Tuesday, September 5, 2017

குற்றம் 23 – இல்லுமிநாட்டி அரசியல் !

சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்களை நான் பொறுமையாக கவனித்து வருகிறேன், அதற்கு ஒரே காரணம் உலகை ஆளும் இல்லுமினாட்டிகள் தங்களது ரகசியங்களை தற்போதைக்கு திரைப்படங்கள் மூலமே பரிமாறிக்கொள்கிறார்கள் .தற்சமையம் இல்லுமினாட்டிகளின் பார்வை தமிழர்கள் மீது தான் உள்ளது என்பதை சமீபத்திய தமிழக அரசியல், பிரச்சனைகள் மூலம் அறியலாம் .

தமிழ் திரைத்துறை தற்சமையம் நிறைய இல்லுமினாட்டிகளின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த “குற்றம் 23”.
இந்தப்படம் முழுக்க முழுக்க இல்லுமினாட்டிகளின் திரைக்கதை தான் , தயாரிப்பும் அவர்களே , தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டுமே வெள்ளை குதிரைகளை இலட்சனையாக கொண்டுள்ளன. ஜெயலலிதா கட்டிய குதிரை சிலை , மற்றும் தமிழ்நாடு குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் இலட்சனை என்ன என்பதையும் இங்கே பொருத்தி பாருங்கள் . எல்லாம் வெள்ளை குதிரை தான் .. ஆம் குதிரை வணிகத்தின் சின்னம் !

சரி படத்திற்கு வருவோம், கதாநாயகனின் முதல் காட்சியில் அவன் அணிந்து வரும் சட்டையில் “G” என்ற ஆங்கில எழுத்து உள்ளது , இது இலுமினாட்டிகளின் எடுபுடி வேலைகளை செய்யும் ப்ரீ மேசன்களின் சின்னம். சரி இது ஒரு எதார்த்தமான ஒன்று என்று எடுத்துக் கொள்வோம்...

படத்தின் இடைவெளியில் கதாநாயகனின் ஒரு கண்ணை மட்டும் காட்டி முடிப்பது , பேப்பர் வெயிட் என்ற பெயரில் இல்லுமினாட்டிகளின் பிரமிட்(pyramid) சின்னத்தை வேண்டும் என்றே காட்டுவது என பல இல்லுமினாட்டி அடையாளங்கள் இந்த படத்தில் உள்ளது ...

மற்றும் படத்தின் வில்லனுக்கு நீல கண் , தமிழகத்தில் யாருக்குமே அமையாத ஒரு மரபியல் கூறு ....நீலகண் கொண்ட வில்லன்..

சரி படத்தின் பெயருக்கு வருவோமே .. இந்த 23 என்பது இல்லுமினட்டிகளுக்கு ஒரு வேண்டப்பட்ட எண்..இது மனித கிரோமோசோம்களின் எண்ணிக்கையை குறித்தாலும் , இந்த படத்திற்கு இந்த பெயர் வைக்க இன்னும் நிறைய தொடர்பு உண்டு .உலக அளவில் 23 என்ற எண்ணில் பெயர்கொண்டு நிறைய திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இல்லுமினாட்டிகளின் ஒரு மாபெரும் சதித்திட்டமான 911 தாக்குதல் 2001 ஆம் ஆண்டு நடந்தது , 9+11+2+0+0+1= 23 , உலக புவி மையஅச்சு 23 டிகிரி தான்.. இன்னும் பல.. இவைகள் 23 ஐ ஒரு முக்கிய எண் ஆக்குகிறது , எனிக்மா 23 (enigma 23) என்று இணையத்தில் தேடி பாருங்கள் உங்களுக்கே இந்த எண்ணின் ரகசியங்கள் புரியவரும்.

தமிழகத்தில் உள்ள அணைத்து ஆண்களையும் , ஆண்மையற்றவர்களாக மாற்றிவிட்டு , குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் அப்படியே பெத்துக்கிட்டாலும் அது உன் குழந்தையாக இருக்க நாங்க விட மாட்டோம், உனக்கு குழந்தை வேணும்னா போய் தத்து எடுத்துக்கோ .. இவ்ளோ தான் இந்த படத்தில் இல்லுமினாட்டி தமிழக ஆண்களுக்கு சொல்லும் மறைமுக உளவியல் கருத்து .

பெண்ணே உனக்கு குழந்தை இல்லைனா யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க , உனக்கு குழந்தை பெத்துக்க ஆண் தேவையில்லை ,உனக்கு எப்படி பார்த்தாலும் அது வாரிசு தானே ? அதனால் குழந்தை இல்லை என்று வருத்தப்பட வேண்டாம் , எப்படியும் குழந்தை வேண்டும் என்றால் அப்பன் யாருன்னு தெரியாத குழந்தைய பெத்துக்கோ ..இவ்ளோ தான் தமிழக பெண்களுக்கு இப்படம் சொல்லும் மறைமுக உளவியல் கருத்து .

மற்றும் குழந்தை வளர்ப்பு என்பது ஏதோ மிகக் கடினமான செயல் போல படத்தில் இரண்டு மூன்று இடங்களில் வழிந்து சொல்லப்படுகிறது , இதுவும் ஒரு உளவியல் தாக்குதல் ..மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவரனுமாம் ..

என்று இவர்கள் தமிழ் நாட்டில் மட்டும் மது கடைகளை அரசாங்கத்தை வைத்து திறக்க விட்டார்களோ , எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக கொடுத்தார்களோ ....அப்போவே தெரியும் தமிழக ஆண்களை ஆண்மையற்றவர்களாக மாற்ற திட்டம் தீட்டிவிட்டார்கள் என்று.

இயற்கையில் ஒரு உயிரின் அடிப்படை நோக்கம் தனது மரபை அடுத்தத் தலைமுறைக்கு கடத்துதல் ஆகும். அதற்க்கு ஒரு சில நிபந்தனைகளோடு இயற்கை வளிமையான மரபுகளை மட்டுமே அடுத்தத் தலைமுறைக்கு கடத்தும் , இதற்கு பெயர் இயற்க்கைதேர்வு (natural selection ). இயற்கைதேர்வுக்கு முரணாக ஒரு சில பண்புகளை மட்டுமே செயற்கையாக கடத்தி அடுத்தத் தலைமுறையை உருவாக்குதல் தேர்ந்தெடுத்த வளர்ப்பு (selective breeding). அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் மனிதன் பயன்படுத்தும் அத்துணை வீட்டு விளங்குகளும் இவ்வாரான தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் உருவாக்கப்பட்டதே ! இவ்வாறு உருவாக்கப்பட்ட விளங்குகள் மனிதனின் துணை இன்றி மடிந்துவிடும் . காரணம் அவைகள் மனிதன் உருவாக்கிய அடிமை இனங்கள். இப்போ மனிதனையே தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் உருவாக்க திட்டமிட்டு நடைமுறை படுத்தியும் வருகிறார்கள் செயற்கை கருத்தரிப்புமுறை மூலம். இதனால் உருவாகும் அடுத்தத் தலைமுறை விடுதலை சிந்தனை அற்ற அடிமை இனமாக உருவாக்கப்படுவார்கள்.

மனிதனின் மரபணு (genome) முழுமையாக கண்டறியப்பட்டாகி விட்டது , இதன் மூலம் பிறக்கும் குழந்தையின் உடல்கூறு , மன கூறு இரண்டையுமே தீர்மானிக்க முடியும். உடம்பு சரி மனம் எப்படி என்கிறீர்களா ? உலகில் பல வகை நாய்கள் உண்டு அதில் வேட்டைக்கு , கோவத்துக்கு , துனிவுக்கு , மோப்பசக்திக்கு , அன்புக்கு , அறிவுக்கு என்று பல்வேறு வகைகள் தனித்தனியாக மனிதன் முன்பே உருவாக்கி உள்ளான் . இதுவும் தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் தான். இதே முறை மனிதர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படும்.அதற்கு பெயர் யூஜெனிக்ஸ் (Eugenics), மேலும் தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடவும் .

இதன்மூலம் போர்வீரன், அறிவாளி , கூலி , எஜமானன் என்று நான்கு விதமான மனித குணங்கள் கொண்ட விடுதலை உணர்வற்ற மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். இவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்கை இருக்காது .. எல்லாம் சமூக வாழ்க்கை மட்டும் தான் . இன்னும் நிறைய அபாயங்கள் இதனுள் அடக்கம். இவர்கள் அனைவரையுமே ஒரே ஒரு குடும்பம் (bloodline) ஆளும் . ஒரு நவீன அறிவியல் வர்ணாஸ்ரமம் ..

இவை எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்த முதலில் இயற்கைத் தேர்வை நிறுத்த வேண்டும் , அதற்கு முதல் ஆண்களை மலடாக்க வேண்டும் . குடும்ப வாழ்வியலை சிதைக்க வேண்டும் , அதற்கு பெண்ணியம் பேச வேண்டும் , ஆணுக்கு பெண் எதிரி என்ற சிந்தனையை பெண்ணிற்கு புகுத்த வேண்டும் .இப்படி அவர்கள் இலட்சியத்தை அடைய நிறைய படிநிலைகள் உண்டு ...

தமிழர்களை இந்த இயற்கை தான் காக்க வேண்டும் .

தமிழக ஆண்களே மது குடிப்பதை முதலில் நிறுத்தவும் . சிந்திக்க ஆரம்பிக்கவும் .போர் காலம் நெருங்கி விட்டது ...

-பாரி சாலன் .


பலி – தமிழர் அறிவியல்!!

தமிழர்கள் வாழும் கிராமங்களில் அடிக்கடி காணும் ஒரு காட்சி குலதெய்வ கோவிலில் ஆட்டையோ , சேவலையோ கழுத்தை அருத்து பூசாரி ஒருவர் இரத்தம் குடித்து குறி சொல்லுவார், அந்தநேரம் அவரின் உடல் துடித்தாடும் , அசுர பலம் அவருக்கு உண்டாகும், தைரியம் உண்டாகும், சிந்தனை கூர் அடையும், ஒருவித பதட்டம் ஏற்பட்டு அவரை அறியாமல் ஒரு ஆட்டம் ஆடுவார்…

இதை தமிழர்கள் சாமி ஆடுதல், முருகு, கருப்பு ஆடுதல் என பல்வேறு பெயர்களில் அழைப்பதுண்டு.. பலர் இதை ஒரு காட்டுமிராண்டி தனம் எனவும், அறிவுக்குப் புறம்பான உயிர்நேயம் அற்ற தனம் எனவும் தமிழர்களே பேசிவருகிறார்கள் !

உலகம் முழுவதும் வாழ்ந்த அனைத்து இன மக்களும் இதை கடைபிடித்தார்கள் , குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இதை இன்றளவும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
அப்படி என்ன இந்த பலி கொடுத்தலில் அறிவியல் இருக்கப்போகிறது ? அதை ஏன் உலகம் முழுவதும் மக்கள் கடைபிடித்தார்கள் ? இதற்கான பதிலில் தமிழரின் போர் மரபு மறைந்துள்ளது !

இயற்கையில் அனைத்து விலங்குகளிடமும் அட்ரினலின்(adrenaline) அல்லது எபிநெப்ரின்(Epinephrine) என்ற இயக்குநீர் (hormone) உள்ளது! ஒரு விலங்கு அபாயத்தை உணர்ந்தால் இந்த இயக்குநீர் அதன் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும்.இந்த இயக்குநீர் அந்த விலங்கு தப்பித்து ஓட அல்லது எதிர்த்து சண்டையிட தேவையான உடனடி உடல் பலத்தை அந்த விலங்கிற்கு கொடுக்கும்.
அதாவது ஒரு விலங்கு தனக்கு ஆபத்து வருவதை உணர்ந்தவுடன் அட்ரினலின் அட்ரினலின் சுரப்பிகளில் சுரந்து இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும், அட்ரினலின் முதலில் நரம்பு மண்டலத்தை வேகமாக இயங்க உந்துகிறது , அது அந்த விலங்கின் செயல், சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை கூர்மை படுத்துகிறது.
நுரையீரல்களின் திறனை அதிகரித்து மூச்சு திறனை வேகப்படுத்தும், இதயத்துடிப்பை அதிகரிக்கும், இரத்தத்தை கால் நோக்கி நகர்த்தி வேகத்தை கூட்டும், தசைகளை இறுக்கம் பெற செய்து உடல் பலத்தை அதிகரிக்கும்..மற்றும் உடல்கொழுப்பை உடனடியாக கரைக்கும், உடலில் உள்ள சக்கரையை உடனடியாக செரித்து அந்த விலங்கு சன்டையிடவோ அல்லது தப்பிக்கவோ தேவையான பலத்தை உடனடியாக தரும்.

இந்த இயக்குநீர் மனித உடலில் சுரந்தாலும் அதை அதிகரிக்க தமிழர்கள் கண்ட நுட்பம் தான் பலி கொடுத்து இரத்தம் குடித்தல், விலங்கின் கழுத்தை அடிப்பக்கமாக அறுத்தால் அந்த விலங்கின் இரத்தத்தில் பயத்தின் காரணமாக அதிகப்படியான அட்ரினலின் சுரந்து கலந்திருக்கும்.. அதை அப்படியே குடிப்பதின் மூலம் அசூர பலம் உடனடியாக நம் உடலில் உண்டாகும்..

சமீபமாக விக்ரம் நடித்து வெளியான இருமுகன் என்ற இல்லுமினாட்டி படம் இதை மையப்படுத்தி வெளியான படமே!

ஆதிகாலத்தில் தமிழர்கள் போருக்கு தயாராகும் முன் இதற்காகவே பலி கொடுத்தார்கள்.அட்ரினலின் நமது சிந்தனையையும் அதிகரிப்பதினால் அதை சமுக பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுத்தினார்கள் இதுவே குறி கூறுதலாகவும் ! சாமியாடுதலாகவும் தோன்றுகிறது..பலி கொடுத்தலும் தமிழர் மரபே ! அதுவும் ஓர் அறிவியலே ! அதை நாம் ஒருபோதும் இழந்துவிட கூடாது! இதையும் தடைசெய்ய இல்லுமினாட்டிகள் தொடர்ச்சியாக பல முறை முயற்சி செய்து வருகிறார்கள்.. நம் அடையாளங்களை அழியாது காப்போம். உண்மையை ஆராய்வோம் !
.
- பாரி சாலன்


வியாச பூஜை (குரு பூர்ணிமா)

தேஹிமே குரு ஸ்மரணம்
தேஹிமே குரு கீர்த்தனம்
தேஹிமே குரு தர்ஷணம்
தேஹிமே குரு ஸாமீப்யம்
தேஹிமே குரு பதஸேவனம்
தேஹிமே குரூபதேசம்
தேஹிமே குரு ஸாயுஜ்யம்

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்க‌ப்பட்டார்.

வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.

வியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார்.

இந்த வியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.
அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீ சுகப்பிரம்மரிஷிக்கு 'வியாச பூஜை' யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்பட்டு வருகிறது.

ஆஷாட பௌர்ணமி, ஆஷாட சுத்த பௌர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமி தினத்தன்றே, ஸ்ரீவியாச மஹரிஷியின் திருஅவதாரம் நிகழ்ந்ததால், குரு பூர்ணிமை தினத்தன்று, சன்யாசிகள் வியாச பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் தொடங்குகின்றனர்.

சன்யாசிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், மழைக்காலத்தில், புழு, பூச்சிகள் இவற்றின் நடமாட்டம் அதிகரிப்பதால், சன்யாசிகள், இக்காலத்தில் சஞ்சாரம் செய்யும் போது, அவர்களின் கால்களில் பட்டு அவை மடிய நேரிடும். எனவே, அதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள். இதையே, 'சாதுர்மாஸ்ய விரதமாக' அனுஷ்டிப்பது சன்யாசிகளின் வழக்கம்.

வியாச பூஜை தினத்தன்று, ஆதிகுருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே,இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.

சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப்படுவது வழக்கம்.
சன்யாசிகள் மட்டுமல்லது, சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

இந்த நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, 'தான்' எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.
மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் ஆகியவை மிகச் சிறந்தது.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெற்று, வெற்றி பெறுவோம்!!!!!

ஆடி மாதத்தின் சிறப்புகள்

தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு.

தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன.

ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த ஆடி மாதம் வெள்ளிக்கிழமையிலேயே துவங்குகிறது.

ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாத‌ம் எ‌ன்பது அ‌ம்மனு‌க்கு உக‌ந்தது எ‌ன்றாலு‌ம், கு‌றி‌ப்பாக மா‌ரிய‌ம்ம‌ன் வ‌ழிபாடு இ‌ன்னு‌ம் ‌சிற‌ப்பாகு‌ம். ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌ல் மா‌‌ரிய‌ம்மனு‌க்கு கூ‌ழ் ஊ‌ற்‌றி ‌வீடுக‌ளி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் செ‌ய்வா‌ர்க‌ள்.

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான்.


ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது.

புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது. துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.

ஆடி அமாவாசையில் பித்ருக்களை நினைக்க வேண்டும்

சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழி முன்னோர்களை அறிவது, என்றும் சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களை அறிவது என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.

இதற்கு ஒரு புராண சம்பவம் இருக்கிறது

திரேதா யுகத்தில் ஒரு மகரிஷி இருந்தார். இவர் தாய் – தந்தை இழந்த ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த மகன் வளர்ப்பு, தந்தையான மகரிஷி மேல் அதிக பாசத்துடன் இருந்தான். காலங்கள் ஒடியது. மகரிஷி அதிக வயது காரணமாக இயற்கை ஏய்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மகன், ’இதற்கு காரணம் சூரியேனே. சூரிய பகவான்தான் இறந்த ஆத்மாக்களை பித்ரு தேவதையிடம் சேர்ப்பார். அதனால் சூரியனை பிடித்து பழி வாங்க வேண்டும்’ என்று எண்ணி தன் தவ வலிமையால் சூரியனையும் பிடித்து வைத்தது கொண்டார்.

சூரியன் தன் வேலையை செய்யாததால் சந்திரனால் இயங்க முடியவில்லை. இதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. தேவர்களாலும் சரியாக வேலை செய்ய இயலவில்லை. இனி பொறுமையாக இருந்தால் உலகமே அழிந்துவிடும் என்பதை உணர்ந்த ஈசனும், மகாவிஷ்ணுவும், பிரம்மன் மற்றும் தெவர்களும் அந்த மகரிஷயின் புதல்வனிடம் சமாதானம் பேசினார்கள்.

’உயிர் ஒருநாள் பூலோகத்தைவிட்டு சென்றுவிடும். இது இயற்கைதான். அதை நீ புரிந்துக்கொள்ள வேண்டும்.’ என்று அனைவரும் பேசியதால், மகரிஷியின் மகன் சமாதானம் அடைந்தார். அத்துடன் “என் தந்தையை நான் அவ்வப்போது பார்க்க வேண்டும்.” என்று கேட்டதற்கு, ”நீ உன் தந்தையை எப்போதெல்லாம் நினைக்கிறாயே அன்று உன் தந்தையின் ஆத்மா பூலோகாத்திற்கு வரும். அத்துடன் ஆத்மாக்கள் வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த நாள் அன்று பூலோகத்திற்கு அனுப்பப்படும். அந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமானதை கொடுத்து மகிழ்வித்து அனுப்பினால், இந்த ஆத்மாக்களின் ஆசியால் அவரவர் குடும்பத்திற்கு சுபிச்சம் ஏற்படும்.” என்று ஆசி வழங்கினர் மும்மூர்த்திகள்.

பித்ரு உலகம் தென்பகுதியில் இருக்கிறது. திதி கொடுக்கும்போது தென்பகுதியை பார்த்து திதி கொடுத்தால், பித்ருக்களை எளிதில் சென்றடையும். அவர்களும் மகிழ்ச்சியோடு சூரியபகவானிடம் சென்று அவர் அனுமதியை வேண்டி பெற்று அவரின் விமானம் மூலமாக மகிழ்ச்சியுடன் தன் வம்சத்தினரை காணப்போகிறோம் என்ற ஆவலோடு வருவார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால் நமது வம்சத்திற்கே எந்த தீங்கும் ஏற்படாது. "திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னோர்களை வணங்காமல் இருப்பதே என்கிறது கருட புராணம்".

பித்ரு பூஜை முறைகள்

பித்ருபூஜைக்கு மிக பெரிய செலவு என்பதெல்லாம் இல்லை. காய்கறிகளை தானம் தர வேண்டும். அதில் முக்கியமாக பூசணிக்காயை தானம் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்வதால் துஷ்டசக்திகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடை பெற வழி பிறக்கும். பூசணிக்காய்குள் அசுரன் இருப்பதால் பூசணிக்காயை தானம் செய்யும் போது அசுரன் நம்மை விட்டு விலகுவதாக ஐதீகம். அதுவும் ஆடி அமாவாசை அன்று இவ்வாறு பூஜையில் தானம் செய்வது விசேஷம்.

இயற்கை மரணம் இல்லாமல் ஏதாவது ஒரு துர்மரணத்தால் எவரேனும் இறந்து போய் இருந்தால், அந்த ஆத்மா இறைவனடி சேராமல் அவதிப்படும், அல்லாடும். முறைப்படி வழிபாடு செய்து தம் ஆத்மாவை இறைவனடி சேர வைக்காத தன் குடும்பத்தினர் மீது கோபம் கொண்டு தீங்கு செய்ய கூட துணிந்து விடும். அதனால் அப்பேர்பட்ட ஆத்மாக்களை சாந்தப்படுத்தி இறைவனடி சேர வைக்க, ஆடி அமாவாசை அன்று தர்பணம் செய்தால் அந்த ஆத்மா சாந்தியாகும். ஸ்ரீமன் நாராயணனே அந்த ஆத்மாவை சாந்தப்படுத்தி உதவி செய்வதாக கருடபுராணத்தில் இருக்கிறது.

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து அவர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபுரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனமார வாழ்த்துவார்கள்.

இறந்தவர்களின் புகைப்படம் இல்லாதவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வணங்கலாம். நாம் பூஜையில் வைக்கும் முகம் பார்க்கம் கண்ணாடியில் பித்ருக்கள் தங்கள் முகத்தை பார்த்து மகிழ்சியடைவார்கள். தங்களின் புகைப்படத்தை வைத்துதான் வணங்குகிறார்கள் என்று எண்ணுவார்கள். அதனால்தான் முகம் பார்க்கும் கண்ணாடியை அமாவாசை, பித்ருக்கள் திதி அன்று வைத்து வணங்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

அத்துடன் - முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு உணவு தானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன் பெறும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற எளிய தர்பணம் செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

Monday, September 4, 2017

குலதெய்வம்

நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.‬‬‬‬

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது ..! எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.
இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின் பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது . நம் முன்னோர்கள்…அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..! இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..! நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது. பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..! பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை… ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது… பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று ; புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு தெய்வங்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது… அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..! அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!!

*மகிழ்ச்சி*

அழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார். அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.. " என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று *மழை* பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக *வருடிக்* கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்*..!!! நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை *சந்தோஷிக்கிறது* எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த *மகிழ்ச்சிக்கு* அளவே இல்லை. அவரை *மகிழ* வைத்து நான் *மகிழ்ந்தேன்*. இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் *மகிழ* நானும் பெரு *மகிழ்வுற்றேன்*.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

*மகிழ்ச்சி* என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.

ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் *மகிழ்ச்சி,* அது அவளிடம்இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள்
எவ்வளவு *மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள்
என்பதில் இல்லை... உங்களால் அடுத்தவர்
எவ்வளவு *மகிழ்ச்சி* ஆகிறார்கள்
என்பதிலேயே இருக்கிறது... *மகிழ்ச்சி* என்பது போய் சேரும் இடம் அல்ல அது
ஒரு பயணம்...

*மகிழ்ச்சி* என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்...

*மகிழ்ச்சி* என்பது ஏற்றுக்கொள்வது அல்ல
அது ஒரு முடிவு...

நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை *மகிழ்ச்சி* நீங்கள் யார் என்பதில் தான் *மகிழ்ச்சி* !!!

" *மகிழ* வைத்து *மகிழுங்கள்* உலகமும் இறையும் உங்களை கண்டு *மகிழும்*..!!!

பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரியாதவர்களுக்கு இந்தக் கதை

*“எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம். ஒரு பிரயோஜனமும் இல்ல. எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…”* – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது !

அவர்களுக்கு மட்டுமல்ல !
பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரியாதவர்களுக்கு இந்தக் கதை !

*ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.*
நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது மாலை நேரமாகி எங்கும் இருள் கவ்வத் தொடங்கியது !

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் *ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும்* என்று கருதி, மரத்தை நோக்கி வில்லெய்தான் அரசன் !

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து *“ஐயோ… அம்மா”* என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… *யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ* என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான் அரசன் .

*அங்கு சென்று பார்த்தால் இருபது வயதையொத்த இளைஞன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.*

*“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே”* என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, *“இவனுடைய பெற்றோர் அருகேதான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்”* என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.

கடைசியில் ஒரு விறகுவெட்டும் தம்பதியினரை அழைத்து வந்தனர்.

*“இவர்கள் தான் அந்த இளைஞனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்”* என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, *“என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது.* போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”

தான் சொன்னதைக் கேட்டு *அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான் அரசன் .*

அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்றுகொண்டிருந்த *அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.*

தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு *அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.*

*பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.*

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். *பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன்.*

*நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.*
*அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள்.*

*அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..”* என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து *அந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.*

*உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.*

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்….! *“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?*

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே?

*நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?”*

'ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…' எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான் ! *“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.* *அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது.* *தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்த வேண்டும் என்று விரும்பினேன்.*

*_அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்._*

*மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.*
*நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.*

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் *என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.* மன்னர் *தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…* எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.

*அந்த மன்னன் தான் நாம்.*

*நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.*

*அந்த விறகுவெட்டி தான் இறைவன்.*

*இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.*

நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை. *ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.*

நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.

நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…!
எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி !

*பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு (பரிகாரம்) என்பது கிடையாது !*

*மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்யுங்கள் ! அதுமட்டுமே பலன்தரும் !*

காவேரி ஆறும், காவேரி புஸ்கரமும்

இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். இதேப்போல் தீபகற்ப நதிகள் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, பீமா, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

காவேரி ஆறு

காவேரி ஆறு என்பது தென்னிந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தப்படியாக புனிதமான நதியாக காவேரி கருதப்படுகிறது. காவேரி நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம்.

காவேரி ஆறு முறையே கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்திலிருந்து தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் (ரூரல்), சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

காவிரித் தடம்

குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் தலக்காவேரி எனும் இவ்விடத்தில் தற்சமயம் ஒரு குளம் (தீர்த்தவாரி) உள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இதனுடன் குடகு மாவட்டத்தில் ஹாரங்கி எனும் ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. (ககனசுக்கி அருவியில் தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.) இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை அடைகிறது. இந்த இடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது. ஆடு கூட இங்கு காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால் இவ்விடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர் . இவ்விடத்தை மேகேதாட்டு (Mekedatu) என்றும் அழைப்பர். இவ்விடத்திலிருந்து தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்து தான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து புறப்பட்டு வரும் காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின் பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது. முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.

புராண கதைகள் கூறும் காவேரி ஆற்றின் பெருமைகள்.

புராணக்கதைகளின் படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவேரி ஆற்றை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம் அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு முறை காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. மேலும் இன்னொரு புராண வரலாறும் உண்டு. அதன் படி கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது.

தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரி புஜங்கம் என்னும் நூல்.

துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.

தமிழ் இலக்கியங்களில் காவேரி நதியின் பெருமை

‘வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப்பாலை:1-6)

’அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த் ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்...’ புறநானூறு (பாடல் 35)

‘விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும் சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை....’ சிலப்பதிகாரம் (காதை 10:104-109)

’கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை’ மணிமேகலை (பதிகம்:24-25)
‘வாழி அவந்தன் வளநாடு, மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிரொப்பாய் ஆழி ஆள்வோன் பகல்வெய்யோன் அருளா வாழி காவேரி சிலப்பதிகாரம் கானல்வரி 152-55

’மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக் கருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி கருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன் திருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி’ கானவரி,கட்டுரை 25

’உழவர்ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள் விழவர்ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி வாய்காவா மழவர்ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ கானல்வரி,கட்டுரை 4.

’இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் --- பொன்கரை பொரு பழங்காவிரியின்...’திருஞானசம்பந்தர் தேவாரம்.

காவிரி புஸ்கரம்

மேலும் காவேரி நதி என்பது இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும். இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை அதாவது குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பிரவேசிக்கும் சமயம் காவேரி புஷ்கரம் எனும் விழா காவேரி நதி பாயும் இடங்களில் 12 நாட்கள் (செப்டம்பர் 12 - செப்டம்பர் 23 வரை) பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்தாண்டு (2017) வரும் காவேரி புஷ்கரமானது 144 வருடங்களுக்கு ஒரு முறை மஹா புஷ்கரம் கொண்டாப்படுகிறது. ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் 1873 ஆம் ஆண்டு இந்த மஹா புஷ்கரம் காவேரியில் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு இந்த ஆண்டு (2017) காவேரி ஆற்றில் மகாபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது இது செப்டம்பர் 12 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் குரு பகவான் காவிரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அடுத்த காவேரி மஹா புஷ்கரமானது காவிரி ஆற்றில் வரும் 2161 ஆண்டு தான் கொண்டாப்படும். அதேப்போல் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் காவேரி புஷ்காரம் அடுத்த 2029 ஆண்டு தான் காவேரி புஸ்கரம் கொண்டாடப்படும்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:–

தலைக்காவேரி (Talakaveri) - (கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) - (கர்நாடகா)
குஷால் நகர் (Kushal nagar) - (கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) - (கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) - (கர்நாடகா)
மாண்டியா (Mandya) - (கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) - (கர்நாடகா)
பன்னூர் (Bannur) - (கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) - (கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) - (கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) - (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) - (தமிழ்நாடு)
பவானி (Bhavani) - (தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) - (தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) - (தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)- (தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)- (தமிழ்நாடு)
திருவையாறு (Thiruvaiyaru)- (தமிழ்நாடு)
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) - (தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)- (தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) - (தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) - (தமிழ்நாடு)

மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 23 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்.....

நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!

இவன்
-பிரவின் சுந்தர் பூ.வெ.

குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

* *அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
* *சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
* *குளியல் = குளிர்வித்தல்
* *குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது
* *மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
* *இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
* *காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
* *வெந்நீரில் குளிக்க கூடாது.
* *எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்
* *குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
* *நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
* *எதற்கு இப்படி?
* *காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
* *நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
*😱*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
* *குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
* *இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
* *உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
*😧 *இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
* *எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
* *வியக்கவைக்கிறதா... !
* *நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
* *குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
* *பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
*😳 *புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
* *குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
* *குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
* *குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
* *குளித்தல் = குளிர்வித்தல்
* *குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.
* *இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

படித்தவன், படிக்காதவன்

மாருதி நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.

காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. உள்ளே ஏற்றும்போது வராத பிரச்சனை வெளியே கொண்டு வரும் போது ஏற்பட்டது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும். கீறல் விழந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம் என்றார் மேலாளர். வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம் என்றார் அந்த கட்டிடத்தின் இஞ்சினியர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி ஒன்று சொன்னார், அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றை இறக்கிவிடுங்கள் சரியாக போய்விடும் என்றார். கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தாராம்.
எப்பேர்ப்பட்ட ஆலோசனை. இஞ்சினியர்களும், டெக்னீஷியன்களும் அங்கே கூடியிருக்க எவருக்கும் தோன்றாதது ஒரு படிப்பறிவு இல்லாத வாட்ச்மேனுக்குத் தோன்றிவிட்டது. இவர்கள் தொழில் நுட்பத்தில் கரைகண்ட நிபுணர்கள். பெரிய பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால் இந்த சிறிய பிரச்சினை அவர்களை திக்குமுக்காடவைத்துவிட்டது.
அன்றிலிருந்து படித்தவன், படிக்காதவன் அனைவரிடமும் ஆலோசனை கேட்கும் பழக்கம் கட்டாய கடமையாகவே மாறிவிட்டது அங்கு. தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களிலும் இது இயல்பான நடைமுறையாகவே உள்ளது....!

தோல்வியில்லை

கெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,
"நான் எங்கு செல்லட்டும்..?" 
புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"
ஒரு கிராமத்துக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார்.
சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார்,
"அந்தப் பகுதிக்கா..? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள்.
இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்..?"
"ஆமாம்!" என்றார் காஷ்யபர்.
"உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்,
அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்..?" என்று கேட்டார் கெளதமர்.
"மிகவும் மகிழ்ச்சியடைவேன்.., ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே, என்று நன்றி சொல்வேன்.!"
"ஒருவேளை அடித்தால் என்ன செய்வாய்..?"
"என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என்று மகிழ்ச்சியடைவேன்."
"ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்..?'
"மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே..!" என்றார் காஷியபர்.
"நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா..!" என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.
எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழலையும் மகிழ்ச்சியாகவே காண முடியும். தோற்பதற்கு தயாராக இருப்பவன் ஒருபோதும் தோல்வியடைய முடியாது. இல்லாவிட்டால் எதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.