Monday, May 30, 2016

சில அதிசய தகவல்கள்.........

* தொடர்ந்து 42 கப்பு காப்பி குடிச்சா நீங்க செத்துப் போவிங்க!
 
* நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!!

* உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில் கழிவறை சீட்டைக் காட்டிலும் 60 மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்!


* மனிதனின் DNA வாழைப்பழத்தின் DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்!


* 70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க)


* ஒரு அன்னாசிப்பழ செடி ஒரு வருஷத்துக்கு ஒரே ஒரு அன்னாசிப் பழத்தைத் தான் காய்க்குமாம்!


* பெங்குவின் பறவைகள் ஒரே இடத்தில் 7 லட்சம் வரை எண்ணிக்கையில் கூடும்.


* கடலில் 30,000 மீன் வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் பூச்சி இனத்திற்கு அடுத்து மீன் இனங்களே அதிகம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.


* விமானத்தில் பறந்தவாறே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன்.


* நைலான் துணியால் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.


* முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சம். இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி!


* பிளாஸ்டிக்கில் கரன்சி நோட்டுகளை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)
24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)
25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)
37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்
43. மிகப் பழமையான அணை – கல்லணை
44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
46. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
✔1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
✔2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் குன்று
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்தியர் மலை
8. ஏலக்காய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
✔3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1. ஜவ்வாது மலை
2. கல்வராயன் மலை
3. சேர்வராயன் மலை
4. பச்சை மலை
5. கொல்லி மலை
6. ஏலகிரி மலை
7. செஞ்சி மலை
8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்
9. பல்லாவரம்
10. வண்டலூர்
✔4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:
1. ஊட்டி
2. கொடைக்கானல்
3. குன்னுர்
4. கோத்தகிரி
5. ஏற்காடு
6. ஏலகிரி
7. வால்பாறை
✔5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:
1. தால்காட் கணவாய்
2. போர்காட் கணவாய்
3. பாலக்காட்டுக் கணவாய்
4. செங்கோட்டைக் கணவாய்
5. ஆரல்வாய்க் கணவாய்
6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)
✔8. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ
✔தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:
குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோவை

Friday, May 20, 2016

புயல் எச்சரிக்கை கூண்டு




பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்.
ஒன்றாம் எண் எச்சரிக்கை என்றால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்று உள்ளூருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அர்த்தம்.
5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போகும் என்றும், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்றும் பொருள்.

Sunday, May 1, 2016

உண்மையில் எதற்காக குளிக்கிறோம்



உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.
வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,
எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.
இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.
நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... ! நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல
உடலை குளிர்விக்க.
இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
நலம் நம் கையில்
ஆறு குளங்களில் குளிக்கும் போது முச்சை அடக்கி இரண்டு காதுகளும் தண்ணிரில் இருக்கும்படி பார்த்துகொண்டு ஒரு இரண்டு நிமிடம் மிதந்து பாருங்கள் கண்வழியாக நம் உடமபு சூடு வெளிவருவதை காணலாம்
Top of Form