Saturday, February 13, 2016

ஆமை சொல்லும் இரகசியம் !


தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
 
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!


தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.


இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய
தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.


பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.


உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!


கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!


ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்
பல ரகசியங்கள் இருக்கும் போல!

Thursday, February 11, 2016

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !


பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகிவிடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால்,


திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.


எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.


திருச்செந்தூர் கோயிலைப்பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில்கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்துகொள்ளலாம்.


இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் 
மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்துவிடுகிறது!