Saturday, August 23, 2014

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்:

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது.
முள்ளங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.
குடல் வாதம், நீர்க்கோவை, காசம் ஆகியவை நீங்கும். பசியை உண்டாக்கும். தொண்டைக் கம்மல், மூலரோகம், கல்லடைப்பு, அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
முள்ளங்கிச்சாறு காலை, மாலை அருந்தினால் – சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.
சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதைமூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.
சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது.
சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.
பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.
இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும்.
மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும்.
நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது. முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது
நன்றி :-http://www.vivekabharathi.in/

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை.

அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும்.

வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...
{படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.}