Tuesday, July 22, 2014

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோமா...!!!



சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

* 108
சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

* Armoured Vehicles And Depot of India
என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

* chrome leather factory
இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...

* 17,18
ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

*
மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...

*
தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...

*
சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

*
முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...

*
உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...

*
சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...

*
கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...

*
சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...

*
பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...

*
சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...

*
நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

*
புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...

*
அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...

* 17
ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...

*
முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...

*
மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

*
பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

*
சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

*
திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

*
பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

*
தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

*
வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது..!

மறைக்கப்பட்ட வரலாறுகள்

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்
பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும்
தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை' உற்பத்தி
செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு
ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில்
தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.

இதற்கிடையே நண்பர்கள் மூலம் டச்சு நாட்டின் மிக முக்கிய ஆய்வகத்தில் இவரது
மூலிகை எரிபொருள் சோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அமெரிக்காவில் காப்பு
ரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார், ராமர் பிள்ளை. அந்தக் காப்புரிமையைப் பெறக்
காத்திருக்கும் ராமர்பிள்ளையை சென்னை சூளைமேட்டில் சந்தித்துப் பேசினோம்.
'மூலிகை எரிபொருள் ஃபார்முலா, மூலப்பொருட்களைத் தெரிவிக்கவேண்டும் என்று எனக்கு
ஏகப்பட்ட நெருக்கடிகள் கழுத்தை நெரித்தன. என் அம்மா, தம்பி,தங்கைகளையும் கூட அவர்கள் நிம்மதியாக விடவில்லை. என் மீது மோசடி வழக்கு, சகோதரர் மீது கொலைவழக்குப் போட்டனர். ஒரு தங்கையின் கணவரையும் கொலை செய்தனர்.
இவ்வளவையும் தாண்டி இன்று நண்பர்கள் உதவியால், எனது கண்டுபிடிப்பு உலக அரங்கில்
அங்கீகாரத்துக்குக் காத்திருக்கிறது...'' என்று குதூகல மாகப் பேசிய ராமர்
பிள்ளை, தொடர்ந்து...
நன்றி : ஜூனியர் விகடன்
''என் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்ட டச்சு நாட்டில் உள்ள டேனிஷ்
டெக்னாலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள், நேரடியாக சென்னைக்கே வந்தார்கள்.
அவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக்
காட்டினேன். மூலிகை எரிபொருள் உருவாக்குவதற்கு முன்னர் அந்தத் தண்ணீரை
சோதித்தார்கள். அது எரியவில்லை. பின்னர் நான் மூலிகை பெட்ரோல் செய்து
காட்டியதும், அதை பரிசோதித்த அவர்கள், தண்ணீர்தான் எரிபொருளாக மாறியுள்ளது
என்பதை ஒப்புக்கொண்டனர்.
அதைத் தங்கள் ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்து எனக்கு ஆய்வறிக்கை
அளித்தவர்கள், 'உங்கள் கண்டுபிடிப்பால், மிகக் குறைந்த செலவில் எரிபொருளை
உருவாக்க முடியும். இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை
செய்துள்ளீர்கள்!' என்று எனக்குக் கடிதம் அனுப்பினர் (நம்மிடம் அந்தக் கடிதத்தை
காட்டுகிறார்). மேலும், 'மற்ற மாற்று எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில்,
என்னுடையதுதான் மிகக் குறைந்த செலவில் பெட்ரோல் தயாரிக்கக்கூடியது' என்றும்
தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில்தான் காப்புரிமை பெற, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'வேர்ல்ட்
இன்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ஆர்கனைசேஷ'னுக்கு (ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு
அந்தஸ்து பெற்றது) விண்ணப்பித்தேன். அவர்களும் இந்த எரிபொருளால்
இயந்திரத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று ஆய்வு செய்து, அதைத் தங்கள்
ஜர்னலில் பதிப்பித்துள்ளனர். இந்தப் பதிப்பு எல்லா நாடு களிலும்
வெளியிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய காப்புரிமை அதிகாரிகளும் என்னைத் தொடர்புகொண்டார்கள். உலக
நாடுகள் ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், இந்தியாவும் காப்புரிமை தரத்
தயாராக உள்ளதாக வாய்மொழியாகச் சொன்னார்கள். அதோடு, பல்வேறு நாடுகளில் இருந்தும்
என்னைப் பற்றி தங்கள் தூதரகம் வாயிலாக விசாரித்துத் தொடர்பு கொள்கிறவர்கள்,
'மூலிகை எரிபொருள் தயாரிப்பு ஃபார்முலாவை தர வேண்டாம், உங்களுக்குத் தேவை
யானவற்றைச் செய்து தருகிறோம், நீங்களே செய்து கொடுங்கள்' என்றும்
கூறுகிறார்கள். ஆனால், காப்புரிமை முறைப்படி வரட்டும் என்று காத்திருக்கிறேன்.
கலப்பட பெட்ரோலை வேறு ஒரு இடத்தில் இருந்து பெற்று, விநியோகித்ததாக என் மீது
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது.
ஆனால், டச்சு நாட்டில் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர்கள்
மேற்கொண்ட சோதனையை கோர்ட்டில் காட்டினோம். அப்போது, 'ஐரோப்பிய நாடுகளின் தர
அடிப்படையில் என்னுடைய மூலிகை எரிபொருளை பரிசோதித்து ஆய்வறிக்கை கொடுத்
துள்ளனர். அதில் வெறும் நான்கு சோதனையைக்கூட நடத்தும் வசதி இந்தியாவில் இல்லை.
பிறகு எப்படி இது உண்மையில்லை?' என்று அரசு தரப்பைக் கேட்டபோது, அவர்களால்
பதில் கூற முடியவில்லை.
இந்த 10 ஆண்டுகளில் என் மூலிகை எரிபொருளை நவீனப்படுத்தியுள்ளேன். முன்பு 16
ரூபாய்க்கு மூலிகை எரிபொருளைத் தயார் செய்தேன். இப்போது வெறும் எட்டு
ரூபாய்க்கே லட்சக்கணக்கான லிட்டர்களை தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த
மூலிகை எரிபொருள் நிச்சயம் ஐரோப்பிய யூனியன் தரத்தில் இருக்கும்.
13 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னை, டெல்லி,
ஹைதராபாத்தில் நான் நடத்திய ஆய்வுகள், தோல்வியடைந்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.
அப்போது அதிகாரிகள், 'ஒரு குழாயில் பெட்ரோலை மெழுகால் அடைத்து வைத்ததாகவும்,
தண்ணீர் வெப்பநிலையில் மெழுகு உருகியபோது பெட்ரோல் கலந்ததாகவும்' சொன்னார்கள்.
டச்சு விஞ்ஞானிகளிடம் இதைக் கூறியபோது, 'சமையல் உப்பைக்கொண்டு தண்ணீரை அடைத்து
வைக்க முடியும் என்பதுபோல அது ஒரு தவறான வாதம்' என்றனர்.
நான் இந்திய அரசிடம் எனது கண்டுபிடிப்புக்கு பாதுகாப்புதான் கேட்டேன்.
பாதுகாப்பு அளித்தால், முழுக் கண்டுபிடிப்பையும் தருவதாகக்கூறினேன். இப்போது
காப்புரிமைக்காக என் முழுக் கண்டுபிடிப்பையும் சர்வதேச அமைப்பிடம் கொடுத்துள்ளேன். எனது வழக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. தீர்ப்பு வரும்போது மக்களுக்கு நிஜம் புரியும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவன் எப்படி
இப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் தான் நம் நாட்டில் மெத்தப்
படித்தவர்களிடம் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டம், தொல்லைகள்,
அவமானங்கள் எல்லாம் பட்டேன். ஆனால், எனது கண்டுபிடிப்பை எதிர்காலத்தில் ஒவ்வொரு
மனிதனும் பயன்படுத்துவான்!'' என்கிறார் ராமர் பிள்ளை.
அடுத்தடுத்து பல சர்சைகளை சந்தித்த மனிதர், இப்போது சர்வதேச அளவில் சவாலுக்குப்
போயிருக்கிறார்... பார்க்கலாம்... நல்லது நடந்தால் நாட்டுக்குப் பெருமை!
-- பா.பிரவீன்குமார்
-------------------------------------------------------------
குறிப்பு :
தானிஷ் பல்கலைகழகம் இவரின் ஆராய்ச்சியை உறுதிபடுத்தி குறைந்த விலையில் மாற்று எரிபொருள் தயாரிக்க முடியும் என்று சான்றிதல் வழங்கியுள்ளது
மேலும் இவர் இதை மூலிகை பெட்ரோல் என்று கூறவில்லை ,மாற்று எரிபொருள் என்று தான் சொன்னார் ,ஊடகங்கள் வைத்த பெயர் தான் மூலிகை பெட்ரோல் ,கல்வி அறிவு இல்லாததால் அவரால் போராட முடியவில்லை

Wednesday, July 2, 2014

முனியாண்டி விலாஸ் - வரலாறு




முதன் முதலில் மா.வெ.சு. சுப்பாநாயுடு அவர்கள் வறட்சியின் காரணமாக வயிற்றுப்பாட்டுக்கே உணவின்றிக் கஷ்டப்படும்போது குறைந்த விலையில் வயிறாரச் சாப்பாடு போட்டால் எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார். சுப்பா நாயுடுவிற்குப் பழக்கப்பட்ட காரைக்குடிப் பகுதியில் வடக்கம்பட்டி கிராமக் காவல் தெய்வம் முனியாண்டி பெயரில் முதல் உணவக விடுதியை 1935 வாக்கில் ஆரம்பித்தார். சுப்பா நாயுடு இப்பெயரில் உணவகம் தொடங்குவதற்கு முன்பாகவே ரங்கவிலாஸ் என்ற பெயரில் வெலம நாயுடு சமூகத்தவர் 1925ஆம் ஆண்டுவாக்கில் அசைவ ஹோட்டல் நடத்தியுள்ளனர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட ரெட்டியார், நாயுடு, ராஜு போன்றவர்கள் தங்களது வியாபாரத் தலத்தை விலாஸ்என்ற பின்னொட்டுடன் குறிப்பிடுவர். விலாஸ் என்ற சொற் பிரயோகம் விலாசம் என்ற மராட்டிய மூலச் சொல்லிலிருந்து மருவியது. விலாசம் என்றால் நாடகத்தனத்தைக் குறிக்கும் சொல். விலாஸ் என்பது அனைத்துத் தரப்பட்ட மக்களும் சங்கமிக்கும் இடமாகும்.
முதலாவதாக சுப்பாநாயுடு முனியாண்டி விலாஸ் ஹோட்டலை ஆரம்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்து குடும்பத் தொழிலாக ஹோட்டலை நடத்தினார். சுப்பாநாயுடுவைத் தொடர்ந்து விழுப்புரம் வெங்கடாசலம் நாயுடு, புதுக்கோட்டை அயோத்தி நாயுடு, பாண்டிச்சேரி சீனிவாசன் நாயுடு, திருவாரூர் ரெங்கசாமி நாயுடு, பட்டுக்கோட்டை அழகர்சாமி நாயுடு, திருச்சி அய்யப்பன் நாயுடு, மன்னார்குடி அழகர்சாமி நாயுடு, திருத்துறைப்பூண்டி சுருளி நாராயணசாமி நாயுடு, கும்பகோணம் அழகர்சாமி நாயுடு, காஞ்சிபுரம் M.S.R. நாயுடு, புதுக்கோட்டை திருவேங்கடம் நாயுடு, தாராபுரம் கிருஷ்ணன் நாயுடு மற்றும் ராமசாமி ரெட்டியார் காரைக்குடியில் உணவகத்தை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக ரெட்டியார் சமூகத்தினர் நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, அரக்கோணம், சென்னை ஆகிய இடங்களில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்கள். வடக்கம்பட்டி கிராமத்திலிருந்து வேலை பார்க்கச் சென்றவர்கள் தொழிலை நன்றாகக் கற்றுக்கொண்டு வேலை பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் உணவகங்களை ஆரம்பித்தார்கள்.
இன்றைக்குத் தமிழகம் முழுவதும் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரிட்டுக் கடை நடத்துகிற இன்றைய தலைமுறைகளுக்கு முன்னோடிகள் சுப்பாநாயுடு, ராமசாமி ரெட்டியார் ஆகிய இருவரே.

சிக்கன் 65 பெயர் காரணம்



சென்னை: 1965-ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில் தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானதாம். அதன் பிறகுதான் அது தமிழகம் முழுவதும் பரவியதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு பலமாக இருக்கவே குறுகிய காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி விட்டது.  தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம்.புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

65 பிரபலமானதைத் தொடர்ந்து 1978ல் சிக்கன் 78, 82ல் சிக்கன் 82, 1990-ம் ஆண்டு சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர். நாளிதழ்களில் விளம்பரம் அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி. இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும் பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டாராம்.

இன்னொரு காரணம்..!

சிக்கன் 65 என்ற பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப் பட்டியல் கார்டில் எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.

தமிழ் தெரியாததால் அப்போது உணவகத்திற்கு வரும் இந்தி மட்டுமே பேசப் படிக்கத் தெரிந்த வட மாநில ராணுவ வீரர்களுக்கு சிக்கன் 65 பெயரைச் சொல்லத் தெரியாமல், நம்பர் 65 என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். காலப் போக்கில் அது சிக்கன் 65 என்று மாறி விட்டதாம்.எது எப்படியோ புஹாரியிலிருந்து புறப்பட்டு இன்று முனியாண்டி விலாஸ் வரைக்கும் இந்த சிக்கன் 65 நீக்கமற நிறைந்திருக்கிறது.