Tuesday, December 31, 2013

ஆங்கில புத்தாண்டு உருவானது எப்படி



ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் பின்பற்றும் காலண்டரின் ஆண்டு துவக்கத்தைக் கொண்டாடுவது வழக்கம்.

தமிழர்கள் தங்கள் வருடப்பிறப்பை சித்திரைமாதத்திலும், கேரளத்தவர்கள் கொல்லம்என்றும் தெலுங்கர்கள் யுவாதிஎனவும் கொண்டாடுவார்கள்.

ஆனால், ஜனவரி முதல் தேதி உலகம் முழுவதும் ஜாதி, இனம், மத வேறுபாடின்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டையகாலத்தில் மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. மார்ச் வசந்தத்தின் தொடக்கம். ரோமானியர்களின் கடவுளான மார்ஸ்என்பதிலிருந்துதான் மார்ச் உருவானது.

அப்போது ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் ஜனவரி 11 வது மாதமாகவும், பிப்ரவரி மாதம் 12வது மாதமாகவும் சேர்க்கப்பட்டது. பிப்ருவேர்என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு சுத்தம் செய்தல்என அர்த்தம். ஆண்டின் கடைசி மாதமாக பிப்ரவரி இருந்ததால் புத்தாண்டை வரவேற்க அம்மாதத்தில் ஆலயங்களும், வீடுகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

கி.மு. 153 ம் ஆண்டு முதல் ரோமானிய பேரரசில் ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதமாக மாறியது. ஜானுஸ்என்றால் லத்தீன் மொழியில் வாயில்களின் கடவுள்என்று அர்த்தம். ஜனவரி மாதம் வாயில்களின் கடவுளுக்குரிய மாதமாக பண்டையகால ரோமானிய மக்கள் நம்பினர். கி.மு 45 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டுவரும் நவீன கிரிகோரியன் மற்றும் ஜூலியன் காலண்டர்களின் தொடக்க நாள் ஜனவரி 1 ஆகும். கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தபோது ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாக கொண்டாடிய முதல் நாடு ஸ்காட்லாந்து. அந்த நாடுதான் 1060 ம் ஆண்டில் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடியது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடுகளும் அதனைப் பின்பற்றி வருகின்றன.

கிறிஸ்தவர்கள் தம் கடவுளாக வழிபடும் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் ஜனவரி 1 ஆம் தேதியையே புத்தாண்டு தொடக்கமாக அங்கீகரித்து கொண்டாடி வருகின்றன.

Friday, December 27, 2013

கிளிகள் பற்றிய தவல்கள்



* கிளி (Parrot) சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த வலுவான அலகினை உடையவை. 

* கிளியின் கால்கள் முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்களைக் கொண்டவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். கிளிகள் மிகவும் புத்திசாலி பறவைகள். 

* கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். இவற்றிற்கு கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.  

* கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கப்பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது.

* பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவுகள்.

* கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.

* ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும்.

Friday, December 20, 2013

நமக்குள் நடக்கும் 18 அதிசயங்கள்!

1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக் களும் உள்ளன.

2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.

3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.

4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.

5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.

6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.

7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.

8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.

9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.

10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.

11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.

12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.

13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.

14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.

15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.

16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.

17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.

18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசை களும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

நம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய சில தகவல்கள் இங்கே

• உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.

• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

• இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

• தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது.

• திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்:
‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’

• தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.

• கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

• தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.

• வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

• இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

• உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது.

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்....


3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

சித்தர்கள் வகுத்த காலக் கணிப்பு - Lunar metrics of Siddha(Ciththars/Masters)

Thamil & Sanskrit are languages of Ciththars(Siddha/Masters). Both languages were created & developed by Ciththars. It's Ciththars who developed lunar metrics of years