வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...
1.கீரைகள்,
ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள
நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும் தன்மை கொண்டதால் துர்நாற்றம்
ஏற்படாமல் தடுக்கப்படும்.
2.உடலில் அதிக வியர்வையுள்ள பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக் கொள்ள வேண்டும்.
3.நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4.பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்க தினமும் இரவும் பகலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
5.உடலை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. உடையிலும் சுத்தம் தேவை.
முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில்
சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்பட்டு அவ்விடங்களில்
சிவந்தும் தடிப்பு ஏற்பட்டும் எரிச்சலை ஏற்படுத்தும்.
6.காட்டன், துணிவகைகள் வியர்வையை உறிஞ்சி எடுக்க ஏற்றவை. ஆதலால் பெரும்பாலும் காட்டன் துணிகளையே உடுத்துதல் நலம்.
7.மனதை எப்போதும் அமைதியாக வைத்திருங்கள். உணர்ச்சிகளை எப்பொழுதும் எல்லை மீற விடக் கூடாது.
8.பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பையே உபயோகிக்க வேண்டும்.
9.உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவ்வாறானவர்கள் காற்று
படும்படியான செருப்புகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஷுக்களை
அணியக்கூடாது. ஷு அணியும் போது சாக்ஸ்களைத் தினமும் துவைத்து அணிய
வேண்டும். பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது.
10.கை,
கால்களை சுத்தமான நீரால் சோப் உபயோகித்துக் கழுவி, சுத்தமான துண்டால்
துடைத்து விரல்களுக்கிடையில் பவுடர் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்
உடல் நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.
No comments:
Post a Comment