Wednesday, October 30, 2013

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 40



1. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
2.
மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
3.
மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
4.
மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
5. (
உலகின்) மிக நீளமான கடற்கரை மெரினா கடற்கரை (14 km )
6.
மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
7.
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
8.
மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
9.
மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
10.
கோயில் நகரம் மதுரை
11.
தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
12. (
ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம்
13.
மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....


Tuesday, October 22, 2013

தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய தளங்கள்

1.தமிழ் இலக்கிய - இணைய இதழ் - இலவச தமிழ் இ-புத்தகங்கள்

2.News 4 Employment: TET + TNPSC மின்னியல் புத்தகங்கள் இலவசம்

3.Tech Share: தமிழ் புத்தகங்களை இலவசமாக Download செய்ய

4.free tamil ebooks.com-. கட்டற்ற தமிழ் மின் புத்தகங்கள். | ksnanthusri

5.Open Reading Room

6.தமிழ் புத்தகங்கள் ~ nanbanmani.blogspot.in

7. கூகுள் மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய தேவையான மென்பொருள்..! - தமிழ் உலா

8.இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள் | தமிழ் கம்ப்யூட்டர்

9.http://anatomictherapy.org/tl-tamilbookdownload.html

10.APOLLOPARTHIBAN: இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க  

Monday, October 21, 2013

நமது நாட்டில் சேல்ஸ்மேன்கள்

நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

காக்கா சுட்ட கதை

இரண்டு நாட்களுக்கு முன்னால், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன்.

அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்..?

அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்...

இன்று, வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை.

அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே, பிறகு அமைதியாக சொன்னார்...

டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா. இன்னைக்கு கோட்வேட்(password) குயில் டா...!

பொது அறிவு தகவல்கள்

1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா.
1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
தோன்றியது.
3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன்
தோன்றியது.
4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில்
இயக்கப் படுகிறது.
6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
7.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான
பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம்
நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
9.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில்
எடுத்தவர் டெண்டுல்கர்.
10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121
ஆண்டுகள் ஆகின்றன.
11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன
பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது.
இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.
12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர்
ஈனோவிட்.
13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள்
சீனர்கள்.
14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர்
‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’
எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர்
பகுதியில் காணப்படுகிறது.
15.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள்
அமெரிக்கர்கள்.
16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள்
என்று பெயர்.
17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை,
மலேசியா, சிங்கப்பூர்.
18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங்
மாளவியா.

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

இடது கையை இழந்த ஒருவனின் கராத்தே கலை

இடது கையை இழந்த ஒருவன்,கராத்தே கலையை
கற்று,கராத்தே போட்டிகளில் முதலாவதாக வர எண்ணி
ஒரு குருவிடம் போகிறான்.....

முதலில் அவன் நிலையை அறிந்த குரு அவனுக்கு
ஒரு 'கிக்'(அதாவது உதை,வேறு கிக் அப்படின்னு
நீங்க நினைத்தால் நான் பொறுப்பல்ல)மட்டுமே
சொல்லி கொடுத்து அதையே தொடர்ந்து பயிற்சி
செய்ய சொல்கிறார்....

ஆனால் பிறருக்கு இன்னும் பல சொல்லி கொடுக்க
இவன் மனம் உடைகிறான்....
ஆனாலும் குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு அந்த
ஒரே கிக்கை மட்டும் மிகவும் முயற்சி செய்து பலமுறை
பயிற்சி செய்கிறான்...

போட்டி நாளும் வந்தது...

அனைத்து போட்டிகளிலும் இவனே வெற்றி பெற்று
ஒட்டு மொத்த championship வெல்கிறான்...யாராலும்
இவனை வீழ்த்த முடியவில்லை,

குருவிடம் இது எப்படி சாத்தியம் ஆயிற்று? என்று கேட்க,
குரு சொன்னார்....

"உன் இந்த கிக்கை சமாளிக்க வேண்டும் என்றால் உன்
இடது கையை பற்றி திருக வேண்டும் அது உன்னிடத்தில்
இல்லை"

Bruce Lee :
--------------
"I'm not fearing of the one who knows 10,000 kicks but,
I'm really fearing on the one who practices a kick 10,000 times"

முல்லாவும் தலைவரும்

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் !

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241