Sunday, August 2, 2015

Dr.A.P.J.அப்துல் கலாம் சிறப்பு பதிவு1



1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்..
மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக
இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு
செயற்கைக் கோள்கள்.
அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன்தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்..மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ். நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை.
பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மேமாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது. இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல்கலாம்.

அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு  ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன்சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்.... போக்ரான்...அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.
'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது
'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார். மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம். அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி
தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்துதான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர்
கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.
அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு
நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என
பெயர் சூட்டினர்.

பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை
செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும்
நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும். கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.

மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்துகுண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய்.
அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர்.
ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்-பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ
உடைகள் தான்.அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக்
கோள்களின் நடமாட்டத்தை (satellite hours)வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்தநேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை
பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில்தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான்அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம்புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அதுபோக்ரானுக்குள் நுழைய வேண்டும்..
அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரியவேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள்,மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு
பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. எனபல்வேறு உளவு-ராணுவ யுத்திகளைஒருங்கிணைத்தார் கலாம் கலாமின் இந்த டைம் டேபிளின்படி
விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும்பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான்.இதனால் இந்தியாவின் அணு குண்டுசோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில்தான் நடந்தன.கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்..மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும்
உழைப்பு..
மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..
வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும்சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர்பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.
உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப்கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission)
மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம்.இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால்நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என
உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென
பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனிநாமும் அணு ஆயுத நாடு தான், இதைமற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும்சரி''.இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது.
1.யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்றுவிட்டோம்.
2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.
3.ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.

No comments:

Post a Comment