Friday, November 29, 2013

சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமானது

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்று வட்டத்தை நெருங்கியதும் அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை. ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது. சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அனேகமாக அது சிதறுண்டு போயிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது. தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது. நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன். மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம்.

ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம். தப்பிப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது. ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 45

• பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?

- ஆடம் ஸ்மித்

• ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?

- ஜப்பான்

• ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?

- ரஷ்யா

• காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?

- பென்சிலின்

• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?

- மலையாளம்

• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?

- பாரமிக் அமிலம்

• தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?

- கார்ல் மார்க்ஸ்

• வௌவால் ஏற்படுத்தும் ஒலி?

- மீயொலி

• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?

- அரிஸ்டாட்டில்

• வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

- கி.பி 1890

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 44

1. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

2. நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.

3. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.

4. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.

5. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.

6. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

7. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்

8. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.

9. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

Monday, November 4, 2013

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 43

* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
* மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
* மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ
* உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்
* மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்
* உடலின் மெல்லிய சருமம் கண் இமை
* மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி
* ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
* மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
* நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
* மனித நாக்கின் நீளம் 10 செ. மீ
* ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .
* மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
* நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
* நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
* நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
* நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
* நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
* நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
* நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

எலும்புகள்
* நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன!
* நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

தோல்
உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை
நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது..

ஈரல்
நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

* மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது

நா‌க்கு
ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.

நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

* 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

விரல் நகம்
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 42

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்;

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் சில நிமிடங்கள்.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 41

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா
12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி