* கிளி (Parrot) சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன.
இவை சிறப்பியல்பான வளைந்த வலுவான அலகினை உடையவை.
* கிளியின் கால்கள் முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்களைக் கொண்டவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். கிளிகள் மிகவும் புத்திசாலி பறவைகள்.
* கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். இவற்றிற்கு கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.
* கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கப்பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது.
* பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவுகள்.
* கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.
* ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும்.

No comments:
Post a Comment