Sunday, January 29, 2017

வறட்டியில் விஞ்ஞானம் செய்த தமிழர்கள்


நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.

வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்

கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

Tuesday, January 24, 2017

சிப்பிப்பாறை

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால் சிரமம் பார்க்காமல் இதை முழுதும் படியுங்கள் தமிழர்களே.

இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. போன மாதம் DEC 16 2016 .

நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றது உண்டு. அது நம் மண்ணின் நாய்கள் இனம். அதை PETA முற்றிலுமாக அழித்து விட்டது என்றே சொல்லலாம்.

நம்மை போன்ற படித்த மக்களுக்கு தெரிந்தது எல்லாம் PUG, LABRADOR, GERMAN SHEPHERD போன்ற அந்நிய நாட்டு நாய்கள் தான். இத படிக்கும் எத்தனை பேருக்கு தெரியும் நம் மண்ணின் நாய்கள் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை மற்றும் ராஜபாளையம். நம் இன நாய்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

சிப்பிப்பாறை - நம் முன்னோர்கள் வேட்டை ஆட பயன்படுத்துவார்கள் வீட்டிற்கு சிறந்த காவலன். Hare என்கிற முயலை விட வேகமாக ஓட கூடியது. மனிதர்களுடன் நேசம் பழகுவது இதற்கு மிகவும் பிடிக்கும்.
 https://en.wikipedia.org/wiki/Chippiparai

கன்னி - இது உரிமையாளருக்கு மிகவும் உண்மையாக இருக்கும். சுயமாக சிந்திக்க கூடிய திறன் படைத்தது. ஆகையால் பழகுவது மிகவும் எளிது. முன்பு பெண் வீட்டார் பெண்ணுக்கு சீதனமாக கன்னியை பரிசளிப்பார்கள். https://en.wikipedia.org/wiki/Kanni

கோம்பை - பண்ணை காவலன். தனி ஒருவனாக காவல் காப்பார் இவர். இவரை மீறி எந்த மிருகமும் கிட்ட நெருங்க முடியாது. காட்டுஎருமையை வேட்டையாடும் திறன் படைத்தவர்.
 https://en.wikipedia.org/wiki/Combai

ராஜபாளையம் - உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது. உரிமையாளர் தவிர வேற யாரும் தொட விடாது. 75cm உயரம் வரை வளர கூடியது. https://en.wikipedia.org/wiki/Rajapalayam_(dog)

இந்த நான்கு இனங்களும் அழிந்து போகும் தருவாயில் இருக்கிறது. இந்த இனங்களை மீட்டு எடுத்து பாதுகாக்கவும், அழிவை தடுக்கவும் தமிழ்நாடு அரசு "நாய் வளர்ப்பு பிரிவு" சைதாப்பேட்டை யில் இயங்கி வந்தது. இவர்கள் நம் இன நாய்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தனர். யார் வேண்டுமானாலும் இங்கு சென்று நம் இன நாய்களை வாங்கி வளர்க்கலாம்.

PETA 4th Aug 2014 தமிழ்நாடு உயர் நீதி மன்றத்தில் இந்த நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் கொடுமைப்படுத்த படுகிறது. ஆதலால் இக்கூடத்தை AWBI ஆய்வு செய்து அவரகள் பரிந்துஉரைத்தால் இக்கூடத்தை மூட வேண்டும் என்று மனு செய்கிறது. இதற்கு மேல் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும். PETA கைப்பாவை AWBI ஆய்வு செய்து "நாய் வளர்ப்பு கூடத்தை " மூட பரிந்துஉரைத்தது. அதன்படி உயர் நீதி மன்றம் Dec 16 2016 அன்று நம் இன நாய் வளர்ப்பு கூடத்தை மூட உத்தரவிட்டது. PETA அமைப்பு அங்கு நாய்கள் கொடுமைப்படுத்த படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் கொடுத்த ஆதாரம் இதுதான்.

https://www.youtube.com/watch?v=PTmlijd2IZM

இதை பார்த்து விட்டு சொல்லுங்கள் இதில் எங்கே நாய்களை கொடுமைப்படுத்துகிறார்கள்?

ஏன் இதை எந்த தமிழ் மீடியாவும் நமக்கு சொல்லவில்லை?

வெறும் சில நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சனைக்கு எதற்காக உயர் நீதி மன்றம் முற்றிலுமாக மூட சொல்லியது?

PETA எதற்காக இந்த நாய் வளர்ப்பு கூடம் மூட இவ்வளவு சிரத்தை எடுத்தது?

பலபேர் யோசிப்போம் இதனால் PETA விற்கு என்ன லாபம் என்று. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நம் நாட்டு நாய்களுக்கு தனியாக உணவு தேவை இல்லை. நம் சாப்பிடும் உணவே அதற்கும் போதும். எளிதாக நோய்கள் அண்டாது. முடி உதிரும் தன்மை கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் சம்பாதிக்க முடியும்? வெளிநாட்டு நாய்கள் நம் உணவு சாப்பிடாது அதற்கென்று தனி உணவு சூப்பர் மார்க்கெட் ல வாங்கணும். அதை பராமரிக்க மருந்துகள் வாங்க வேண்டும். இவை அனைத்தும் வெளிநாட்டு கார்பொரேட் கம்பெனிகளால் இங்கு விற்கப்படுகிறது. இப்போது புரிந்ததா? மேலும் படியுங்கள்.

எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. PETA என்கிற வெளிநாட்டு அமைப்பின் ஒரே குறிக்கோள் நம் சொந்த மண்ணின் இனத்தை அழித்து அவர்களின் தயாரிப்புகளை நம் மண்ணில் இறக்குவது தான். இன்னும் சற்று உற்று யோசித்து பாருங்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நம் பாரம்பரிய இனங்களை அழித்தால் போதும்.

மக்களே விழித்து கொள்ளுங்கள். PETA அமைப்பு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் சரியே. அவர்கள் நம் நாட்டின் விஷம். இப்போதே அவர்களை விரட்ட வேண்டும். PETA வை ஒழிப்பது மட்டும் இன்றி நம் நாட்டு நாய்களையும் காப்பாற்ற வேண்டும்.

நான் ஆராய்ந்ததில் ஆபிரகாம் என்பவர் இந்த "நாய் வளர்ப்பு கூடத்தை" பராமரித்து வந்து இருக்கிறார். அவரை முதலில் தொடர்பு கொண்டு முழு விவரத்தையும் அறிய வேண்டும். வழக்கை மேல் முறையீடு செய்து இக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும். தமிழரகளே நம் இனத்தின் ஒரு புள் பூண்டை கூட அழிய விடாமல் காப்பது நம் கடமை. விழித்திரு தமிழா.

இதை நம் தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

நாட்டுநாய்

பட்டி நாய் :

நாட்டுநாய் என்று அழைக்கப்படுவது. நோய் எதிர்ப்பு, பஞ்சம் தாங்குதல் ஆகியவற்றின் உச்சகட்டம். மசை பிடித்தாலும் முடிந்தளவு உரிமையாளரைக் கடிக்காது. ஆடு, மாட்டுப்பட்டிகளில் குருவிகளைக்கூட அண்ட விடாது.
விசுவாசத்திற்குப் பெயர் போனது.
சர்க்கார் பல பரதேச நாய்களைக் கொண்டுவர அனுமதித்து இவ்வினத்த்தின் தன்மையைக் கெடுத்துவிட்டது. Shepherd dog.

பட்டிநாயின் சில குணாதிசயங்கள்:

1.குழந்தைகளைக்கண்டு பொறாமைப்படாது, மாறாக அவர்களைக் காக்கும்.

2.எஜமானருக்கு ஆபத்தென்றால் (பாம்புகள் போன்றவற்றால்) உயிரைக்கொடுத்துக் காப்பாற்றும்.

3.பிறர் உணவளித்தால் சரியாக உண்ணாது, அளித்தாலும் எஜமானரைத்தான் விசுவாசிக்கும்.

4.விஷ ஜந்துக்கள் கடித்தால், மூலிகைகளை உண்டு உயிர் தப்பிக்கொள்ளும்

5.இறக்கும் தருவாயில் எஜமானரை விட்டு விலகிச்சென்றே இறக்கும். (துக்கப்படக்கூடாதென்று).
எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக உண்ணும்.

6.ஆஸ்துமா, ஈசினோபிலியா போன்ற நோய்கள் சீமை நாய் சங்கார்த்தத்தால் பரவுகின்றன.

7.நமது பாவங்களை தான் வாங்கிக்கொள்ளும்.

8.எஜமானர் உயிருக்கு ஆபத்தெனில், தான் பாவத்தை வாங்கிக்கொண்டு இறக்கும். எமனையும், பிற சக்திகளையும் காணக்கூடிய வல்லமை உள்ளதால் பைரவர் - கர்ம வினையின் அதிபதியின் வாகனமாக கையாளப்படுகிறது. பைரவரை நமஸ்கரித்தால்தான், கர்மவினை பந்தங்கள் அழியும்.

9.பட்டி பொங்கலன்று (மாட்டுப் பொங்கல்), ஒரு பாகம் பொங்கல் பட்டிதெய்வ பிரசாதமாக பட்டி நாய்க்கு வழங்கப்படும். பிற கோயில் பிரசாதங்களை வழங்க மாட்டார்கள்.

10. நமது நாய்க்குக்கூட, இப்பேர்பட்ட நல்ல குணங்கள் உள்ளன. ஆனால் நாமோ இவற்றைப் புறக்கணித்தும், வஞ்சித்தும் சீமை கண்றாவிகளை விரும்புகிறோம்.
பழக பழக பாலும் புளிக்குமாம்.

நாட்டு நாய் வளர்த்துவோம்.
சீமை நாயை புறகணிப்போம்.

Thanks - Pon Dheepankar Krishnamurthi
PC - Vikatan News
To Know More About Native Breeds..
Go through
http://tamilnaducattle.blogspot.in

Thursday, January 12, 2017

இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை

15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.



ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.



இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார்.

முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.



சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது. இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

ஜெய்ஹிந்த்...!