இடது கையை இழந்த ஒருவன்,கராத்தே கலையை
கற்று,கராத்தே போட்டிகளில் முதலாவதாக வர எண்ணி
ஒரு குருவிடம் போகிறான்.....
முதலில் அவன் நிலையை அறிந்த குரு அவனுக்கு
ஒரு 'கிக்'(அதாவது உதை,வேறு கிக் அப்படின்னு
நீங்க நினைத்தால் நான் பொறுப்பல்ல)மட்டுமே
சொல்லி கொடுத்து அதையே தொடர்ந்து பயிற்சி
செய்ய சொல்கிறார்....
ஆனால் பிறருக்கு இன்னும் பல சொல்லி கொடுக்க
இவன் மனம் உடைகிறான்....
ஆனாலும் குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு அந்த
ஒரே கிக்கை மட்டும் மிகவும் முயற்சி செய்து பலமுறை
பயிற்சி செய்கிறான்...
போட்டி நாளும் வந்தது...
அனைத்து போட்டிகளிலும் இவனே வெற்றி பெற்று
ஒட்டு மொத்த championship வெல்கிறான்...யாராலும்
இவனை வீழ்த்த முடியவில்லை,
குருவிடம் இது எப்படி சாத்தியம் ஆயிற்று? என்று கேட்க,
குரு சொன்னார்....
"உன் இந்த கிக்கை சமாளிக்க வேண்டும் என்றால் உன்
இடது கையை பற்றி திருக வேண்டும் அது உன்னிடத்தில்
இல்லை"
Bruce Lee :
--------------
"I'm not fearing of the one who knows 10,000 kicks but,
I'm really fearing on the one who practices a kick 10,000 times"
No comments:
Post a Comment