Friday, August 21, 2020

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:

அருகம்புல்லும் பிள்ளையாரும்
*********************************
சுலபன் என்ற மன்னன் ஜம்பா என்ற தென்னா ட்டு நகரம் ஒன்றை பெருமையுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனும் அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் நகரில் நடைபெறும் கதாகாலட் சேபத்தைக் கேட்கச் செல்வதை வழ க்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு கோயிலில் கதாகாலட்சேபம் நடக்கும் அரங்கி ல் ஏழை அந்தணன் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வறுமையின் கொடுமையினால் குறைந்த அளவு உடையுடனே அவர் காணப்பட்டார். தர்ம நெறியோடும், கருணையுள்ளத்தோடும் அரசாளும் மன்னன் அன்று ஏனோ விதியின் காரணமாக அந்த அந்தணரைப் பார்த்து சிரித்து விட்டார்.

மன்னரின் சிரிப்பால் மேலும் அவமானமடை ந்த அவர் கூனிக்குறுகி அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் போய் நின்றார். அந்த நிலை மன்னனை மேலும் சிரிப்புக் குள்ளாக்கியது. அதைக் கண்டு அந்தணருக்குக் கோபம் தலைக்கேறியது.

மன்னரைப் பார்த்து, 'ஏழ்மையில் வாழும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவு கெட்ட அரசே ! பல்லைக்காட்டி என்னைக் கேலி செய்ததால் நீ ஒரு எருதாக மாறக் கடவாய்' என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணம் மன்னன் எருதாக உருமாறினான்.

தன் கணவர் எருதாக மாறியதைக் கண்ட அரசி அந்தணன் மீது கோபமுற்று, மன்னர் என்றும் பாராமல் கோபமுற்று 'என் கணவரை எருதாக மாறிட சாபம் கொடுத்த நீ பொதி சுமக்கும் ஒரு கழுதையாக மாறக் கடவாய்..' என்று சபித்தாள். அந்தணர் அடுத்த கணம் கழுதையாக மாறினார்.

கழுதையாக மாறினாலும் நெறி தவறாது அந்தணன் வாழ்ந்ததால் அவர் மீண்டும் அரசி யாரை புல் சுமக்கும் பெண்ணாக சபிக்கவே அவ்வாறே அரசியாரும் உருமாறினாள்.

புல் சேகரித்துக் கொண்டு ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது காற்றும் மழையும் வேகத்தோடு துவங்கியது. மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆலயத்துக்குள் நுழை ந்தாள் புல் சுமக்கும் பெண்ணாகிய அரசி.

அதே கோயிலுக்குள் அடைக்கலம் பெற கழுதையான அந்தணரும், எருதாக மாறிய மன்னனும் நுழைந்தார்கள். புல்லைத் தின்று பார்ப்போமே என்றெண்ணி இருவரும் புல் கட்டை வாயைக் கொண்டு இருவருமாக அவிழ்த்தார்கள். சுவைத்து சற்று உண்டனர்.

அப்போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. புல் கட்டிலிருந்த அருகம்புல் கோயிலில் அரு ளாட்சி புரியும் விநாயகர் மீது பரந்து சென்று விழுந்தது. அன்று விநாயக சதுர்த்தியாதலால் விநாயகர் சன்னதி திறந்திருந்தது. பெருங்கூ ட்டமும் சன்னதிக்கு முன்னால் இருந்தது.

பூஜை நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த கழுதையையும், எருதையும் மக்கள் விரட்டி அடித்தனர். புல்கட்டையும் அவை இழுத்துச் சென்றதால் புல் சுமக்கும் பெண்ணும் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன்னைச் சுற்றி சுற்றி வந்ததாலும், அவர்கள் மூலம் அருகம்புல் தன் மீது விழுந்ததாலும் விநாயகர் பேரானந்தம் கொண்டார்.

அம்மூவருக்கும் சுய உருவத்தை மீண்டும் அளி த்து அழகிய வாகனத்தில் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். விநாயகருக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைக்க வேண்டி ய அவசியமில்லை. எல்லா இடத்திலும் கிடை த்திடும் அருகம்புல்லினால் மனதார அர்ச்ச னை செய்தால் போதும், எந்தத் தீவினையும் நீங்கி விடும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறது இக்கதை..

Thursday, August 20, 2020

உலகில் சிறந்த 10 என்ஜிஓ நிறுவனங்கள்..!

1. விக்கிமீடியா அறக்கட்டளை விக்கிமீடியா 2003 ஆம் ஆண்டில் இணையத் தொழில் முனைவோர் ஜிம்மி வேல்ஸால் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க அரசு சார்பற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனமானது அதன் தலைமையகத்தைச் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது. மேலும் 280 க்கும் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் 75 மில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர வருவாயைக் கொண்டுள்ளது. விக்கிமீடியா விக்கிபீடியா போன்ற வலைத்தளங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இது பன்மொழி மற்றும் பன்மொழி உள்ளடக்கத்தை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கிறது. இந்த அறக்கட்டளை அனைத்துப் பெரிய பத்திரிகைகளாலும் உலகில் ஒரு சிறந்த அரசு சாரா நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

2. க்யூர் வயலன்ஸ் க்யூர் வயலன்ஸ், முன்னர்ச் சீஸ்பயர் (Ceasefire) என அழைக்கப்படும் சிகாகோவை சேர்ந்த அமைப்பாகும். இது சமுதாயத்தில் வன்முறைகளைக் குறைப்பதற்காகவும், அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறிந்து சமூக நெறிமுறையை மாற்றுவதற்கும் உலகம் முழுவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு 2000 ஆம் ஆண்டில் டாக்டர். கார்ரி ஸ்லட்கின் என்பவரால் சிகாகோ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் நிறுவப்பட்டது. மேலும் நிறுவப்பட்ட முதல் ஆண்டிலேயே 67 சதவிகிதம் துப்பாக்கி சூடுகளைக் குறைத்துள்ளது. க்யூர் வயலன்ஸ் உலகின் சிறந்த அரசு சாரா நிறுவனமாகப் பாராட்டப்பட்டது.

3. அகுமன் உலகெங்கிலும் உள்ள வறுமை, உடல்நலம் மற்றும் பசி போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொழில் முனைவோர் அணுகுமுறையைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், 2001 ஆம் ஆண்டில் ஜாகுலின் நோவோக்ராட்ஸினால் அகுமன் நிதி நிறுவப்பட்டது. ஏழை மக்களுக்கு ஏற்ற நலன்கள் மற்றும் சேவைகளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இது உதவுகிறது. அகுமன் ஆப்பிரிக்கா, பாக்கிஸ்தான், லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 110 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் முதலீடுகள் 100 மில்லியன் மக்களுக்கு நன்மை செய்கிறது. அகுமன் தனது தலைமை அலுவலகத்தை நியூயார்க் நகரத்தில் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில், கொலம்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாக்கிஸ்தான், கென்யா மற்றும் கானா ஆகிய நாடுகளில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளது. 2015 ஆம் ஆண்டில், உலகின் முதல் 10 மிகச் சிறந்த இலாப நோக்கமற்ற நிறுவனங்களில் ஒன்றாக அகுமன் பெயரிடப்பட்டது.

4. ப்ராக் முன்னர்ப் பங்களாதேஷ் புனர்வாழ்வளிப்பு உதவிக் குழுவாக அறியப்பட்ட ப்ராக் (BRAC), 100,000 க்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பு ஆகும். ப்ராக் ஆனது 1972 ஆம் ஆண்டில் உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் நிறுவப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் 14 க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ராக் (BRAC) இடம்பெற்றுள்ளது. ப்ராக் (BRAC) சமூக நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளின் சொந்த வலைத்தளத்தின் மூலம் கிட்டத்தட்ட முற்றிலும் தன்னிறைவுடையது. இந்த அமைப்பானது, அரசு சாரா நிறுவனத்தின் தற்போதைய தலைவரான சர் பஸ்ஸெல் ஹசன் அபேட் அவர்களால் நிறுவப்பட்டது. இது உலகின் சிறந்த அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.


5. கேர் இன்டர்நேஷனல் கேர் (CARE) என்பது ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும். இது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உலகளாவிய வறுமையை ஒடுக்குவதற்கும் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்தும் அமைப்பாகும். கேர் இன்டர்நேஷனல் 1945 இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மனிதாபிமான உதவி நிறுவனங்களில் ஒன்றாகும். 94 க்கும் மேற்பட்ட நாடுகளில் கேர் வேலை செய்கிறது. 950 க்கும் மேற்பட்ட வறுமை-எதிர்ப்புத் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் 80 மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும், 256 மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் பயன் அடைந்துள்ளனர். கேர் அமைப்புப் பாதுகாப்பு அவசரநிலை, நீர் மற்றும் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

6. மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பு 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனிதாபிமான அரச சார்பற்ற நிறுவனமாகும். இது ஒரு சிறு பிரெஞ்சு மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அதன் தலைமையகம் உள்ளது. இது எம்எஸ்எப் (MSF) என உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக அறியப்படும் ஒரு மருத்துவ மனிதாபிமான அமைப்பாகும். இது கனடாவிலும் அமெரிக்காவிலும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இது 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவ உதவி வழங்குகிறது. இதில் 30,000 க்கும் அதிகமான செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து வல்லுநர்கள், சுகாதாரம் மற்றும் நீர்வழி பொறியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். இது உலகின் சிறந்த 10 அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.

7. மக்களுக்கு நீர் மக்களுக்கு நீர் (Water for people) என்பது அமெரிக்க அடிப்படையிலான அரசு சாரா அமைப்பு ஆகும். இது 1991 ஆம் ஆண்டில் அமெரிக்கன் நீர் வழங்கல் சங்கம் மூலம் நிறுவப்பட்டது. மக்களுக்கு நீர் அமைப்பானது வளரும் நாடுகளில் உயர்தரக் குடிநீர் மேம்பாட்டுக்காகவும் மற்றும் துப்புரவு சேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் வேலை செய்கிறது. இந்த அமைப்பின் நோக்கம் என்னவென்றால், உலகில் யாரும் நீராலோ அல்லது துப்புரவு சேவைக்குறைப்பாட்டாலோ இறக்கக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நீர் அமைப்பு ஏற்கனவே 9 நாடுகளில் 4 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான நீர் மற்றும் துப்புரவு வசதிகளை வழங்கியுள்ளது.

8. மெர்சி கார்ப்ஸ் 1979 ஆம் ஆண்டில் மெர்சி கார்ப்ஸ் நிறுவப்பட்டது முதல், உலகெங்கிலும் உயிர்காக்கும் உதவியில் $3.7 பில்லியனுக்கும் அதிகமாக வழங்கியுள்ளது. இந்த அரசு சாரா நிறுவனத்தின் நோக்கம் என்பது மக்கள் தங்கள் சமூகத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான வளங்களை இணைப்பதன் மூலம் துன்பம், வறுமை மற்றும் அடக்குமுறையைத் தடுத்தல் ஆகும். இன்று சிரியா நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் மக்களுக்கு உதவுவதில் எட்டு நாடுகளில் அவர்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.

9. சர்வதேச மீட்புக் குழு சர்வதேச மீட்புக் குழு என்பது 1933 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோரிக்கையால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனிதாபிமான அரசு சாரா அமைப்பாகும். இந்த அமைப்பு அகதிகள் மற்றும் போர் அல்லது இயற்கை பேரழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் நீண்டகால உதவி வழங்குவதாக அறியப்படுகிறது. தற்போது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்து உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது. இந்த அமைப்பு உலகில் முதல் 10 சிறந்த அரசு சாரா நிறுவனங்கள் என்ற எங்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

10. கிளின்டன் உடல்நலம் அணுகல் முயற்சிகள் கிளின்டன் உடல்நலம் அணுகல் முயற்சி (CHAI) அமைப்பானது உலகில் மிகவும் பிரபலமான அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏராளமான சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை வழங்குகிறது. இந்த அமைப்பு 33 வளரும் நாடுகளில் வேலை செய்கிறது. மேலும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சிஎச்ஏஐ அணுகி பேச்சுவார்த்தை மூலம் விலை குறைப்புக்கள், மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களைப் பெற முடியும். இந்த அமைப்பு தி குளோபல் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டுள்ளது.

நன்றி - https://tamil.goodreturns.in/

அசீசி (தொண்டு நிறுவனம்)

அசீசி என்பது இந்தியாவில் கேரளா மாநிலத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, வாழ்க்கையில் உற்றார், உறவினர்களை இழந்து தெருவோரங்களில் வாழ்ந்து வருபவர்களையும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அசீசி அன்பு இல்லங்கள் எனும் பெயரில் சிறப்பு இல்லங்களை அமைத்து வருகின்றன.

அசீசி இல்லங்கள்

அசீசி தொண்டு நிறுவனம் மூலம் கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்திலும் அசீசி இல்லங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கேரளா இல்லங்கள்

கேரளா மாநிலத்தில் கீழ்க்காணும் ஊர்களில் அசீசி அன்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


கட்டப்பனா
மூலமாற்றம்
குமுளி,
தோப்புராங்குடி
நரியம்பாரா
நெடுங்கண்டம்

 
கட்டப்பனா இல்லம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனா எனும் ஊரில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 125 பயனாளர்கள் உள்ளனர்.

மூலமாற்றம் இல்லம்

கேரள மாநிலத்தில் உள்ள மூலமாற்றம் எனும் ஊரில் 1998 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100 பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாலியல் பலாத்காரத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குமுளி இல்லம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர். 

தோப்புராங்குடி இல்லம்

கேரள மாநிலம் தோப்புராங்குடி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தில் 50க்கும் அதிகமான குழந்தைப் பயனாளர்கள் உள்ளனர். 

நரியம்பாரா இல்லம்

கேரள மாநிலம் நரியம்பாரா எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் பல பயனாளர்கள் உள்ளனர். 

நெடுங்கண்டம் இல்லம்

கேரள மாநிலம் நெடுங்கண்டம் எனும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 100க்கும் அதிகமான ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பயனாளர்கள் உள்ளனர். 

தமிழ்நாடு இல்லம்

தமிழ்நாட்டில் கீழ்க்காணும் ஊரில் அசீசி அன்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 

வடபுதுப்பட்டி தேனி

 வடபுதுப்பட்டி இல்லம்தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 50க்கும் அதிகமான மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்ற பயனாளர்கள் உள்ளனர்.

நன்றி -Wikipedia

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :

திட்டங்கள்

மகளிர் திட்டம்
மத்திய நல்கை திட்டம் மகளிர் திட்டம்

மாநில அளவில, மகளிர் திட்டம் ஏழை மக்களைக் கொண்டு குழுக்கள் அமைத்து செயல்படுகின்றன. இத்திட்டம் பெண்களுக்கான சமூக பொருளாதார மேம்பாடு திட்டமாக, தமிழ்நாடு பெண் மாநகராட்சி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது.



தமிழ்நாடு பெண் மேம்பாடு திட்டம் மகளிர் திட்டம் என்ற பெயரில் கிராம மற்றும் நகர பகுதிகளில் மாநில நிதியைக் கொண்டு 1.4.2000-ல் ஆறு முக்கிய நகரம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்ச ஏழை பெண்களை கவர்ந்துள்ளது. மேலும் இத்திட்ம் ஏழை பெண்களி்ன பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை சுய உதவிக் குழுக்களை அரசு சாரா நிறுவன ஆதரவுடன் அமைத்து ஊக்குவிக்கின்றனர்.

தமிழ்நாடு மாநகராட்சி பெண்மேம்பாடு நிறுவம் (டிசம்பர் 9, 1983 ஆம் ஆண்டு) நிறுவன சட்டம் 1956-ன் படி () இணைக்கப்பட்டது. இவற்றின் பதிவு அலுவலகம்டிசன்னையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின்முக்கிய நோக்கம் அனைத்து ஏழை பெண்கள் குறிப்பாக விதமைார்கள், ஆதரவற்றவர்கள், மூன்று ஆண்டுகளில் இணைக்கப்படுவர். இந்நிறுவனத்தின் முக்கிய தொற்றம் பாதெனில் வலிமையான சுய உதவிக் குழுக்களை 10 கிராம் பங்சாயத்து, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் மாநிலங்களில் உருவாக்குதே ஆகும்.

மகளிர் திட்டம் தற்போதைய நிலை
3,58,251 சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன
57,56,026 பெண்கள் உறுப்பினர்கள் ஆவர்
குழுவின் மொத்த சேமிப்பு தொகை ரூபாய் 161,569.03 ஆகும்
சுமார் 628 அரசு சாரா நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளனர்
மூலதனம்

மகளிர் திட்டத்தின் கீழ் உள்ள திட்ட பணிகள்

மகளிர் திட்டத்தின் கீழ் சில முக்கயி திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் பின்வருவன :
ஐஎஃப்ஏடி ஆதரவு அளிக்கும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம்
பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்
தொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்
வாழ்க்கை தொழில் மற்றும் திறம் மேம்பாட்டு திட்டங்கள்

திறமேம்பாடு பயிற்சியை அளித்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் வங்கிகளின் மூலம் நிதி உதவி, அடிப்படை , வசதிகள் மற்றும் விற்பனை ஆதரவுகளை தருவதாகும். இந்தியஅரசு மற்றும் மாநில அரசுகள் நிதிகளை 75:25 என்ற விகதத்தில் பங்கிட்டு கொள்கிறது.
ஐஎஃப்ஏடி தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம் : இத்திட்டத்தை கீரிடத்தின் மேல் தங்கம் என்று கூறலாம். முதலில் வேளாண் மற்றும் நில திட்டமாக 1989 ஆம் ஆண்டு கூறப்பட்டது. அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் பெண்கள் முன்னேற்றத்திற்காக முனைந்து செயல்படுகிறது. இந்தியன் வங்கி கூட்டு செயலாளர்களாக சுமார் ரூபாய் 800 மில்லியன்களை கடனாக 9 வருடத்தில், 1,20,960 பெண்களைக் கொண்டு 5207 சுய உதவிக் குழுக்களை அளித்துள்ளது. இத்திட்டம் 3.12.1998 ஆம் ஆண்டு முடிவு பெற்றது.

பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்

மேற்கூறிய திட்டத்தின வெற்றிக்கு அடுத்து. மாநில அரசு 1996-97 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. அவற்றின் மூலம் இத்திட்டத்தை மாநிலங்களில் அனைத்து கிராமப்புற மாவட்ட பகதிகளில் (சென்னையை தவிர) விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டில் இத்திடம் விரிவுபடுத்தப்பட்டு, தற்பொழுது 28 கிராமபுற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் :

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவு அளிப்பதாகும். ஆயினும், வாரிய இயக்குனா்கள் தொழில்வளர்ச்சி திட்டங்களை பெண்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களை சுயமாகதொழில் மேற்கொள்ள உறுதுணை புரிகின்றனர்.

இத்திட்டம் 1989-99 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இத்தகைய திட்டங்களை சென்னை மற்றும் மதுரையில் தொழில் மற்றும் வர்த்தக நடத்துகின்றன.
வாழ்க்கைத் தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டம்: மாநகராட்சி வாழ்க்கை தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு தேவையான நிதிகளை மாநில அரசு வழங்குகிறது.

மத்திய நல்கை திட்டம் :

சுவர்ண ஜெயந்தி கிராம் சுவரஜ்கார்யோஜனா () இத்திட்ம் ஏப்ரல் மாதம் 1999 ஆம் ஆண்டு, ஏழைகளின் வறுமையை ஒழிக்க சுய உதவிக் குழுக்களாக அமைத்து
சுய உதவிக்குழு – அடிப்படை வசதிகள்
பயிற்சி விற்பனை வாய்ப்பு வசதிகள்
வெகுமதிகள் விருதுகள்

சுய உதவிக் குழுக்களின் பங்கு

திட்டம் 1. : தமிழ்நாடு பெண்கள் மேம்பாடு திட்டமானது (மகளிர் திட்டம்) மற்ற அரசு திட்டத்திலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அவற்றை செயல்படுத்தும் முகரமான (அரசு சாரா நிறுவனம் மற்றும் வங்கிகள் ) பல விதமான கொள்கைகள், 4ட்டு மற்றும் முயற்சி மற்றும் திட்ட இலக்குகளை பற்றி தெளிவாக அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தலைவர்கள், பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள் மேலும் புத்துணர்வு தரும் பயிற்சி மற்றம் பார்வை சுற்றுலா ஆகியவை இவற்றுள் உள்ளடக்கிய பயிற்சி ஆகும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கும் சிறு சிறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

நன்றி -தவேப வேளாண் இணையதளம்

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடங்குவது எப்படி?

பல்கலைக்கழகம் / நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சங்கங்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (Non Government Organisation-NGO) என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றன.

மத்திய - மாநில அரசு ஆகியவற்றின் மொத்த செலவில் 60% இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செலவிடப்படுகிறது. இந்தியா முழுவதும் 44 லட்சம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அதில் 1.60 லட்சம் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

கல்வி, சட்ட ஆலோசனை, ஊனமுற்றோருக்கு உதவி, குழந்தைகள் / முதியோர் இல்லங்கள், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில் முனைவோருக்கு ஆலோசனை, மருத்துவம், சொட்டு மருந்து, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்குப் பயிற்சி/வழிகாட்டல், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாடு, ஆராய்ச்சி, சுய தொழில் பயிற்சிகள், கண்காட்சிகள், இயற்கை வேளாண்மை, விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலம், வேலைவாய்ப்பு முகாம்கள், மூளை வளர்ச்சி குன்றியோருக்கு உதவிகள்/மருத்துவ உதவி, கலை மேம்பாடு, நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள், தொழில்களில் பயிற்சி / மேம்பாடு என 150க்கும் மேற்பட்ட பொதுச் சமூகப் பணிகள்/ சேவைகளை இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

மத்திய அரசு, மாநில அரசுத் துறைகள், நிறுவனங்கள், வாரியங்கள், பெரிய சங்கங்கள், அறக்கட்டளைகள், அகில இந்திய ஆராய்ச்சி மையங்கள், காமன்வெல்த் செயலகம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, வெளிநாட்டு அரசுகள், சங்கங்கள், தூதரகங்கள் இந்த NGOக்களுக்கு ஆலோசனை, கடனுதவி, மானியம், பயிற்சிகள் என பல உதவிகளைச் செய்து வருகின்றன.

சமீபத்தில் பல தொண்டு நிறுவனங்கள் மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், சரிவரக் கணக்கு காட்டாத சங்கங்கள் கணக்கு காட்டவும், தங்கள் வருமான வரிப் பதிவை நீட்டிப்பு செய்யாத அறக்கட்டளைகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும், வருமானத் துறையும் சரிவர இயங்காத நிறுவனங்களை ரத்து செய்து வருவதால், முறையாகக் கணக்குகளை பராமரிக்கும், சரியாக செயல்படும் சங்கங்களும், அறக்கட்ளைகளும் மிகச் சிறப்பாக அரசுகளின் உதவிகளைப் பெற்று பெரிய அளவில் பலருக்கும் உதவிவருகின்றன.

பல்லாயிரம் சங்கங்கள், ஜாதிச் சங்கங்கள், பல்வேறு பொருட்களைத் தயாரிப்போர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், கல்விப் பணி, இலக்கியப் பணி மற்றும் ஊனமுற்றோருக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது என்றால்தான் பல கோடிகள் செலவிட வேண்டும்.

ஆனால், இந்த சங்கங்கள் தொடங்க பதிவுச் சட்டப்படி (Indian Societies Registration Act 1982) பதிவு செய்ய சில ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். மாவட்டப் பதிவாளரிடம் சென்று அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து குறைந்தது 9 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ரூ.555 கட்டணம் செலுத்தினால் போதும் பதிவுச் சான்றிதழ் பெற்றுவிடலாம்.

இதை வைத்து சங்கத்தின் பெயரில் PAN கார்டு வாங்கி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். வருமான வரித் துறையில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அது சரியான சங்கமாக செயல்பட முடியும். அனைவரின் உதவி, மானியம், நன்கொடை பெறலாம். ஒவ்வொரு வருடமும் மாவட்டப் பதிவாளரிடம் கணக்கு காட்டி சங்கத்தை புதுப்பிக்க வேண்டும்.

அதேபோல் அறக்கட்டளை தொடங்குவது மிக மிக எளிதாகும். அறக்கட்டளைகளில் குடும்ப அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளை, பப்ளிக் (Public) அறக்கட்டளை, சாரிட்டேபிள் அறக்கட்டளை என்று பல வகைகள் உண்டு. தொடங்க விரும்பும் நிர்வாக அறங்காவலர், தேவையான DEED எனப்படும் அறக்கட்டளை ஆவணத்தை வழக்கறிஞர் அல்லது ஆடிட்டர் மூலம் டைப் செய்து அறங்காவலர் வசிக்கும் பகுதிக்கான சார் பதிவாளரிடம் சென்று பதிவு செய்ய வேண்டும்.

பதிவு பெற்றதும், அந்த ஆவணத்தைக் கொண்டு PAN கார்டு அந்த ‘அறக்கட்டளை’ பெயரில் வாங்க வேண்டும். பின் அறங்காவலர் சேர்ந்து வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் தொடங்கி, பிறகு வருமான வரித்துறையில் 10A எனப்படும் பதிவு எண் பெற்று, ஒவ்வொரு வருட இறுதியிலும் கணக்கு காட்டி ரினிவல் செய்ய வேண்டும்.

85G சட்டப்படி வருமான வரி விலக்கும் பெறலாம். 150க்கு மேற்பட்ட சமூக சேவைகளை அறக்கட்டளை / சங்கங்களால் செய்ய முடியும். யாரும் இந்த NGOக்களைத் தொடங்கலாம். மேலும் இது பற்றி அறிய www.karmayog.org, www.nabard.org, www.tamilnaduwomen.com, www.ngosindia.com ஆகிய இணையதளங்களைப் பாருங்கள். 

நன்றி - குங்கும சிமிழ்

நீர்நிலைகளை தூர் வாரும் தமிழ்நாட்டு தனியார் தொண்டு நிறுவனம்

சென்னை

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவிலும் பல நீர்நிலைகளை தூர் வாரி சுத்தப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் தூர் வாறி சுத்தப் படுத்தப் படாமல் உள்ளது. இதனால் வண்டல்மண் அதிகரித்து மழைக்காலங்களில் இந்த நீர்நிலைகளில் முழு அளவு நீர் நிரம்புவது இல்லை. இதையொட்டி அரசு சில இடங்களில் தூர் வாறி வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கோவில் குளம் போன்ற இடங்களில் தூர் வாறி சுத்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனமான ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் நிறுவனமும் இந்தப் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இயக்கி வரும் நிறுவனமாகும், இந்த தொண்டு நிறுவனம் இதுவரை தமிழ் நாட்டில் சுமார் 104 குளங்கள் மற்றும் ஏரிகளையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 15ஏரிகளையும் தூர் வாறி உள்ளது.

இந்த தொண்டு நிறுவன தலைவர் அசோக் ஜோஷி, “ இந்தப் பணியின் மூலம் 9.35 லட்சம் டன் வண்டல் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளில் 26.66 கன அடி அதிகரித்துள்ளது. அதனால் மேலும் 75.492 கோடி லிட்டர் தண்ணீரை அதிகம் சேமிக்க முடியும். இது தமிழ்நாட்டுக்கு 90 நாட்களுக்கான தண்ணீர் தேவையின் அளவாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட வண்டல் மண்ணில் 69% நீர்நிலைக்ளின் கரைகளை பலப்படுத்தவும், மீதமுள்ள 31% விவசாயிகள் நிலத்தில் உபயோகிக்கவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தூர் வாறிய இடங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் இதனால் 5 முதல் 7 அடி வரை உயர்ந்துள்ளது. எங்கள் பணி வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது” என தெரிவித்துள்ளார்

நன்றி PATRIKAI.COM