ததால் அவர் மீண்டும் அரசி யாரை புல் சுமக்கும் பெண்ணாக சபிக்கவே அவ்வாறே அரசியாரும் உருமாறினாள்.

புல் சேகரித்துக் கொண்டு ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது காற்றும் மழையும் வேகத்தோடு துவங்கியது. மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆலயத்துக்குள் நுழை ந்தாள் புல் சுமக்கும் பெண்ணாகிய அரசி.

அதே கோயிலுக்குள் அடைக்கலம் பெற கழுதையான அந்தணரும், எருதாக மாறிய மன்னனும் நுழைந்தார்கள். புல்லைத் தின்று பார்ப்போமே என்றெண்ணி இருவரும் புல் கட்டை வாயைக் கொண்டு இருவருமாக அவிழ்த்தார்கள். சுவைத்து சற்று உண்டனர்.

அப்போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. புல் கட்டிலிருந்த அருகம்புல் கோயிலில் அரு ளாட்சி புரியும் விநாயகர் மீது பரந்து சென்று விழுந்தது. அன்று விநாயக சதுர்த்தியாதலால் விநாயகர் சன்னதி திறந்திருந்தது. பெருங்கூ ட்டமும் சன்னதிக்கு முன்னால் இருந்தது.

பூஜை நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த கழுதையையும், எருதையும் மக்கள் விரட்டி அடித்தனர். புல்கட்டையும் அவை இழுத்துச் சென்றதால் புல் சுமக்கும் பெண்ணும் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன்னைச் சுற்றி சுற்றி வந்ததாலும், அவர்கள் மூலம் அருகம்புல் தன் மீது விழுந்ததாலும் விநாயகர் பேரானந்தம் கொண்டார்.

அம்மூவருக்கும் சுய உருவத்தை மீண்டும் அளி த்து அழகிய வாகனத்தில் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். விநாயகருக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைக்க வேண்டி ய அவசியமில்லை. எல்லா இடத்திலும் கிடை த்திடும் அருகம்புல்லினால் மனதார அர்ச்ச னை செய்தால் போதும், எந்தத் தீவினையும் நீங்கி விடும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறது இக்கதை..

No comments:

Post a Comment