Monday, June 29, 2015

அகரத்தை கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
" இதுவே தமிழின் சிறப்பு.."
++++++++++++++++++++++++++++++
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

Tuesday, June 23, 2015

குணம் சொல்லும் கை! உள்ளங்கையில் சில உண்மைகள்

கையின் மேல் பகுதியை வைத்து, கை அமைப்பைப் பாகுபடுத்தி, பஞ்சாங்குலி சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட சில உண்மைகளைப் பார்த்தோம். இப்போது உள்ளங்கை அமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.
உள்ளங்கையின் நீள, அகலங்கள், தடிப்பு, மென்மைத் தன்மை, நிறம் ஆகியவற்றை வைத்து சில விபரங்களை அறியலாம்.
பெருவிரல் நுனி முதல் மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி, உள்ளங்கை நீளம் என்பதைக் குறிக்கும். கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையிலும் உள்ள இடைவெளி, உள்ளங்கையின் அகலத்தைக் குறிக்கும். இந்த அகலத்தை வைத்து கை அமைப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
மிக அகலமான உள்ளங்கை: நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியையும் அபவாதத்தையும் ஏற்கும் நிலை ஏற்படும்.
அகலமான கை: உள்ளங்கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். இவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
குறுகலான கை: மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். எல்லோரையும் சந்தேகிப்பவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.
உள்ளங்கையைத் தொட்டுப் பார்த்து, அதன் கடினத்தன்மை, மென்மைத்தன்மையை வைத்து, சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். இதன்படி உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
மென்மையான உள்ளங்கை: உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இதுபோல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்.
கடினமான உள்ளங்கை: உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிற்றின்பத் தில் நாட்டம் இருக்கும். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.
மிக பலவீனமான அல்லது மிகக் கடினமான உள்ளங்கை: மேற்கூறிய இரண்டு பாகுபாடுகள் தவிர, மிக பலவீனமான உள்ளங்கையோ மிகவும் கடினமான உள்ளங்கையோ இருந்தால், அவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். கோழைகள், கொடியவர்கள், குற்றவாளிகள் ஆகியோருக்கு இத்தகைய உள்ளங்கை அமைப்பு இருக்கும்.
மென்மைக்கும், கடினத்துக்கும் இடைப்பட்டது: இப்படியான உள்ளங்கை அமைப்பு பலருக்கு இருக்கும். இவர்கள் புத்தி, பலம் இரண்டையும் கொண்டு பிழைப்பவர்கள். கட்டுப்பாடு மிகுந்தவர்கள். எடுத்த காரியத்தை தாமாகவே விரைந்து  முடிப்பார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள்.
இனி, உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து சில தன்மைகளைப் பார்க்கலாம்.
ஒருவர் கறுப்பாகவோ, சிவப்பாகவோ இருக்கலாம். அவர்கள் உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது. உடலில் உள்ள பல்வேறு ரத்த நாளங்கள், தந்துகிகள் ஆகியவை உள்ளங்கையில் சிலந்தி வலை போல பின்னியுள்ளன. ரத்தம் எல்லோருக்குமே சிவப்பு தான். அதை வைத்தே இந்தப் பிரிவு அமைகிறது. மேல்தோல் கறுப்பாக உள்ளவர்களின் உள்ளங்கையில் சிவப்பு என்பது சற்றுக் கருஞ்சிவப்பாக இருக்கலாம். அதை வைத்துப் பிரிவுகளை நிர்ணயிக்க வேண்டும்.
ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை:  இந்த நிறம் கொண்டவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்கள். கடுமையான சுபாவம்  உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்வார்கள். அகம்பாவிகள்.
சிவப்பு நிற உள்ளங்கை: குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை உடையவர்கள், கோபதாபங்கள் கொண்டவராக இருப்பார். ஆனால், பற்றும் பாசமும் உடையவர்கள். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், அவசரக்காரர்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள்.
இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை: ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். நம்பத்தகுந்தவர்கள்.
மஞ்சள் நிற உள்ளங்கை: இவர்கள், ஆரோக்கியக் குறைவு, பயம், பீதி உள்ளவர்கள். மனோபலம் இல்லாதவர்கள். பலவீனமானவர்கள். அறிவாற்றல் குறைந்தவர்கள். சோம்பேறிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள். எவரையும் நம்பாதவர்கள், தோல்வியும் துயரமும் வாழ்க்கையில் கொண்டவர்கள்.
அடுத்து, விரல்கள், நகங்களின் அமைப்பை வைத்து, கையை பாகுபடுத்தும் விபரங்களைக் காண்போம்.
கைகளில் விரல்களின் அமைப்பும், நகங்களின் அமைப்பும்கூட ஒருவருடைய குணாதிசயங்களைத் தெரிவித்துவிடும் என்கிறது பஞ்சாங்குலி சாஸ்திரம். நகத்தை நீளமாக வளர்த்தாலும் சரி, குட்டையாக வெட்டிக் கொண்டாலும் சரி, நகங்கள் அமைவதற்காக விரல்களின் மேல் அமைந்துள்ள பகுதியின் வடிவத்தைப் பொறுத்தே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. ஒருவரது கைகளைப் பரிசீலிக்கும் போது நகங்களையும், நகக் கண்களையும் கூடச் சோதிக்க வேண்டும். மனித உடலில் உற்பத்தி யாகும் காந்த சக்தியானது நகக்கண்கள் மூலமே வெளிப்படுகின்றன. வெளியில் உள்ள காந்த சக்தியும் நகக் கண்கள் மூலமே ஈர்க்கப்படுகின்றன. இந்த சக்தியைப் பாதுகாக்கும் மூடியாக, நகங்கள் உதவுகின்றன.
சிலர் மனக்கலக்கமாக இருக்கும்போதும், சந்திக்கும் போதும் நகத்தைக் கடிப்பதற்குக் காரணம், அந்த காந்த சக்தியை நெருடி, பலத்தை பெருக்குவதற்குத்தான். அல்லது, தன்னை சமாதானப்படுத்திக் கொள்வதற்குத்தான்.
மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் முதலானவற்றில் கையிலுள்ள நகக்கண்கள் மூலமும், விரல் நுனி மூலமும், காந்த அலைகளைச் செலுத்தித்தான் ஒருவரை ஹிப்னாடிஸ நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். மேலும், நகங்கள் நல்ல மின்கடத்திகள், சூழ்நிலையில் உள்ள மின்சக்திகளை உடலில் கடத்தி, உடலின் சக்தியை சமநிலைப்படுத்துவது நகமும், நகக்கண்களும், விரல் நுனிகளுமேயாகும்.
நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அழகாக வைத்துக் கொள்வதும், நகக் கண்களில் அழுக்கு படியாமல் வைத்திருப்பதும் நல்ல ஆரோக்கியமான அறிகுறி.
நகங்களில் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது, வாழ்க்கையில் ஏற்படும் திடீர் முன்னேற்றங்களைக் கெடுக்கும். பல்வேறு விதமான நக அமைப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. நகக்கண்கள் என்று சொல்லப்படும் இவற்றின் வடிவமைப்பையும் அதற்கேற்ற தன்மையையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.
மிகச் சிறியது: குறுகிய மனப்பான்மை, சுயநலம் கொண்டவர்கள்.
மிகக் குறுகிய, வெளிறிய தன்மை: சந்தர்ப்பவாதிகள். காரியவாதிகள். நம்ப முடியாதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். பிறரை நம்பாதவர்கள்.
சிறிய, செவ்வக வடிவம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள். பயந்த சுபாவக்காரர்கள்.
சிறிய மிக அகலமான வடிவம்: பிடிவாதக் காரர்கள். சண்டையிடுகிற குணம் உண்டு்.
கடினமான, அகலக் குறைவான வடிவம்: நினைத்ததைச் சாதிப்பவர்கள். நன்மை தீமை என பகுத்தறியாதவர்கள்.
சதுரமான வடிவம்: கோழைகள். பயந்த சுபாவம் கொண்டவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
சிறிய முக்கோண வடிவம்: மேலே அகலமாகவும், கீழ்ப்பாகம் குவிந்தும் அமைந்த முக்கோண வடிவம் இது. தனித் தன்மை கொண்டவர்கள். தனிமை விரும்பிகள். கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருக்கும்!
நீளத்தைவிட அகலம் அதிகமான வடிவம்: கோபப்படக் கூடியவர்கள். உணர்ச்சிவசப்படுவார்கள்.
முனையில் அர்த்த சந்திர வடிவில் வளைந்த வட்டம்: ஸ்திர புத்தி மிக்கவர்கள்.  விரைவில் முடிவெடுக்கும் தன்மை கொண்டவர்கள்.
விரலை விட சிறியதான நீண்ட வடிவம்: தானாகச் சிந்திக்கும் திறனில்லாதவர்கள். பிறரை நம்பியே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.
நீளமான, மேலே கூராக உள்ள வடிவம்: அழகிலும் வசதியிலும் ஈடுபாடு உடையவர்கள். சிற்றின்பப் பிரியர்கள்.
அகலத்தைவிட நீளம் அதிகமாக இருந்து கீழே வளைந்து மேலேயும் வளைந்த முட்டை வடிவம் :  பூரணமான மனிதர்கள். எதிலும் நிறைவு காண்பவர்கள்.
- தொடரும்...
சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Saturday, June 20, 2015

ஐன்ஸ்டீன் சிந்தனைகளில் இருந்து..

தொழில்நுட்ப மாற்றம் என்பது கொடுமைக்காரன் கையில் கிடைக்கும் கோடாளி.
ஒருவன் பள்ளியில் கத்துகிட்ட மொத்த வித்தையும் மறந்து போய் எஞ்சி இருப்பது கல்வி.
கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான்… ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லையே.
ஈர்ப்பு விசை காதலில் விழுபவர்களுக்கு பொறுப்பாகாது.
உலகில் புரிந்து கொள்ள கடினமான விசயம் ஒன்று உண்டென்றால் அது வருமானவரி.
நான் எதிர்காலத்தை பற்றி நினைப்பதே இல்லை, அதுவே சீக்கிரம் வந்துவிடுகிறதே.
செய்யப்படுபவை முடிந்தவரை எளியதாக இருக்கவேண்டும். ஆனால் எளிமையான தாக இருக்க வேண்டியதில்லை.
ஒருவனின் படைப்பாற்றலின் ரகசியம் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பது அதன் ஆதாரங்கள்(சோர்ஸ்) எப்படி மறைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது.
புதிர்களை விடுவிப்பது என்பது அதை உறுவாக்கிய முறையிலே தான் என்று சொல்ல முடியாது.
அவனுக்கு வெளியே வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவன் வாழ தொடங்குகிறான்.
கணிதம் சிக்கலாக இருப்பாதாக கவலைப் படவேண்டாம், என் திறமை அதில் அதி மோசமானது.
இரண்டு விசயங்கள் எல்லையற்றது. ஒன்று இந்த பிரபஞ்சம், அடுத்து மனித முட்டாள்தனம். பிரபஞ்சத்தை பற்றி உறுதியா தெரியல.
மூன்றாம் உலகப்போரில் எந்தவிதமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுமோ தெரியல, ஆனா
நான்காம் உலகப்போரில் கற்களையும், தடிகளும் பயன்படுத்தப் படலாம்.
மந்தையில் மாசற்ற உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஒரு செம்மறி ஆடாக இருந்தாக வேண்டும்.
ஆபத்து அறியாமல் விபத்தில் இறப்பவனுக்கு “மரண பயம்” அனைத்து பயங்களிலும் நியாயமற்றது
மனநிலை பிறழ்ந்தவர்கள் ஒன்றையே திரும்ப திரும்ப செய்கிறார்கள் ஆனால் விதவிதமான முடிவை எதிர் பார்க்கிறார்கள்.
கற்பனை அறிவைவிட முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை பரந்துபட்டது
நல்ல அரசியல் ஆலோசகரின் வயிறு காலியாக இருக்காது.
புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் ஊள்ள வித்தியாசம். புத்திசாலி எல்லைகளை வகுத்து கொண்டவன்.
ஒவ்வொருவரும் புத்திசாலி தான் எப்போது ? தர்க்கரீதியாக சிந்திக்கும் போது. மீன் மரம் ஏறும் என்பதை அறிந்தவனை விட மீன் வாழ்க்கையை அங்கேயே கழிக்கும் என நினைப்பவன் முட்டாள்.
சார்பியல் (ரிலேட்டிவிட்டி) என்பது ? அழகிய பெண்னை ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது மணி துளி போல ஓடிவிடும் : அதுவே சூடான அடுப்பின் மேல் ஒரு சில மணிதுளி உட்கார்ந்திருப்பது ஒரு மணி நேரம் போன்றது.
திறமைசாலி பிரச்சனையை அணுகுகிறான். அறிவாளி அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறான்.
A = x + y + z இதில் A என்பது வாழ்க்கையின் வெற்றி , x என்பது வேலை, y என்பது விளையாட்டு, z என்பது வாயை மூடி இருப்பது.
ஆண் கடைசிவரை மாற மாட்டோம் என்று பெண்னை கலியாணம் செய்துகொள்கிறான். கடைசிவரை சேர்ந்திருப்போமா…என்று நினைத்த பெண், ஆணை கலியானம் செய்து கொள்கிறாள் . இதில் இருவருமே ஏமாற்றமடைகிறார்கள்.
எதையும் அறிவியல் பூர்வமாக வரையறுத்து விடலாம், ஆனால் அதை உணர முடியாது. பீத்தோவனின் சிம்பொனி அலையின் வேறுபாடு மற்றும் அழுத்ததை பொறுத்தது என்று சொல்வது போல.
தண்டனைக்கு பயந்துதான் ஒழுக்கமானவனாக இருக்கிறான், ஒழுக்கமானவனுக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா அவன் இருக்கிறான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குள்ள உரிமை கொடுக்க வேண்டும்.
தனியொருவனுக்கு, அவனுக்கு தெரியாமல் ஏதும் மறைக்கப் படவில்லை என அரசியல் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.
வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருப்பது வேலை மட்டுமே.
ஆர்வம் எனும் புனிதத்தை இழக்கக் கூடாது.
அனைத்திற்கும் வெளியே இருந்து பார்க்கும் போது கவலை கொள்வதற்கு சின்னதும் பெரியதுமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
காகிதங்களில் எழுதி வைத்துக்கொள்வது நாம் ஞாபகப் படுத்தி கொள்வதற்காகத்தான். மூளை சிந்திபதற்கு மட்டுமே.
சொன்னவர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (3599)

Friday, June 5, 2015

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?

இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக. வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.

அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் இறங்கி கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு அருகில் வரும்போது அவர் கையில் உள்ள விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார். பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100 ரூபாயை தொடும்.

இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.

இது போல நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாள்தோறும் 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை லாபம் அடைவதாக அறிந்தேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த விஷயத்தை பற்றி என் நண்பர் எனக்கு கூறும் வரை எனக்கும் இது தெரியாது. ஆனால் இப்போது நான் இதில் கவனமாக இருக்கிறேன். பெட்ரோல் போடும் நபர் விசையை அழுத்த இப்போது அனுமதிப்பதில்லை. பெட்ரோல் முழுமையாக இறங்கும் முன் விசையை அழுத்த முயற்சித்தால் கூடாது என எச்சரிக்கிறேன்.

தற்போதெல்லாம் என்னை பார்த்தாலே அவர்கள் உஷார் ஆகி விடுகிறார்கள். விசையின் மீது கையை வைப்பதே இல்லை.
விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்

# நட்புக்காக # ப. ஞானவேல்