Friday, October 23, 2015

"ஆயுத பூஜை" வந்ததன் வரலாறு

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாப்படும் நிலையில் இந்த விழாவுக்கான பெயர் சூட்டப்பட்டதன் வரலாறு மிகவும் சுவாரஷ்யமானது.

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிட்சியமே. நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு "ஆயுதபூஜை" எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆயுத பூஜை எதற்காக?

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே!

அனைவருக்கும் "ஆயுதபூஜை" வாழ்த்துக்கள்!

Tuesday, October 6, 2015

கொசு கடிப்பதும் தவிர்ப்பதும்‬..!

* உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

* 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

* மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

* ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

* சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

* கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

* ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே

* முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணை உறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

* உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப் பட்டதும் கொசு தான்.

* ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

* கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.


* ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

* கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

* கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள்விளைகின்றன.

* உடலில் தேங்காய் எண்ணை பூசிக் கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.

* கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ்கொசுக்களை கவருகின்றன ஆகா பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

* Vitamin B --- கொசுவின் எதிரி..., இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

Friday, October 2, 2015

அஷ்ட_வீரட்ட_ஸ்தலங்கள்‬:

ஈசன் சிவபெருமானார் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் எட்டு இதனையே அட்ட வீரட்ட ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவைகள் அனைத்தும் தஞ்சை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களான காவேரி டெல்டா பகுதிகள் காணப்படும் தலங்கள்,

இத்தலங்கள் சமயக் குரவர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பாடல்களில் அதிகம் காணப்படும் கோவில்கள் கொண்ட தலங்கள் உதாரணமாக திருநாவுக்கரசர் பாடலில் கண்ட வரிகள் "அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே,"
அவையாவன:

1) ‪#‎திருப்பறியலூர்‬:
தடச்கன் யாகம் அழித்த ஸ்தலம்

2) ‪#‎திருக்கண்டியூர்‬ :
தான் என்ற கர்வம் பெற்ற பிரம்மன் சிரத்தை பைரவர் மூலம் தலை கொய்த ஸ்தலம்.

3) ‪#‎திருவதிகை‬:
முப்புரம் - மும்மலங்கள் - திரபுர சம்காரம் செய்த ஸ்தலம்

4) ‪#‎திருக்கோவிலூர்‬:
பைரவர் உருவம் தாங்கி வானர்களுக்காக அந்தகாசூரனை வதம் செய்த ஸ்தலம்

5) ‪#‎திருக்குறுக்கை‬:
காமதகன மூர்த்தி யாகி காமனை - மன்மதனை எரித்த ஸ்தலம்.

6) ‪#‎திருக்கடவூர்‬:
சிவபக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை - கூற்றுவனை வதம் செய்த ஸ்தலம்

7) ‪#‎திருவழுவூர்‬:
கயமுகா சூரனாகிய யானையினை (கொன்று ) வதம் செய்து அதன் தோலை உரித்து யானைத் தோலினை அணிந்த தலம்

8) ‪#‎திருவிற்குடி‬:
சலந்திர ஸ்தலம் (தன்கால் பெருவிரலால் கீறியமைந்த சக்கரத்தினால் தலையை அறிந்த ஸ்தலம்) ஆக எட்டு வீரச்செயல்கள் புரந்த ஸ்தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்கப்படுகிறது.

Thursday, October 1, 2015

கம்பனும் அவ்வையும் .....

கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.

அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி. அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் புலவர்.

”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”

”கண்டாரோ.. மு... என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.

“யோவ்! புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்கறீரே.. இங்க வந்து கொடுத்துட்டு போனவன்தான் இருக்கிறான். வாங்கிட்டு போனவன் யாருமில்ல. சரி.. சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.

சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு கொடு” என்றாராம்.

அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.

”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”

ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.

சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள். கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான்.

இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு. ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு.

அம்மா! நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க.. இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.
ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.

""தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு""
என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள்.

தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)

கம்பன் வந்து பார்த்தான். யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை. அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால.
பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏன்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.

அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி
கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம்.

என்றாள்.. நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டு,கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னால்,

அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கனும்னு பாடினேன்.. உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா.. இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன் என்றாளாம் ஓளவை கிழவி..

இது தான் நம் தமிழ் ...தெய்வத்தமிழ்....

படித்து ரசித்தது பகிர்ந்தேன் ....

நீதி கதைகள் பாகம் 4

நம்ப ஊரு ஆளு ஒருத்தர் செத்து எலோகம் போறாரு..

எமனோட அங்க இருக்கிற சித்திர குப்தன், "இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம்..., நீ ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டா, உன்னை சொர்க்கத்துல ஜாலியா இருக்கிறத்துக்கு நாங்க அனுமதிப்போம்" ன்னு சொல்றாரு...

சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்ல...,

அதுக்கு சித்திர குப்தன்,

முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாட்கள் எது ?

இரண்டாவது கேள்வி :-
ஒரு வருசத்துக்கு எத்தினை செகன்ட்ஸ் இருக்கு..? உனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம்'ன்னு சொன்னார்.

நம்ப ஆளு, இதுக்கெதுக்கு ரெண்டு நிமிசம் யோசிக்க..! நான் உடனே சொல்லுறேன்னான் ....!!

சித்திரகுப்தன் ஆச்சர்யமாயிட்டார்.!! சரி சொல்லுப்பான்னார்..

முதல் கேள்வி விடை :-
ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாள், "நேற்று, இன்று, நாளை"ன்னான்

இரண்டாவது கேள்வி விடை :- ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றான்.

சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு, "நம்ப ஆளிடம், யோவ்.... எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, இது வரைக்கும் இங்க வந்த யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக் கொள்கிறோம்.
ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS மட்டும் இருக்கும் - ன்னு கேக்க....

அதுக்கு அந்த நம்மூரு ஆளு..., ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECOND'S
இருக்கும் ன்னு சொன்னதுமே...,

சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரு....!!! எமனுந்தாங்க...!!!

ரயில் டிக்கெட் வித்தவுட்!

சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார். 

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி, புறநகர் மின்சார ரயிலில் ஏறி, கிண்டி ரயில்நிலையம் வந்து இறங்கியிருந்தேன். 

என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன். அவர் விதிப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ரயில் பயணத்தில், ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக் கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது. 

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட் மெண்டில் ஏறி, தாம்பரம் வந்து இறங்கி, புறநகர் மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால், முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக புறநகர் மின்ரயிலுக்கான டிக்கெட் வாங்க வேண்டும். 

எனவே, என் தவறுக்காக, ரூ. 250 அபராதமும், தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக ரூ. 5-ம் சேர்த்து ரூ. 255 கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.) அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பரங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால், கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்றது அந்த விதி. 

ஆனால், இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றியது; இதைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். இதுதொடர்பாக வலைதளத்தில் எழுதியபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

30.7.2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்க வேண்டியதில்லை. 

தகவல் உரிமச் சட்டம் மூலம் தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த வலைப்பதிவர் ‘பிச்சைக்காரன்’ அவர்களுக்கும் நன்றி!