Monday, September 24, 2018

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா?

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு.

அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது.

இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.

“குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா?

பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்.

குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு, மெளனமாக சிரித்தபடியே,

’நமது வேதாந்த வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. ஆகையால் இப்போது நீ வகுப்பறைக்கு செல் நான் சிறிது நேரத்தில் வருகிறேன்” என்றார்.

வகுப்பறையில் அன்று அனைவருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை பற்றி விளக்கினார்

குரு. பிறகு அணைத்து மாணவர்களும் அதை மனதில் பதியவைக்க துவங்கினர்.

சிறிது நேரம் கழித்து, தன்னிடம் படையலை பற்றி கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான் சிஷ்யன்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார் குரு.

என்றும் மறவாதபடி முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே” என்றான் சிஷ்யன்.

அப்படியா சரி, எங்கே ஒருமுறை அந்த மந்திரத்தை என்னிடம் சொல் பார்க்கலாம் என்றார்.

மனதை ஒருநிலை படுத்திகொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரமித்தான் சிஷ்யன்.

அவன் கூறி முடித்தவுடன், சிஷ்யா நீ மந்திரத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டதுபோல் தெரியவில்லையே. உன் புத்தகத்தை காட்டு பாப்போம் என்றார் குரு.

பதட்டம் அடைந்த சிஷ்யன் உடனே தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான்.

நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள் குருவே. அனால் இந்த புத்தகத்தில் உள்ளபடியே தான் நான் மந்திரத்தை கூறினேன் என்றான்.

இந்த புத்தகத்தில் இருந்து தான் மந்திரத்தை உள்வாங்கினாயா என்றார் குரு. ஆம் குருவே என்றான் சிஷ்யன்.

அப்படியானால் நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி?

நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் அது இருக்க கூடாதல்லவா? என்றார் குரு.

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

நீ மனதில் உள்வாங்கிய மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.

இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்யத்தை அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை.

உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா அதுபோல தான் என்றார் குரு.

இந்த அற்புத விளக்கத்தை கேட்டு சிஷ்யன் மெய் சிலிர்த்துபோனான்

Sunday, September 23, 2018

பத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன?

பத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன? கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான் நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும்.

கடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது.
முதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு
பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இயற்கையின் தன்மை
பாதுகாக்கப்படுகிறது. இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல
நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும்
விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து
விடுகிறது. இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு
உடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை
வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

இனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம்.
1. திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான்.
2. ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான்.
3. அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலைய
4.  கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலை
5. பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும் கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.

வேளமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது. கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது. ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது. தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது. எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரம்பஜத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன். அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன? இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா? என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு. மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும். அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம். குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்துக்கு இன்ன இலை ஆகாது என சொன்னார்கள்

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சனை செய்யவேண்டிய இலைகளும், அதன் பலன்களும்..

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சனை செய்யவேண்டிய இலைகளும், அதன் பலன்களும்.. இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுவர் கணபதி.

நாம் எந்ததொரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பு தான் செய்ய தொடங்குவோம்.

அதனாலேயே இன்று வரை நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கையாளுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியன்று சங்கட சதுர்த்தியாகவும், ஆவணி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

விநாயக பெருமானை தினமும் போற்றி வழிபட்டு வந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அன்றைய தினம் களி மண்ணால் செய்த பிள்ளையாரை நம் வீட்டுக்கு வாங்கிவந்து அலங்கரித்து, விரதமிருந்து, விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களைப் படைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்கிறோம்.

விநாயக சதுத்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நலம்பல அடையலாம் என்று சொல்லப்படுகிறது. விநாயகருக்கு உகந்த 21 இலைகளும்,

அதன் பலன்களும்.

.1. முல்லை இலை -

அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை -

இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை -

இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல் -

அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

5. இலந்தை இலை -

கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை -

பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை -

 பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி -

முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி -

 வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை -

எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை -

கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

12. மருதம் இலை -

மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை -

நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை -

பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை -

எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை -

இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை -

உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை -

சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. தாழம் இலை -

செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை -

கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

21. தவனம் பூவின் இலை -:

நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுவர் கணபதி. நாம் எந்ததொரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பு தான் செய்ய தொடங்குவோம்.

அதனாலேயே இன்று வரை நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கையாளுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியன்று சங்கட சதுர்த்தியாகவும், ஆவணி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

விநாயக பெருமானை தினமும் போற்றி வழிபட்டு வந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அன்றைய தினம் களி மண்ணால் செய்த பிள்ளையாரை நம் வீட்டுக்கு வாங்கிவந்து அலங்கரித்து, விரதமிருந்து, விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களைப் படைத்து,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்கிறோம்.

சதுர்த்தி ஸ்பெஷல் போஸ்ட்

"தேங்காய் உடைப்பது எதற்காக? யானை உருவம் எதற்காக? தோப்புக்கரணம் போடுகிறோமே எதற்காக?"

பெரியவாளின் விளக்கம்-

("தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது)

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக?

விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்' என்று தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு 'ஸ்தூல காயர்' என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை! சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்' என்று காட்டுகிறார்.

ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் "பிள்ளையார்", "பிள்ளையார்" என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹா விஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா
என்ற படைப்பு புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

1. எது இதமானது ?
தர்மம்.

2. நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார் ?
சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.

7. குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.

14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார் ?
நல்லதைக்
கேட்காதவன்.

24. ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

அன்புடன்"  பகிரவும்  "அனைவரும்  உயர

புண்யமாதம் புரட்டாசி

மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத் தில், “பாத்ரபதம்’ எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படு கிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிர வேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.

இந்த மாதம், பிதுர்களுக்குரிய வி டுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்த தும், எம தர்மன் அவர்களை பூமி க்குச் செல்லும்படி உத்தரவிடுகி றார். அவர்களும் தங்கள் உறவுக ளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரத மையி ல் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்’ என்பர்; “பட்சம்’ என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள்.

இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகு தியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகா பரணி’ என்றும், அஷ்டமி யை, “மத்யாஷ்டமி’ என்றும், திரயோ தசியை “கஜச் சாயை’ என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்க ளுமே, பிதுர் வழிபாட்டுக்கு உக ந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வா ண்டில் Oct 8) மற்ற அமாவாசை களைக் காட்டிலும் அதிக பலன் தரும்.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டா சியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனை த் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மா தமாக இருக்கிறது. தென் மேற்கு திசை யை, “கன்னி மூலை’ என்பர். இதனால் தான், கோவி ல்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப் பட்டிரு ப்பார். இவரை, “கன்னி மூலை கணபதி’ என்பர். சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பையில் உள்ள கன்னி மூலை கண பதி கோவிலைத் தரிசித்த பிறகே மலை யேறுகின்றனர். ஏதாவது வேண்டுதல் வைத்து, மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும்.

நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள்.
அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரத த்திற்கு உகந்த வை. இவ்வாண்டு நான்கு சனிக் கிழமைகளிலும் (செப்., 22, 29, அக்., 6, 13,) பெரு மாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனா ல், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திரு ப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாத த்தில் கொண்டாடப்படுகிறது.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ் வாண்டு Oct 10– அக்., 18) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பா ளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக வும் வழிபடு கிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண் டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசே ஷ பூஜைகள் நடக்கும். இந் நேர த்தில் வீடுகளிலும், கோவில் களிலும் கொலு வைப்பது சிறப் பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின் றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில் களில், “பாரி வேட்டை’ எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
முருகனுக்கும் இம்மாதத்தில் விழா உண்டு.

திருப்பரங்குன்ற
த்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பால பிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர் ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நட க்கும். அங்குள்ள காசி விஸ்வ நாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம். இம்மாதத்தில், தவறாமல் வழி பாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

சனி மஹா பிரதோஷம்

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும்.

அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது

ஐதீகம்.

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும்.

சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது.

எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது........

அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும்,

தோஷங்கள் நீங்குகிறது.

எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

சனி மஹா பிரதோஷம்:

**********

சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம்.

ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்.

ஆன்மீகக் கதைகள்

ஒரு சமயம் கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். இரவாகி விட்டது. மூவரும் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினார். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒருசேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்துக்கு ஒருவராகக் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அந்த உருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்யவேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்ட அர்ஜுனன், கோபம் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட, அது பூதாகாரமாய் விளங்கியது. இறுதியில் அர்ஜுனனைப் பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. இரண்டாம் ஜாமம் தொடங்க, பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது, மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்து விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்க, பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு தூங்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப் பார்த்த கிருஷ்ணர், கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களையும், அழகான முட்டைக்கண்களையும் கண்டுதான் என்றார் கிருஷ்ணர், சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர், துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும்போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறி விட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்குச் சமமாகி விடுவான். கோபத்தையும் குறைப்பவனே ஞானி என்றார் கிருஷ்ணர்.

Monday, July 23, 2018

கல்* உப்பு--ஒரு வரப்பிரசாதம்!!★

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!

மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!

மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!

அதேபோல,  பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...; கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!;  என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!

உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!!  நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;

மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.

முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!

நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் !!

இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??

இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!

“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!

மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!

‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?

இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ""Ora Science""என்று சொல்வாங்க!!

எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)..... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!

உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள்!!!

கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!

இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!

உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி  அதிகரிக்கும்போது; அதுவே  அதிர்வுகளாக (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!!  எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!

ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!!  இதுவும் அறிவியல்தான்!!

எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்;  எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்;  விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
🌊➕➖💐
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!!  அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!!  அப்படி வாங்கினால்,  கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!!  இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!,  என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா!!

இவண் ப.ராமு

Thursday, July 19, 2018

எருக்க இலையும்.. பீஷ்மரும்..​

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கயை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

அவரைப் பார்த்த பீஷ்மர், ‘மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன?’ என்றார்.

அதற்கு வியாசர், ‘பீஷ்மரே! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.’

பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், ‘இதற்கு என்ன பிராயச்சித்தம்?’ என்று வியாசரிடம் கேட்டார்.

‘பீஷ்மா! ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது.  உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி’ என்றார் வியாசர்.

அதையடுத்து பீஷ்மர், ‘என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்’ என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.

வியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, ‘பீஷ்மா! எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் ‘அர்க்க பத்ரம்’. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும்’ என்றார்.

அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், ‘வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.

Monday, July 16, 2018

ஆடிப்பிறப்பு ! 17 -07 -18

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி யின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவ தைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஆடி மாதச் சிறப்பு

ஆடி மாதம்

தமிழ் வருடத்தின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் முதலே விழாக்கள், உற்வசங்கள், பண்டிகைகள் ஆகியவை தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறுகின்றன‌.

ஆடிப்பெருக்கு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அஷ்டமி, ஆடிக்கிருத்திகை, ஆடி சதுர்த்தி, ஆடிப்பஞ்சமி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என ஆடி மாதம் முழுவதும் தெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆடி மாதம் என்பது கோடைகாலம் முடிந்து சிலுசிலு காற்றோடு சாரல் ஆரம்பிக்கும் பருவம்.

பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை.

ஆடி மாதத்தில் நடைபெறும் விழாக்கள் பற்றிப்பார்க்கலாம்.

தலை ஆடி

ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.

புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர்.

அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படுகிறது.

சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது.

பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள்.

தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.

மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.

சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசௌகரியத்தைக் கொடுக்கும்.

எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள்.

இதனால் தான் ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழி இன்றும் வழக்கத்தல் உள்ளது.

ஆடிச்செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு வீட்டிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் ஒளவையார் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஆடிச்செவ்வாய் இரவு ஊரில் உள்ள வயதில் மூத்த பெண்மணி தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினைக் கொண்டு

உப்பில்லா கொழுக்கட்டையை தயார் செய்து

ஒளவையாருக்குப் படைத்து

தேங்காய் உடைத்து
ஒளவையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவர்.
இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர்.
இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக கருதப்படுகிறது.

ஆடி வெள்ளி

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர்.

கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்கின்றனர்.

ஆடிச்செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆடிக் கூழ் ஊற்றப்படுகிறது.

கேப்பை அல்லது கம்பு மாவினைக் கொண்டு கூழ் தயார் செய்யப்படுகிறது.

அதனுடன் சிறு வெங்காயம் சேர்த்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் கோடை வெப்பம் முடிந்து காற்றோடு சாரல் மழை பெய்யும்.

இதனால் அம்மை நோய் பரவும்.
கேப்பை மற்றும் கம்பு தானியம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
சின்ன வெங்காயம் அம்மை நோய் கிருமியை கட்டுப்படுத்தும்.
இதனாலே நம் முன்னோர்கள் கோவில்களில் கூழ் தயார் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி இருக்கின்றனர்.
இன்றளவும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆடிக்கார்த்திகை

ஆடிக்கார்த்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

ஆடிக்கார்த்திகைக்கு விரத முறை மேற்கொள்ளப்பட்டு முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் நீர் நிலைகளில் செய்யப்படுகிறது.

அன்று பித்ருக்களுக்காக மக்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர்.

பித்ரு பூஜை வருடத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை அன்று பெரும்பான்மையான மக்களால் நடத்தப்படுகிறது.
வம்சம் தழைக்கவும், சுபிட்ச வாழ்வும் வேண்டி மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.
இராமேஸ்வரம், பாபநாசம் போன்ற இடங்களில் பித்ரு பூஜை செய்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று தான் திருவையாற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சியளித்தார்.
இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இன்றும் இந்நிகழ்வு ஆடி அமாவாசை அன்று நிகழ்த்தப்படுகிறது.

ஆடிப்பௌர்ணமி

ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன்
தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர்.
ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும்.
கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது.

உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள்.

கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பௌர்ணமியில் காட்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 11-ம் நாள் தபசுக் காட்சி நடைபெறுகிறது.

ஆடி நவராத்திரி

இம்மாதத்தில்தான் வாராஹி அம்மனை நினைத்து ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம்
ஆடிப்பூரத்தில் தான் திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

3 நாட்கள் கழித்து பக்தர்களுக்கு கண்ணாடி வளையல்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

இவ்வளையல்களை அணிவதால் குழந்தைப்பேறு கிட்டும்: மாங்கல்ய பலம் கூடும் என்று கருதப்படுகிறது.

ஆடிப்பூரத்தில் தான் பொறுமையின் வடிவமான பூமா தேவியின் அவதாரமாக ஆண்டாள் அவதரித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு குழந்தைப் பேறு இல்லை. இக்குறையை நீக்குமாறு அவர் தினமும் திருமாலை வேண்டினார்.

அக்குறையை நீக்கும் பொருட்டு கோவில் நந்தவனத்தில் நள வருட ஆடிப்பூர செவ்வாய் கிழமையில் துளசி செடிக்கு அடியில் பெண்குழந்தை ஒன்றைக் கண்டு எடுக்கும்படி திருமால் அருளினார்.

அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.
கோதை அரங்கனையே மணாளனாகக் கருதி வளர்ந்து வந்தாள்.
பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்கு கட்டும் மாலையை தினமும் அவர் அறியாத வண்ணம் அணிந்து மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து வந்தாள் கோதை.
ஒருநாள் இச்செயலைக் கண்ட பெரியாழ்வார் அதிர்ச்சியுற்று
கோதையைக் கடிந்து கொண்டு
வேறு மாலையைத் தயார்செய்து பெருமாளுக்கு சூட்டினார்.
அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள்,

" உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள்.
எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் " என்று கூறினார்.
இதனால் கோதை அன்று முதல் சூடிக்கொடுத்த சுடர்கொடி, ஆண்டாள் என்று வழங்கப்பட்டாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் இன்றளவும் மக்களால் பாடப்படுகின்றன.
ஆண்டாளை மன உறுதியுடன் வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு வருடம் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகள் நதி அன்னையிடம் வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு மேற்கொள்ளப்படும் வழிபாடாகும்.

இவ்விழா காவிரி நதிக்கரையோர மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் ஆடிப் பெருக்கன்றே விதைகள் விதைக்கப் படுகின்றன.
ஆடி மாதப் பருவநிலை விவசாயத்திற்கு உகந்தது.

எனவே தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.
ஆடிப் பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.

காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குகின்றனர்.

பின்னர் மஞ்சள் நூலை கழுத்தில்கட்டிக் கொள்கின்றனர்.

ஸ்ரீரங்கநாதரும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் எழுந்தருளி காவிரிக்கு சீர்பொருட்களை வழங்குவார்.
ஆடிப்பெருக்கு ஒவ்வோர் ஆண்டில் ஆடி-18ல் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி என்றும்,

வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகின்றன.
வளர்பிறை தசமி அன்று திக்வேதா விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
திசை தெய்வங்களுக்கு அன்று வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தல், பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றால் தீவினைகள் நீங்குவதாகக் கருதப்படுகிறது.

ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது.
இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது.

கிராமங்களில் கிராம எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

கருடாழ்வார், சுந்தரநாயனார், கலிய நாயனார், புகழ்சோழ மூர்த்தி நாயனார், ஆளவந்தார், புண்டரிகாவுர், கந்தாடை, தோழப்பர், பத்ரிநாராயண ஆழ்வார் போன்றோர் ஆடியிலே அவதரித்தவர்கள் ஆவர்.

சுருங்கச் சொல்லின் ஆடி மாதத்தில் தனிமனித விழாக்களைத் தவிர்த்து
பண்டிகைகள் போன்ற பொது விழாக்கள் சிறப்பாக‌ கொண்டாடப்படுகின்றன.

Saturday, July 14, 2018

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்

W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)

Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)

Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)

N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.

D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி

இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG

மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)

G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்

சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.

அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

Wednesday, February 7, 2018

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!



ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

1) முதலில் 'https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.

2) 'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.



3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.

4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.

5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.

6) இந்தப் பக்கத்தில் Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)



7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்

8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)

9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.

10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.

ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.

- Thanks Vikatan News