இந்திய ரூபாய் நோட்டுகளிலேயே இரண்டு கரன்சி நோட்டுகளில் மட்டுமே இந்தியாவின் பூகோள இடங்கள் இடம் பெற்றுள்ளன. நூறு ரூபாய் நோட்டில் இமயமலையின் பனி படர்ந்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இருபது ரூபாய் நோட்டில் அந்தமான் தீவின் இயற்கைக் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தமானின் பாம்பு பிளாட் துறைமுகத்தில் இருந்து ஹாரியட் மலைக்கு செல்லும் வழியில் இருபது ரூபாய் நோட்டில் இடம் பெற்ற இயற்கை காட்சியைக் காணலாம். இருபது ரூபாய் வியூ பாய்ண்ட் என்ற பெயரிலேயே இந்த இடம் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் மற்ற சுற்றுலா இடங்களை போல் வர்த்தகமயமாக பிரபலப்படுத்தி லாபம் சம்பாதிக்கும் இடமாக இந்த இருபது ரூபாய் வியூ பாய்ன்ட் மாறவில்லை. ஒரு காலத்தில் ஹாரியாட் மலையில் அந்தமானின் தலைமை கமிஷனரின் கோடைகால வசிப்பிடம் இருந்தது. அந்தமானிலேயே இரண்டாவது உயரமலையான இதில் இப்போது இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். தென்னை, பனை மரங்கள் சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதி அந்தமான் கடலை நோக்கி காணப்படுகிறது.
அதன் முனையில் 72மீட்டர் உயரமான வடக்கு கரை கலங்கரை விளக்கத்தையும், தெற்கு கரையில் நிக்கோபர் தீவின் முனையில் உள்ள இந்திரா முனை கலங்கரை விளக்கத்தையும் காண முடிகிறது. இரண்டு கலங்கரை விளக்கங்களும் 1972ல் தான் கட்டப்பட்டன. தெற்கு கரை கலங்கரை விளக்கத்தை விட வடக்குக் கரை கலங்கரை விளக்கம் இரண்டு மடங்கு பெரியது. போர்ட் பிளேர் துறைமுகத்தின் நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு கரை கலங்கரை விளக்கத்திலிருந்து 12 வினாடிகளுக்கு ஒரு முறை இரண்டு வெள்ளை நிற ஒளி பாய்ச்சப்பட்டு கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது.
வார்ப்பு இரும்பால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கங்கள் மீது வண்ணங்களால் பட்டைகள் வரையப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஹாரியாட் மலையில் அந்தமானின் தலைமை கமிஷனரின் கோடைகால வசிப்பிடம் இருந்தது. அந்தமானிலேயே இரண்டாவது உயரமலையான இதில் இப்போது இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். தென்னை, பனை மரங்கள் சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதி அந்தமான் கடலை நோக்கி காணப்படுகிறது.
அதன் முனையில் 72மீட்டர் உயரமான வடக்கு கரை கலங்கரை விளக்கத்தையும், தெற்கு கரையில் நிக்கோபர் தீவின் முனையில் உள்ள இந்திரா முனை கலங்கரை விளக்கத்தையும் காண முடிகிறது. இரண்டு கலங்கரை விளக்கங்களும் 1972ல் தான் கட்டப்பட்டன. தெற்கு கரை கலங்கரை விளக்கத்தை விட வடக்குக் கரை கலங்கரை விளக்கம் இரண்டு மடங்கு பெரியது. போர்ட் பிளேர் துறைமுகத்தின் நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு கரை கலங்கரை விளக்கத்திலிருந்து 12 வினாடிகளுக்கு ஒரு முறை இரண்டு வெள்ளை நிற ஒளி பாய்ச்சப்பட்டு கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது. வார்ப்பு இரும்பால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கங்கள் மீது வண்ணங்களால் பட்டைகள் வரையப்பட்டுள்ளன.