Tuesday, April 18, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு TET - 4

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே

ஆசிரியர் தகுதித் தேர்வு TET - 3

Tips For TET Examiners

🐝🐝🐝தேன்கூடு சிறப்பு கட்டுரை🐝🐝🐝

தேர்வர்கள் கேள்வியும் - பதிலும்

டெட் தேர்விற்கு எப்படி படிப்பது டிப்ஸ் கொடுங்க ?

இதற்கான பதில் :
நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட புத்தகம்மட்டுமே.வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல் மிக அவசியம்.உங்கள் வினாத்தாளில் இடம் பெறும் கேள்விகள் அனைத்தும் புத்தகம் தவிர வேறுஎங்கும் இல்லை.

🐝வினா முறை எப்படி இருக்கும்?

பல லட்ச போட்டியளரின் சிந்தனையை சோதித்து திறன் மிக்க தேர்வரை தேர்வு செய்வதேநோக்கம்.எனவே கேள்விகள் அனைத்தும் மனத் திறனை சோதிக்கும் வகையிலே அமையும்.வினா நேரடி எளிய வினாவாக அமையாமல் மறைமுக கடின வினா அமைப்பிலே இடம் பெறும்

🐝எப்படி படித்தால் வெற்றி பெறலாம் ?

* கடின உழைப்பு
* தீவிர பயிற்சி
* அன்றைய பாடபகுதியை அன்றே திருப்புதல் செய்தல்

* தேவையற்ற குறிப்புகளை(material) பயன்படுத்தும் ஆசையை குறைக்கவும்

* ஆழ்ந்து படித்தல், விரைவாக படித்தல் இரண்டும் ஒருங்கே செய்தல் அவசியம்

* முழு புத்தக வாசிப்பு கட்டாயம்

* இதுவே உங்களுக்கு கொடுக்க பட்ட கடைசி வாய்ப்பு . எக்காரணம் கொண்டும் சலிப்புகூடாது.

* முயற்சி அளவை பொறுத்து வெற்றி தூரம் அமையும்

* இணையம் வழி நேர விரயம் குறைக்கவும்

🐝பயம் , பதட்டம் எப்படி போக்குவது?

* நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையையே நம்பாத போது , அரசு எவ்வாறு எதிர்காலதலைமுறை உருவாக்கும் ஆசிரிய பணியை நம்பி தரும்

* எனவே வெற்றி நிச்சயம் என நீங்கள் உங்கள் மனதை தயார்படுத்துங்கள்

* பயம் , பதற்றம் வெற்றியின் எதிரிகள். அவற்றை தவிருங்கள்

🐝கோச்சிங் செல்லலாமா?

அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். திறன் வாய்ந்த சிறப்பான கோச்சிங் கிடைத்தால்செல்லலாம்.

🐝எவ்வளவு நேரம் படிக்கலாம் ?

தூக்கம் | ஓய்வு தவிர்த்து 13 - 15 மணி நேரம் படியுங்கள்

🐝வெற்றி பெற ஒரு டிப்ஸ் ?

தெளிந்த நல்முயற்சி மட்டுமே.

- வாழ்ந்துகளுடன் பிரதீப் - பாபு ப .ஆ .

ஆசிரியர் தகுதித் தேர்வு TET - 2

TNTET - Previous Year TRB Question Paper - Paper I & II

TET - Paper I Previous Year - Original Question Paper

TET - Model Question Paper 2012
https://drive.google.com/…/0BzuERztD6lAcWnlsZF9nQjF0alk/edit

TET - October 2012 - Original Question Paper -
https://drive.google.com/…/0BxQHYGA5s7XENXJmb1RsaHVMeVU/view

TET - October 2012 (SUPPLEMENTARY) - Question Paper - https://drive.google.com/…/0BzuERztD6lAca2lsOThqTWRkVjA/edit

TET - 2013 Exam Question Paper - https://drive.google.com/…/0BzuERztD6lAcWWc0UkFDTHRzMWc/edit

TET - Paper II Previous Year - Original Question Paper

TET - Model Question Paper 2012 - https://drive.google.com/…/0BzuERztD6lAcQ1BVc2oxX2VQSDg/edit

TET - October 2012 - Original Question Paper - https://drive.google.com/…/0BxQHYGA5s7XEOWRDX0NtYkQ4NGs/view

TET - October 2012 (SUPPLEMENTARY) - Question Paper - https://drive.google.com/…/0BzuERztD6lAcTHN5dUNJQkgwWjA/edit

TET - 2013 Exam Question Paper - https://drive.google.com/…/0BzuERztD6lAcRzVuZnlsSnhNLUE/edit

TET - 2014 (Special TET) - Question Paper - https://drive.google.com/…/0BzuERztD6lAcSVhOc1RrRE1vakE/edit


ஆசிரியர் தகுதித் தேர்வு TET - 1

TNTET - 2017 Special Tips: ஒரே மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் படித்து வெற்றி பெறுவது எப்படி?

One Month Schedule to get Success in TNTET - 2017

30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி க்கான டிப்ஸ்..

ஆசிரிய நண்பர்களே நீங்கள் இனி தான் TNTET தேர்விற்கு ஆயத்தம் செய்ய உள்ளீர்களா..

வேலைபார்த்து கொண்டே படிக்க வேண்டுமா?

இதோஉங்களுக்காக டிப்ஸ் மற்றும் காலஅட்டவணை

நீங்கள் செய்ய வேண்டியவைகள் இதோ....

புத்தகங்கள் அனைத்தையும் வரிசை படுத்துங்கள்.

மனதைஒரு நிலை படுத்துங்கள்.

குடும்பம் சார் சுக துக்கம் அனைத்தையும் தூர போடுங்கள்.

இலக்கில் கவனம் செலுத்துங்கள்

பாடவாரியாக படியுங்கள்

புத்தக வாசிப்பு செய்யுங்கள்

படிக்க வேண்டிய நாட்கள் 25.3.17 முதல் 24.4.17 வரை

21.4.17- 28.4.17 திருப்புதல்

படிக்கும் குறைந்த பட்ச நேரம் : 5 மணி நேரம்

படிக்க வேண்டிய பகுதியில் ஏற்ற இறக்கம், துரிதம், ஆழ்நிலை படிப்பு மூன்றும் அவசியம்

:::::::::::::: கால அட்டவணை ::::::::::::::::

தாள்1

பாடப்பகுதி 1முதல் 10 வரை

தமிழ் வகுப்பு 1 to 5 - தேதி மார்ச் 25
தமிழ் வகுப்பு 6 to 7- தேதி மார்ச் 26
தமிழ் வகுப்பு 8 - தேதி மார்ச் 27
தமிழ் வகுப்பு 9- தேதி மார்ச் 28 / 29
தமிழ் வகுப்பு 10 - தேதி மார்ச் 29 / 30

சூழ்நிலையியல் ( அறிவியல் + சமூக அறிவியல் புவியியல் )

சூழ்நிலையியல் வகுப்பு 1 to 5 - தேதி மார்ச் 31
சூழ்நிலையியல் வகுப்பு 6 / 7 - தேதி ஏப்ரல் 1
சூழ்நிலையியல் வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 2
சூழ்நிலையியல் வகுப்பு 9 - தேதி ஏப்ரல் 3
சூழ்நிலையியல் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 4
கூடுதல் நான் ஏப்ரல் 5

கணிதம்

கணிதம் வகுப்பு 1 to 5 - தேதி ஏப்ரல் 6
கணிதம் வகுப்பு 6 - தேதிஏப்ரல் 7
கணிதம் வகுப்பு 7 - தேதிஏப்ரல் 8
கணிதம் வகுப்பு 8- தேதி ஏப்ரல் 9
கணிதம் வகுப்பு 9- தேதி ஏப்ரல் 10
கணிதம் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 11

உளவியல்

பாடவாரியாக 1 நாளுக்கு 2 பாடம் வீதம்
ஏப்ரல் 12 முதல் 16 வரை

ஆங்கிலம்

பாடதிட்ட தலைப்பு வாரியாக பயிற்சி பெறவும்
(4 நாட்கள் ) - ஏப்ரல் 17 - 20

திருப்புதல் 1: ஏப்ரல் 21 to 24
திருப்புதல் 2 : ஏப்ரல் 25 to 28
.............................................................................
தாள்2 ( கணிதம் & அறிவியல் )

பாடப்பகுதி 6 முதல் 10 வரை

தமிழ் வகுப்பு 6 - தேதி மார்ச் 25
தமிழ் வகுப்பு 7- தேதிமார்ச் 26
தமிழ் வகுப்பு 8 - தேதி மார்ச் 27
தமிழ் வகுப்பு 9- தேதி மார்ச் 28 / 29
தமிழ் வகுப்பு 10 - தேதி மார்ச் 29 / 30
தொடர்புடைய செய்யுள் வகுப்பு 11, 12 - தேதி மார்ச் 30

அறிவியல் :

அறிவியல் வகுப்பு 6 - தேதி மார்ச் 31
அறிவியல் வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 1
அறிவியல் வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 2
அறிவியல் வகுப்பு 9 - தேதி ஏப்ரல் 3
அறிவியல் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 4
தொடர்புடைய பகுதி 11, 12 - தேதி ஏப்ரல் 5

கணிதம்

கணிதம் வகுப்பு 6 - தேதி ஏப்ரல் 6
கணிதம் வகுப்பு 7 - தேதிஏப்ரல் 7
கணிதம் வகுப்பு 8 - தேதிஏப்ரல் 8
கணிதம் வகுப்பு 8- தேதி ஏப்ரல் 9
கணிதம் வகுப்பு 9- தேதி ஏப்ரல் 10
கணிதம் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 11

உளவியல்

பாடவாரியாக 1 நாளுக்கு 2 பாடம் வீதம்
ஏப்ரல் 12 முதல் 16 வரை

ஆங்கிலம்

பாடதிட்ட தலைப்பு வாரியாக பயிற்சி பெறவும்
(4 நாட்கள் ) - ஏப்ரல் 17 - 20

திருப்புதல் 1: ஏப்ரல் 21 to 24
திருப்புதல் 2 : ஏப்ரல் 25 to 28
................…........…………………………

தாள்2 ( சமூக அறிவியல் )

பாடப்பகுதி 6 முதல் 10 வரை

தமிழ் வகுப்பு 6 - தேதி மார்ச் 25
தமிழ் வகுப்பு 7- தேதிமார்ச் 26
தமிழ் வகுப்பு 8 - தேதி மார்ச் 27
தமிழ் வகுப்பு 9- தேதி மார்ச் 28 / 29
தமிழ் வகுப்பு 10 - தேதி மார்ச் 29 / 30
தொடர்புடைய செய்யுள் வகுப்பு 11, 12 - தேதி மார்ச் 30

சமூகஅறிவியல் :

வரலாறு வகுப்பு 6 - தேதி மார்ச் 31
வரலாறு வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 1
வரலாறு வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 2
வரலாறு வகுப்பு 9 - தேதி ஏப்ரல் 3
வரலாறு வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 4
தொடர்புடைய பகுதி 11, 12 - தேதி ஏப்ரல் 5

குடிமையியல், புவியியல், பொருளியியல்

வகுப்பு 6 - தேதி ஏப்ரல் 6
வகுப்பு 7 - தேதிஏப்ரல் 7
வகுப்பு 8 - தேதிஏப்ரல் 8
வகுப்பு 9- தேதி ஏப்ரல் 9
வகுப்பு 10- தேதி ஏப்ரல் 10
கூடுதல் நாள் - தேதி ஏப்ரல் 11

உளவியல்

பாடவாரியாக 1 நாளுக்கு 2 பாடம் வீதம்
ஏப்ரல் 12 முதல் 16 வரை

ஆங்கிலம்

பாடதிட்ட தலைப்பு வாரியாக பயிற்சி பெறவும்
(4 நாட்கள் ) - ஏப்ரல் 17 - 20

திருப்புதல் 1: ஏப்ரல் 21 to 24
திருப்புதல் 2 : ஏப்ரல் 25 to 28

Thanks to 🙏

✏ கட்டுரை ஆக்கம் ✒

Mr. பிரதீப்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

பூங்குளம், வேலூர் மாவட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு TET

TNTET - 2017 தேர்வில் சிந்தித்து எழுதும் வினாக்கள் : மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏப்., 29ல் நடக்கும் தேர்வுக்கு, 598 பள்ளிகளிலும், ஏப்., 30ல், 1,263 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களுக்கு, அலைபேசி போன்ற, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.தேர்வுக்கான வினாத்தாளை, டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதி செய்து, அச்சுக்கு அனுப்பியுள்ளனர். வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வில், வினாத்தாள் மிக கடினமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 20 ஆண்டுகளில்

ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்

திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும்.

இந்த மாற்றத்தை சமாளித்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதியை, தற்போது, 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுஉள்ளன.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பாட புத்தகங்களின் உள்பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும். மனப்பாட பகுதி கேள்விகள் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.