அசீசி என்பது இந்தியாவில் கேரளா மாநிலத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, வாழ்க்கையில் உற்றார், உறவினர்களை இழந்து தெருவோரங்களில் வாழ்ந்து வருபவர்களையும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அசீசி அன்பு இல்லங்கள் எனும் பெயரில் சிறப்பு இல்லங்களை அமைத்து வருகின்றன.
அசீசி இல்லங்கள்
அசீசி தொண்டு நிறுவனம் மூலம் கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்திலும் அசீசி இல்லங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கேரளா இல்லங்கள்
கேரளா மாநிலத்தில் கீழ்க்காணும் ஊர்களில் அசீசி அன்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டப்பனா
மூலமாற்றம்
குமுளி,
தோப்புராங்குடி
நரியம்பாரா
நெடுங்கண்டம்
கட்டப்பனா இல்லம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனா எனும் ஊரில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 125 பயனாளர்கள் உள்ளனர்.
மூலமாற்றம் இல்லம்
கேரள மாநிலத்தில் உள்ள மூலமாற்றம் எனும் ஊரில் 1998 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100 பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாலியல் பலாத்காரத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குமுளி இல்லம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.
தோப்புராங்குடி இல்லம்
கேரள மாநிலம் தோப்புராங்குடி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தில் 50க்கும் அதிகமான குழந்தைப் பயனாளர்கள் உள்ளனர்.
நரியம்பாரா இல்லம்
கேரள மாநிலம் நரியம்பாரா எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் பல பயனாளர்கள் உள்ளனர்.
நெடுங்கண்டம் இல்லம்
கேரள மாநிலம் நெடுங்கண்டம் எனும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 100க்கும் அதிகமான ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பயனாளர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு இல்லம்
தமிழ்நாட்டில் கீழ்க்காணும் ஊரில் அசீசி அன்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
வடபுதுப்பட்டி தேனி
வடபுதுப்பட்டி இல்லம்தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 50க்கும் அதிகமான மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்ற பயனாளர்கள் உள்ளனர்.
நன்றி -Wikipedia
No comments:
Post a Comment