Sunday, July 26, 2015

யார் திருடா்கள் ????



சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது .....
கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் .
"இந்த பணம் அரசிற்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது". அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .
". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்
"Being Professional & Focus only on what you are trained"
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொறு  அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்

This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் வங்கியில் கொள்ளை போனது  20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றான்

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""எண்பது இது தான் .
This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் என்றான் . ""கலியுகம் "" என்பது இது தான்
 . This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினா் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .
கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து  நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்க்கு தான் படித்திற்க வேண்டும் .""என்றான்.
True. Knowledge is nowadays very important than money in this world.

வங்கியின் முதலாளிக்கும் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சி. ஷோ் மார்கெட்டில் வங்கி அடைந்த நஷ்டத்திற்கு இக்கொள்ளை அதை ஈடு கட்டி விட்டது .

Who is the real thief here? ????? ......

Sunday, July 12, 2015

”உதவி சக்கரம்”

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ‪#‎ஒருவர்‬ கவனித்தார்.வாகனங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.

அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.
என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .

அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் பக்கத்தில் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.

நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.

உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.

அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.

குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.

டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.

கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.

”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.

Thursday, July 9, 2015

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!

நாசாவுக்கே தண்ணிகாட்டிய தமிழனின் விஞ்ஞானம்!"

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம்

3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது.
3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.


இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே
இருக்கி றது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால்

‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...

-மணி நெல்லை

Saturday, July 4, 2015

இணையத்தை கலக்கும் எக்ஸ்குளூசிவ் இணையதளம்!

ரு இணையதளத்தை பயன்படுத்தி பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காகதான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால், அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம். அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால், அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது என்பதுதான் இன்னும் ஆச்சர்யமானது. உண்மையில் அது ஒரு பயனில்லா இணையதளம் - ஆனால், அதுதான் இன்று உலகின் பிரத்யேக இணையதளமாகி இருக்கிறது.
எப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் அந்த இணையதளம் அமைக்கப்பட்ட விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனத்தில்தான் இருக்கிறது.


பெயரிலேயே பாதி வெற்றி என்பது போல அந்த இணையதளத்தை உருவாக்கியவர், இணைய உலகின் மிகவும் பிரத்யேக தளமாக உருவாக்கும் எண்ணத்துடன், அதற்கு 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' என பெயர் வைத்தார். அந்த தளம் பிரத்யேக தன்மை கொண்டதாக இருக்கும் வகையிலும் அதை அமைத்திருந்தார். அதன் பிரத்யேக தன்மை என்ன தெரியுமா? அந்த தளத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அந்த ஒருவரும் ஒரு நிமிடம் மட்டும்தான் தளத்தை பயன்படுத்த முடியும். ஒருவர் பயன்படுத்தி முடிக்கும் வரை மற்றவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும். இதற்காக முகப்பு பக்கத்தில் இருந்து அனுமதி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எந்த நேரத்தில் இந்த தளத்தில் நுழைந்தாலும், இத்தனை ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர், நீங்களும் வரிசையில் நிற்க அனுமதிச்சீட்டு வாங்கி கொள்ளவும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்படி காத்திருக்க வேண்டியிருப்பதும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே தளத்தை பயன்படுத்தலாம் எனும் பிரத்யேக தன்மையும்தான் இணையவாசிகளை இந்த தளத்தை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.

இதுவரை 2,65,000 பேருக்கு மேல் இந்த தளத்தை பயன்படுத்த அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் ஜஸ்டின் போலே என்பவர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். இணையதள வடிவமைப்பாளராக இருக்கும் போலே, இணையம் திறந்தவெளி தன்மை கொண்டதாக இருக்கும் நிலையில், அதற்கு நேர் எதிரான தன்மையுடன் ஒரு இணையதளத்தை அமைத்தால் என்ன என்று யோசித்து இந்த பிரத்யேக தளத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

மார்ச் மாதவாக்கில் இந்த தளத்தை உருவாக்கினார். ஆனால், அதன் பிரத்யேக தன்மையை மீறி அது உடனடியாக கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் ஜானி வெப்பர் எனும் வலைப்பதிவாளர் தனது பட்டியல் இணையதளத்தில், இணையத்தின் பயனில்லா இணையதளங்கள் எனும் பட்டியலை வெளியிட்டு இதை அடையாளம் காட்டியிருந்தார். அதன் பிறகு இந்த தளம் பிரபல இணைய சமூகமான ரெட்டிட்டிலும் இடம்பெற மெல்ல இணையவாசிகள் மத்தியில் பிரபலமானது.

அப்புறம் என்ன, இதன் விநோதமான விஷேசத்தன்மை பலரையும் பேச வைத்து இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
எல்லாம் சரி, இந்த இணையதளத்தை ஒரு நிமிடம் பயன்படுத்தும் போது என்னதான் செய்ய முடிகிறது என கேட்கலாம்? அது சஸ்பென்ஸ்! நீங்களும் முயன்று பாருங்களேன்!. ஆனால் ஒன்று ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிடுவதால் தளம் முடங்கி நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இணையதள முகவரி: http://mostexclusivewebsite.com/

-சைபர்சிம்மன்

ஹெல்மெட்டின் பணி என்ன?

‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார்.
அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம்.
இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது.


800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும்.
இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம்.

இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் வேலையைத்தான் ஒரு ஹெல்மெட் செய்கிறது.
அவ்வளவு பலத்தைத் தாங்க, ஒரு குறிப்பிட்ட தரத்தில் ஹெல்மெட் தயாரிக்கப்படவேண்டும்!’’

அது என்ன ஐ.எஸ்.ஐ. தரம்?‘‘

இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஹெல்மெட்டுக்கு பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச் சான்றிதழ் கொடுக்கிறது.

அதன் கீழ் வரும் ஐ.எஸ் 4151 பிரிவில்தான் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன.

இதன்படி ஏ.பி.எஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாகப் பயன்படுத்த வேண்டும்.
அதன் இடைப்பட்ட பகுதியில்...
அதாவது, நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும்.
இது தவிர, சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், அதன் லாக் எப்படி இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த ஐ.எஸ் தர விதியில் இருக்கிறது.

இந்த ஹெல்மெட்டுகளில் ஐ.எஸ்.ஐ முத்திரையும் கூடவே IS4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த ஐ.எஸ் விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து ஹெல்மெட் செய்து விலை மலிவாக சந்தையில் விற்கிறார்கள்.
பலத்த பாதிப்பைத் தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்துகிறார்கள்.

இவற்றை வாங்கி அணிந்தால் ஹெல்மெட் போட்டும் போடாத கதைதான்.’’
எதைத் தேர்ந்தெடுப்பது?

‘‘நமது தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ஹெல்மெட்டை மட்டும்தான் வாங்க வேண்டும்.
ரொம்பவும் லூஸாக இருந்தால் அடிபடும்போது அந்த ஹெல்மெட்டே நமது தலையைப் பதம் பார்க்கலாம்.
சதுரம், கூம்பு வடிவம் என டிசைனர் ஹெல்மெட்களைத் தவிர்க்க வேண்டும்.
ஹெல்மெட் ரவுண்டாக இருந்தால் மட்டுமே விபத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும்.’’

எப்படி அணிய வேண்டும்?

‘‘ஹெல்மெட் போட்டும் நாடி நாடாவைப் போடாமல் இருப்பது ஹெல்மெட்டை நழுவவிடச் செய்யும்.

ஆக, ஒரு விரல் அல்லது இரண்டு விரல் மட்டும் செல்லக்கூடிய இடைவெளியில் நாடாவை அணிந்துகொள்வது நல்லது.
அதன் லாக்கும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.’’
என்ன ஹெல்மெட் வாங்க கிளம்பிட்டீங்களா.?

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )
இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :
பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )
பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்
.
இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :
• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.
• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.
• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.
யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.
https://www.facebook.com/groups/info.thagaval/