Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - ஐம்பெருங்காப்பியங்கள்



டி.என்.பி.எஸ்.சி - ஐம்பெருங்காப்பியங்கள்


அறம், பொருள், இன்பம் ,வீடு என நான்கையும் எடுத்துரைப்பது
ஐம்பெருங்காப்பியங்களாகும்.

          நூல் 

        நூலாசிரியர்
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள்
மணிமேகலை
சீத்தலைச்சாத்தனார்
சீவகசிந்தாமணி
திருத்தக்க தேவர்
வளையாபதி
தெரியவில்லை
குண்டலகேசி
நாதகுத்தனார்

1.சிலப்பதிகாரம்

       சிலம்பு + அதிகாரம்.தமிழில் தோன்றிய முதல் காப்பியம் ஐம்பெருங்காப்பியங்களுள் தொன்மையானது. மன்னனை தலைமையாகக் கொள்ளாமல் மக்களை தலைமையாகக் கொண்ட நூல்.

இதன் வேறுபெயர்கள்:

         
புரட்சிகாப்பியம். முதற்காப்பியம். முத்தமிழ்க் காப்பியம். நாடக காப்பி
யம், குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், ஒற்றுமை காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக் காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்:

              1.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
              2.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
              3.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்என்றார் பாரதியார்.
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்என்றார்
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
"
சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே'' சிறந்தது என்றார்
.வே.சாமிநாத ஐயர்.

இது 3 காண்டங்கள்  30 காதைகளை உடையது.

                  
புகார் காண்டம் - 10 காதைகள்
                  
மதுரைக் காண்டம் - 13 காதைகள்
                  
வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்

 
சேரன் செங்குட்டுவனின் தம்பியே இளங்கோவடிகள்
கண்ணகியின் தந்தை - மாநாய்க்கன்
கோவலனின் தந்தை - மாசாத்துவான்

மூன்று நகரங்களின் கதை என்றும் கூறுவர்.

சிலப்பதிகாரம், மணிமேகலை என இரண்டிலும் இந்திரவிழா
குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரவிழாவானது 28 நாட்கள் நடைபெறும்.
2. மணிமேகலை

        கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை மணிமேகலையின் துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல்.

வேறு பெயர் - மணிமேகலை துறவு.

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெலாம்
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே
ஆசிரியர் குறிப்பு

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். கடைச்சங்க புலவர்களுள் ஒருவர்.

தண்டமிழ் ஆசான்எனப்படுவார்.

சாத்தான் நன்னூல் புலவன்என
இளங்கோவடிகளால் புகழப்பெற்றவர்.
3.சீவக சிந்தாமணி

     விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்.

இயற்றியவர்:திருத்தக்கத் தேவர்

வேறு பெயர் : மணநூல்

     
இதில் வரும் சீவகன் எட்டு மகளிரை மணந்தான்.காப்பியம் முழுவதும் திருமணம் பற்றிய செளிணிதிகள் இடம்பெற்றதால்மணநூல்எனப்பட்டது.
4.குண்டலகேசி

     
இதன் ஆசிரியர் நாதகுத்தனார்.இது பௌத்த மத காப்பியம். இதன் கதைதேர்காதைஎன்றபௌத்த நூலில் காணப்படுகிறது.
5.வளையாபதி

    
வளையாபதிகவியழகு நிறைந்த நூல்எனப் பெயர் பெற்றது.இதன் ஆசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.
 

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்

No comments:

Post a Comment