| எண் | வினா | விடை |
| 41. | நாற்கவிராச நம்பி எழுதிய நூல்? | அகப்பொருள் |
| 42. | மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்? | பேகன் |
| 43. | முற்றியலுகரத்தில் முடியும் எண்? | 7 |
| 44. | பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது? | முல்லைப் பாட்டு |
| 45. | எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்? | தன்வினை |
| 46. | பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு? | யாதும் ஊரே யாவரும் கேளீர் |
| 47. | ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது? | உவமையணி |
| 48. | ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்? | திருமூலர் |
| 49. | ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்? | தேசிக விநாயகம் பிள்ளை |
| 50. | வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்? | ”ட” கர மெய் |
| 51. | செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? | மோனை |
| 52. | ”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? | சத்திமுத்தப் புலவர் |
| 53. | ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? | நேர் |
| 54. | வெண்பா எத்தனை வகைப்படும்? | 5 |
| 55. | அடியின் வகை? | 5 |
| 56. | வஞ்சிப்பாவின் ஓசை? | தூங்கலோசை |
| 57. | இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? | 3 |
| 58. | இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது? | இலக்கணப்போலி |
| 59. | சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது? | இடக்கரடக்கல் |
| 60. | வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு? | பலாச்சுளை |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment