Friday, March 13, 2015

நெல்லை வன உயிரினச் சரணாலயம்

தமிழகத்தின் 15-ஆவது வனச் சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் வனச் சரணாலயங்களில் இருந்து மீதமிருக்கும் பசுமை மாறா பகுதிகளை ஒன்றிணைத்து சுமார் 35,673 ஹெக்டேர் பரப்பளவில் நெல்லை வன உயிரினச் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது
14 வன உயிரினச் சரணாலயங்களும்,
5 தேசியப் பூங்காக்களும்,
14 பறவைகள் சரணாலயங்களும்,
4 புலிகள் காப்பகங்களும்,
4 யானைகள் காப்பகங்களும்,
3 உயிர்க்கோள் காப்பகங்களும்,
ஒரு பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதியும் உள்ளன.

தமிழகத்தில் 22,877 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு வனப் பகுதிகள் உள்ளன. அதில் 2,948 சதுர கிலோ மீட்டர் காடுகள் அடர்ந்த காடுகளாகும்.

No comments:

Post a Comment