Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - எச்சம் (பெயரெச்சம், வினையெச்சம்)

டி.என்.பி.எஸ்.சி - எச்சம் (பெயரெச்சம், வினையெச்சம்)



எச்சம் (பெயரெச்சம், வினையெச்சம்)
எச்சம்
பெயரெச்சம்
பெயரைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம்.
 பெயரெச்சம் கால வகையால் மூன்று வகைப்படும்.
    இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த மாணவன்
    நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற மாணவன்
    எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் மாணவன்
  இது தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
தெரிநிலை பெயரெச்சம் :
*  காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.
  பெயரெச்ச வாய்ப்பாடுகள் செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் வரும். இவை பால்காட்டும் விகுதியுடன் செய்பவன் முதலிய ஆறும் எஞ்சி நிற்கும்.
இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
(.கா.,) உண்ட அருண்


செய்பவன்    -   அருண்
கருவி    -   தட்டு 
நிலம்    -   வீடு
செயல்    -   உண்ணுதல்
காலம்    -   இறந்த காலம்
செய்பொருள்    -   சோறு.




*    இதே போல் உண்கின்ற அருண், உண்ணும் அருண் என்னும் பெயரெச்சங்களுடன் பொருத்திக் காணலாம். மேலும், உடன்பாடு - எதிர்மறை என்பதையும் அறியலாம்.
(.கா.,)
உடன்பாடு  - உண்ட அருண்,
எதிர்மறை  - உண்ணாத அருண்
குறிப்பு பெயரெச்சம் :
          காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
          .கா:
* நல்ல மாணவன்
* அழகிய மலர்
நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.
வினையெச்சம்
Ø  வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்.
Ø  இது கால வகையால் மூன்று வகைப்படும்.
o    இறந்தகால வினையெச்சம் - ஓடி வந்தான்
o    நிகழ்கால வினையெச்சம் - ஓடி வருகின்றான்
o    எதிர்கால வினையெச்சம் - ஓடி வருவான்
குறிப்பு : இவைகர, ‘கர, மற்றும்கர இறுதியுடன் ஒரு எச்சச்சொல்லில் நிற்கும்.
  வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என இருவகைப்படும்.
தெரிநிலை வினையெச்சம் :
  காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்
    (.கா) படித்துத் தேறினான்


குறிப்பு வினையெச்சம் :
  காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்
   (.கா) மெல்ல நடந்தான்
முற்றெச்சம் :
ஒரு வினைமுற்று, வேறொரு வினைமுற்றைக் கொண்டுமுடியும் பொழுது எச்சப்பொருள்தரும். இதுமுற்றெச்சம்எனப்படும்.
    (.கா) கற்றனன் மகிழ்ந்தான் - (கற்று மகிழ்ந்தான்)

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்
 



No comments:

Post a Comment