Thursday, August 20, 2020

நீர்நிலைகளை தூர் வாரும் தமிழ்நாட்டு தனியார் தொண்டு நிறுவனம்

சென்னை

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவிலும் பல நீர்நிலைகளை தூர் வாரி சுத்தப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் தூர் வாறி சுத்தப் படுத்தப் படாமல் உள்ளது. இதனால் வண்டல்மண் அதிகரித்து மழைக்காலங்களில் இந்த நீர்நிலைகளில் முழு அளவு நீர் நிரம்புவது இல்லை. இதையொட்டி அரசு சில இடங்களில் தூர் வாறி வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கோவில் குளம் போன்ற இடங்களில் தூர் வாறி சுத்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனமான ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் நிறுவனமும் இந்தப் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இயக்கி வரும் நிறுவனமாகும், இந்த தொண்டு நிறுவனம் இதுவரை தமிழ் நாட்டில் சுமார் 104 குளங்கள் மற்றும் ஏரிகளையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 15ஏரிகளையும் தூர் வாறி உள்ளது.

இந்த தொண்டு நிறுவன தலைவர் அசோக் ஜோஷி, “ இந்தப் பணியின் மூலம் 9.35 லட்சம் டன் வண்டல் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளில் 26.66 கன அடி அதிகரித்துள்ளது. அதனால் மேலும் 75.492 கோடி லிட்டர் தண்ணீரை அதிகம் சேமிக்க முடியும். இது தமிழ்நாட்டுக்கு 90 நாட்களுக்கான தண்ணீர் தேவையின் அளவாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட வண்டல் மண்ணில் 69% நீர்நிலைக்ளின் கரைகளை பலப்படுத்தவும், மீதமுள்ள 31% விவசாயிகள் நிலத்தில் உபயோகிக்கவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தூர் வாறிய இடங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் இதனால் 5 முதல் 7 அடி வரை உயர்ந்துள்ளது. எங்கள் பணி வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது” என தெரிவித்துள்ளார்

நன்றி PATRIKAI.COM

No comments:

Post a Comment