Saturday, March 21, 2015

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் :

Over = வீச்சலகு
Pitch = வீசுகளம்
Out = ஆட்டமிழப்பு
Wicket = முக்குச்சி
Middle Stump = நடுக்குச்சி
Out Swinger = வெளிநாட்ட வீச்சு
Inswinger = உள்நாட்ட வீச்சு
Maiden Over = வெற்றலகு
Wicket Maiden = வீழ்வெற்றலகு
Leg Side = கால்புறம்
Off Side = எதிர்ப்புறம்
Wicket Keeper = முக்குச்சிக்காரன்
Boundary = எல்லை
One Step Forward = முன்கால்வைப்பு
Square Cut = செந்திருப்பு
Run = ஓட்டம்
Bowler = பந்தாள்
Batsman = மட்டையாள்
All Rounder = முழுவல்லார்
Fielder = களத்தர்
Bouncer = எகிறன்
Hook Shot = கொக்கியடி
Sweep Shot = துடுப்பு வலிப்படி
Pull Shot = இழுப்படி
Straight Drive = நேர்செலுத்தடி
Yorker = நேர்க்கூர் எறி
Leg Spin = வெளிவிலகுச் சுழல்
Off Spin = உள்விலகுச் சுழல்
Sixer = ஆறடி
Four = நான்கடி
Century = நூற்றீடு
Half Century = அரை நூற்றீடு
Commentry = நிகழ்சொற்றி
Commentator = நிகழ்சொற்றியர்
Appeal = முறையீடு
Run Rate = ஓட்ட ஈட்டுகை
Asking Rate = வேட்பீட்டுகை
Attacking Shot = தாக்கடி
Attacking Field = இறுக்கக் களம்
Back Foot = பின்கால்
Bail = குருத்து
Duck Out = சுழிப்பலி
Doosra = பிறழ்சுழல்
Run Out = ஓடுபலி

இன்னும் உருவாக்க வேண்டிய சொற்கள் பல. இவற்றுள் சில, தமிழ் நிகழ்சொற்றியர் மத்தியில் புழக்கத்திலும் உள்ளன. வேண்டுமெனில் இவ்வாட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துச் சொற்களுக்கும் செந்தமிழ்ச் சொற்களை ஆக்கித் தர இயலும் !
- கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment