இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். இதேப்போல் தீபகற்ப நதிகள் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, பீமா, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.
காவேரி ஆறு
காவேரி ஆறு என்பது தென்னிந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தப்படியாக புனிதமான நதியாக காவேரி கருதப்படுகிறது. காவேரி நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம்.
காவேரி ஆறு முறையே கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்திலிருந்து தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் (ரூரல்), சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
காவிரித் தடம்
குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் தலக்காவேரி எனும் இவ்விடத்தில் தற்சமயம் ஒரு குளம் (தீர்த்தவாரி) உள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இதனுடன் குடகு மாவட்டத்தில் ஹாரங்கி எனும் ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. (ககனசுக்கி அருவியில் தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.) இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை அடைகிறது. இந்த இடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது. ஆடு கூட இங்கு காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால் இவ்விடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர் . இவ்விடத்தை மேகேதாட்டு (Mekedatu) என்றும் அழைப்பர். இவ்விடத்திலிருந்து தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்து தான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து புறப்பட்டு வரும் காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின் பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது. முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.
புராண கதைகள் கூறும் காவேரி ஆற்றின் பெருமைகள்.
புராணக்கதைகளின் படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவேரி ஆற்றை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம் அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு முறை காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. மேலும் இன்னொரு புராண வரலாறும் உண்டு. அதன் படி கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது.
தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரி புஜங்கம் என்னும் நூல்.
துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.
காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.
தமிழ் இலக்கியங்களில் காவேரி நதியின் பெருமை
‘வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப்பாலை:1-6)
’அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த் ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்...’ புறநானூறு (பாடல் 35)
‘விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும் சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை....’ சிலப்பதிகாரம் (காதை 10:104-109)
’கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை’ மணிமேகலை (பதிகம்:24-25)
‘வாழி அவந்தன் வளநாடு, மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிரொப்பாய் ஆழி ஆள்வோன் பகல்வெய்யோன் அருளா வாழி காவேரி சிலப்பதிகாரம் கானல்வரி 152-55
’மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக் கருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி கருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன் திருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி’ கானவரி,கட்டுரை 25
’உழவர்ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள் விழவர்ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி வாய்காவா மழவர்ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ கானல்வரி,கட்டுரை 4.
’இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் --- பொன்கரை பொரு பழங்காவிரியின்...’திருஞானசம்பந்தர் தேவாரம்.
காவிரி புஸ்கரம்
மேலும் காவேரி நதி என்பது இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும். இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை அதாவது குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பிரவேசிக்கும் சமயம் காவேரி புஷ்கரம் எனும் விழா காவேரி நதி பாயும் இடங்களில் 12 நாட்கள் (செப்டம்பர் 12 - செப்டம்பர் 23 வரை) பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்தாண்டு (2017) வரும் காவேரி புஷ்கரமானது 144 வருடங்களுக்கு ஒரு முறை மஹா புஷ்கரம் கொண்டாப்படுகிறது. ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் 1873 ஆம் ஆண்டு இந்த மஹா புஷ்கரம் காவேரியில் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு இந்த ஆண்டு (2017) காவேரி ஆற்றில் மகாபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது இது செப்டம்பர் 12 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் குரு பகவான் காவிரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அடுத்த காவேரி மஹா புஷ்கரமானது காவிரி ஆற்றில் வரும் 2161 ஆண்டு தான் கொண்டாப்படும். அதேப்போல் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் காவேரி புஷ்காரம் அடுத்த 2029 ஆண்டு தான் காவேரி புஸ்கரம் கொண்டாடப்படும்.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:–
தலைக்காவேரி (Talakaveri) - (கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) - (கர்நாடகா)
குஷால் நகர் (Kushal nagar) - (கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) - (கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) - (கர்நாடகா)
மாண்டியா (Mandya) - (கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) - (கர்நாடகா)
பன்னூர் (Bannur) - (கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) - (கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) - (கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) - (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) - (தமிழ்நாடு)
பவானி (Bhavani) - (தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) - (தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) - (தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)- (தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)- (தமிழ்நாடு)
திருவையாறு (Thiruvaiyaru)- (தமிழ்நாடு)
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) - (தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)- (தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) - (தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) - (தமிழ்நாடு)
மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 23 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்.....
நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!
இவன்
-பிரவின் சுந்தர் பூ.வெ.

No comments:
Post a Comment