Monday, January 19, 2015

திருவோடு - சிறப்பு பதிவு

நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப் பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.
இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.
திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.
இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.
காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும். மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.
விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.
இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும். திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது.

Monday, January 12, 2015

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?



ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளைகருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.
நீர்:
கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.
நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு:
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று :
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்:
ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.
இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

Sunday, January 11, 2015

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு!


சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.
மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.
100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.
ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப்பொருளும் சர்க்கரையும்) உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாள்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப்பயன்படும் காய்கறி இதுதான்.
மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது
அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம்.
‘சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.
உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும் அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குப்படுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.
சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது இரவில் ‘திடீர் திடீர்’ என்று பசியினால் அலறாது. நிம்மதியாகத் தூங்கும்.
அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்தநிலையில் தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.
உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.
உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினியைத் தவிர்த்துக் கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சர்க்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால்தான் பசியைப் பொறுத்துக்கொள்ளமுடிகிறது.
வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.

முருங்கை இலை......

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.
முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.
எனவே முருங்கை கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது.
ஈரப்பதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
கால்சியம்-400மி.கி
பாஸ்பரஸ்-70மி.கி
சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முருங்கை பல வியாதிகளை குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
பச்சை கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். கீரை உணவுகளை சும்மாவா சேர்க்க சொல்லி சொன்னார்கள் நம் முன்னோர்கள். மருத்துவ பொக்கிஷம் நிறைந்த முருங்கைகீரையை இனிமேல் மிஸ் பண்ணாதீர்கள்.

அகத்தி

அகத்தி என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. உடலின் உட்புற உஷ்ணத்தைத் தணிப்பதால், அகம்+தீ=அகத்தீ என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர். பலதரப்பட்ட மண்வகைகளிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது இம்மரம். ஆனாலும், கரிசல் மண் இதற்கு மிகவும் ஏற்றது. மிக வேகமாக வளரும் தன்மையுடையது. இது 6 முதல் 9 மீட்டர் உயரம் வரை வளரும். இதில் சாளை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிகப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என அழைக்கப்படுகிறது.
இதன் இலைகள் வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றுகிறது. மேலும், பித்தம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும் தன்மையுடையதாக இருப்பதால் இதை தோட்டங்களில் பயிராக வளர்க்கின்றனர். வெற்றிலை, மிளகு தோட்டங்களில் கொடிகளின் தாங்கியாக (ஊடுபயிராகவும்) இது வளர்க்கப்படுகிறது. இதன் விதைகளை 30க்கு 30 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த ஒரு வருடத்தில் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். இதில் 33 சதவீதம் கச்சாபுரதம் உள்ளது. வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது அகத்தி கீரையைச் சாப்பிடக் கூடாது என்பார்கள். காரணம், அகத்தி மருந்தின் தன்மையைக் குறைத்துவிடும்.
இம்மரத்தின் பட்டையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் பட்டையிலிருந்து பெறப்படும் சாறு (டானின்) தயாரிக்க தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. அகத்தி இலையை ஆடுகள் விரும்பி உண்கின்றன. இந்தியாவில் அசாம், வங்காளம், பஞ்சாப், ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டில் பரவலாக இது பயிர் செய்யப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் செஸ்பானியா க்ரான்டிஃப்ளோரா (Sesbania grandiflora) என்பதாகும்.

Saturday, January 10, 2015

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு. 

உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.  

சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள்  அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.
சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதாவது, ''சிக்கன் மட்டுமல்ல... இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.
ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்!

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை

1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.

யானைகளை பற்றிய சில வியப்பூட்டும் செய்திகள்:-


1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.
2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.
3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.
4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான்.
ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.
5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.
6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.
7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான்
காத்துக்கொள்ளும்.
9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.
10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.
11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்
12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.
13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.
14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள்
கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.
15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.
16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில்
உயிரை விட்டுவிடும்.
17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.
18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

Thursday, January 8, 2015

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை
நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை
பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை
வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை
மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை
இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை
சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை
சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை
சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை
பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை
உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை
பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை
கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Saturday, January 3, 2015

ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள்


*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும். காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன்பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.
*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

Thursday, January 1, 2015

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்

W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG
மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.