வட சென்டினல் தீவு
(North Sentinel
Island)
வங்காள
விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஒன்று தான் இந்த வட சென்டினல் தீவு. ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஓர் சின்ன
தீவு தான். இங்கு இன்றும் வெளியுலகம் தெரியாத
காட்டுவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஓர் நேஷனல்
ஜியாக்ராபிக் (national
geographic) இயக்குனர் இவர்களை படம்பிடிக்க, தொடர்புகொள்ள அனுமதி கோரியது. ஆனால், இந்திய அரசு அவர்களை தொடர்புக்கொள்ள அனுமதி வழங்க
மறுத்துவிட்டது.
லாஸ்குக்ஸ்
குகைகள் (Lascaux Caves)
தெற்கு பிரான்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த லாஸ்குக்ஸ் குகைகள் (Lascaux Caves).இங்கு ஏறத்தாழ 20,000 வருடங்களுக்கும் பழமையான ஓவியங்கள்
இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிருகங்களின் ஓவியங்கள் தான். மார்செல் ரவிதத் எனும் 18 வயது இளைஞன் இந்த குகையை கடந்த 1942-ம் ஆண்டு தன் நண்பர்களுடன் கண்டுபிடித்தான்.
பிறகு இவனது நண்பர்களுடன் ஊருக்குள் சென்று இப்படி ஒரு குகையை கண்டதை
கூறினான். 1948-ம் ஆண்டு இந்த குகை மக்களுக்காக திறந்துவிடப்பட்டது. ஆனால்
மக்களிடம் இருந்து வெளிப்படம் CO2 இந்த ஓவியங்களை அழிக்கிறது என்பதால்
யுனெஸ்கோ இந்த இடத்திற்கு மக்கள் செல்ல 1963-ம் ஆண்டு தடைவிதித்தது.
மெட்ரோ 2 (Metro 2)
மாஸ்கோவில் இருக்கும் ஓரிடம் தான் இந்த மெட்ரோ 2. இதன் கோட் பெயர்
D-6. இந்த இடத்தில் 30,000 மக்களை தங்க வைக்க முடியும். இது
கிரெம்ளினிலிருந்து எப்எஸ்பி தலைமையகம் வரை செல்ல வழியை இணைக்கிறது. இந்த
இடமும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
ஐஸ் கிராண்ட் புனிதப்பள்ளி (Ise Grand Shrine)
பி.சி நான்காம் நூற்றாண்டில் இருந்து இந்த புனிதப்பள்ளி இருப்பதாய்
கூற்றுகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இருக்கும் நூற்றுக்கணக்கான
புனிதப்பள்ளிகளில் இது மிகவும் அச்சமிக்க இடமாக கருதப்படுகிறது. ஜப்பானின்
ஏகாதிபத்திய குடும்ப நபர்களை தவிர இந்த இடத்திற்கு வேறு யாரும் செல்ல
முடியாது.
அரச குடும்பத்தை தவிர இந்த இடத்தினுள் என்ன இருக்கிறது என வேறு யாரும்
கண்டதில்லை. வெளியில் இருந்து இதன் கூரையை தவிர வேறு எதையும் மக்கள்
கண்டதில்லை என இவ்விடத்தை சுற்றி இருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.
கிழக்கு ரெண்வெல், சாலமன் தீவுகள் (East Rennell, Solomon Islands)
கிழக்கு ரெண்வெல், சாலமன் தீவுகள் (East Rennell, Solomon Islands)
கிழக்கு ரெண்வெல் தீவுகள் யுனெஸ்கோவால் உலக மரபு இடமாக அறிவிக்கப்பட்ட
ஒன்றாகும். இங்குள்ள உள்ளூர் மக்களால் இந்த இடத்தில் இராட்சத மனிதர்கள்
இருப்பதாகவும், அவர்கள் தலையை கொய்து நரமாமிசம் உண்பவர்கள் என்றும்
நம்பப்படுகிறது.
ஈஸ்டர் தீவு, சிலி (Easer Island, Chile)
பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த ஈஸ்டர் தீவு. உலகில்
உள்ள தனிமைப்படுத்தப்படுள்ள இடங்களில் இதுவும் ஒன்று. இது சிலியுடன்
இணைந்திருக்கும் ஓர் பகுதி. பண்டைய காலம் முதலே இந்த இடம் மக்களை
தனிமைப்படுத்தி வைக்கும் விதத்தில் தான் அமைக்கப்படிருந்ததாக
கூறப்படுகிறது.
பாம்புகள் தீவு (Snake Island)
பிரேசிலில் இருக்கும் ஸ்ம் பாலொ கடற்கரை பகுதியில் அமைந்திருக்கிறது
இந்த பாம்புகள் தீவு. ஒவ்வொரு சதுர அடியிலும் ஒரு பாம்பையாவது நீங்கள்
இங்கு காண முடியும். கோல்டன் பிட்வைப்பர் (Golden Pit Viper) எனும் வகையை
சேர்ந்த பாம்புகள் தான் இங்கு அதிகமாக இருக்கின்றன.
பிரேசிலின் கப்பற்படை அதிகாரிகள் இந்த தீவையும், இந்த வகை
பாம்புகளையும் காக்க, இந்த இடத்தை மூடி வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள்
மற்றும் ஆய்வாளர்கள் மட்டுமே இந்த தீவிற்கு சென்று வர முடியும். பொது
மக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இங்கு செல்ல முன்கூட்டியே சிறப்பு அனுமதி
பெறவேண்டும்.
போவேக்லியா, இத்தாலி (Poveglia, Italy)
வடக்கு இத்தாலி பகுதியில் வெனிஸ் மற்றும் லிடோ இடங்களுக்கு மத்தியில்
அமைந்திருக்கிறது இந்த சிறிய தீவு. 1348-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட ஓர் பிளேக்
நோய் தொற்றினால் மக்கள் பெரும்பாலானோர் இந்த இடத்தை விட்டு
வெளியேறிவிட்டதாகவும், இங்கு இருந்தவர்கள் இப்போது வெனிஸ் பகுதியில்
வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
பிளேக் நோயால் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்றும்
அவர்களை பெரிய பெரிய பிணத்தை எரிக்கும் கட்டைகளை வைத்து ஒட்டுமொத்தமாக
எரித்தனர் என்றும் கூறுகிறார்கள். இன்றளவும் இந்த இடத்திற்கு செல்ல மக்கள்
அஞ்சுவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment