ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் சார்ந்த
மதத்தின் அடிப்படையில் பின்பற்றும் காலண்டரின் ஆண்டு துவக்கத்தைக் கொண்டாடுவது வழக்கம்.
தமிழர்கள் தங்கள் வருடப்பிறப்பை “சித்திரை” மாதத்திலும், கேரளத்தவர்கள் “கொல்லம்” என்றும் தெலுங்கர்கள் “யுவாதி” எனவும் கொண்டாடுவார்கள்.
ஆனால், ஜனவரி முதல் தேதி உலகம் முழுவதும் ஜாதி, இனம், மத வேறுபாடின்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டையகாலத்தில் மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. மார்ச் வசந்தத்தின் தொடக்கம். ரோமானியர்களின் கடவுளான “மார்ஸ்” என்பதிலிருந்துதான் மார்ச் உருவானது.
அப்போது ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் ஜனவரி 11 வது மாதமாகவும், பிப்ரவரி மாதம் 12வது மாதமாகவும் சேர்க்கப்பட்டது. “பிப்ருவேர்” என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு “சுத்தம் செய்தல்” என அர்த்தம். ஆண்டின் கடைசி மாதமாக பிப்ரவரி இருந்ததால் புத்தாண்டை வரவேற்க அம்மாதத்தில் ஆலயங்களும், வீடுகளும் சுத்தப்படுத்தப்பட்டன.
கி.மு. 153 ம் ஆண்டு முதல் ரோமானிய பேரரசில் ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதமாக மாறியது. “ஜானுஸ்” என்றால் லத்தீன் மொழியில் “வாயில்களின் கடவுள்” என்று அர்த்தம். ஜனவரி மாதம் வாயில்களின் கடவுளுக்குரிய மாதமாக பண்டையகால ரோமானிய மக்கள் நம்பினர். கி.மு 45 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டுவரும் நவீன கிரிகோரியன் மற்றும் ஜூலியன் காலண்டர்களின் தொடக்க நாள் ஜனவரி 1 ஆகும். கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தபோது ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாக கொண்டாடிய முதல் நாடு ஸ்காட்லாந்து. அந்த நாடுதான் 1060 ம் ஆண்டில் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடியது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடுகளும் அதனைப் பின்பற்றி வருகின்றன.
கிறிஸ்தவர்கள் தம் கடவுளாக வழிபடும் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் ஜனவரி 1 ஆம் தேதியையே புத்தாண்டு தொடக்கமாக அங்கீகரித்து கொண்டாடி வருகின்றன.