Tuesday, February 26, 2013

ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சு.

சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். " உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன்.

தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன்.

ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்...!

நன்றி : Á Hãfèèl Áhãmèd.

யானையின் தமிழ்ப்பெயர்கள்

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.

இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். இப்போது அது எவ்வாறு என்று பார்ப்போமா!!!

சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

குழந்தை வரம் தந்த கொய்யாப்பழம்

சென்னையில் தற்போது வசித்து வருபவர் சூரியகுமார். மகா பெரியவாளின் தீவிர பக்தர். சூரியகுமாரின் மனைவி விஜயலட்சுமி, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தாலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தைப் பேறு அமையவில்லை. நாட்கள் தள்ளிக் கொண்டே போயின.

சூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.

அதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.

அன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்’ என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். ‘பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே… எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும்’ என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின் அண்ணன் ரவிகுமார் பாரிமுனையில் ஒரு கடையில் இருந்து கொய்யாப்பழங்களை எப்படியோ தேடி வாங்கி வந்து விட்டார்.

மாட்டுப் பொங்கல் அன்று காலை ரவிகுமார், சூரியகுமார் & இருவரும் தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டனர். பெரியவா கேட்ட கொய்யாப்பழத்தோடு வேறு சில பழங்களும் வாங்கி வைத்திருந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் தாங்க முடியாத கூட்டம். பெரியவாளின் சந்நிதிக்குச் சென்று திரும்புவதே சிரமம் என்பதால், சென்னையில் இருந்து வந்திருந்த பல பக்தர்களும் தொலைவில் இருந்தே மகா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் !

இத்தனை கூட்டத்தில் நீந்திப் போய் எப்படிப் பெரியவாளிடம் சென்று, கொய்யாப்பழங்களைக் கொடுப்பது என்று சகோதரர்கள் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீமடத்தில் பணி புரியும் & தங்களுக்குப் பரிச்சயமான ஒரு நண்பரைப் பார்த்தார்கள். இருவரும் முகம் பிரகாசிக்க, அந்த நண்பரை நோக்கி ஒருவாறு கூட்டத்தில் புகுந்து சென்றார்கள்.

அந்த நண்பரும், இவர்களை முகம் மலரப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பது போல் கேட்டார்.

அதற்கு சூரியகுமார், ‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.

அந்த நண்பரின் முகம் மாறியதே பார்க்கணும். ‘‘தோ பாருப்பா… நீ என் ஃப்ரெண்டுதான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக ‘என்கிட்ட கொய்யாப்பழம் வாங்கித் தரச் சொன்னார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு வந்திருக்கேன்’னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ என்று படபடவென்று பேச… ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.

கேட்டவருக்குத் தெரியாதா, இதை எப்படி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று?!

“இன்னிக்கு எத்தனை நேரமானாலும் பரவால்லை. வரிசையில் நின்னு, இந்தக் கொய்யாவை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்பப் போறோம்’’ என்று தன் அண்ணன் ரவிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார் சூரியகுமார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் அதே வரிசையில் இணைந்தனர்.

பெரியவா கேட்ட கொய்யாப்பழங்களை மட்டும் பயபக்தியுடன்
தன்வசம் ஒரு பையில் வைத்துக்கொண்ட சூரியகுமார், அவர் சந்நிதானத்தில் சமர்ப்பிக்கவேண்டிய மற்ற பழங்களைத் தன் அண்ணன் ரவிகுமாரிடம் கொடுத்தார்.

மதியம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா திருச்சந்நிதி அருகே வந்துவிட்டனர் சூரியகுமாரும் ரவிகுமாரும். இருவர் முகங்களிலும் பெரியவாளை தரிசிக்கப் போகிற பரவசம். அந்த மகானின் அருகே நெருங்கிவிட்டோம் என்கிற ஆனந்தம். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் எங்கும் முழங்கியபடி இருந்தது.

பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரையும் பார்த்து ஆசிர்வதித்தார். கனிவும் புன்னகையும் மாறா முகத்துடன் இருவரையும் தன் பார்வையால் ஏறிட்டார் பெரியவா.

கொய்யாப்பழங்கள் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மகா ஸ்வாமிகளின் அருகே கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத்தையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் சூரியகுமார். பக்திப் பரவசத்தின் வெளிப்பாடாக அவரது கண்கள் கலங்கிக் காணப்பட்டன.

‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்.. அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’ சூரியகுமார் நா தழுதழுத்தபடி சொன்னார்.
‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டு வந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.

கூடவே, பெரியவாளுக்கு அருகே கைங்கர்யத்துக்காக நின்று கொண்டிருந்த இவர்களின் நண்பரும் (‘பெரியவா தரிசனத்துக்காகப் பொய் சொல்லாதே’ என்று சொல்லி விட்டுச் சென்றாரே, அவர்தான்!) அதிர்ந்து போனார். ‘இதைத்தானே முதலில் என்னிடம் சொன்னார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றல்லவா சொன்னார்?! நான் அதைக் கிண்டலும் கேலியுமாக பரிகசித்துவிட்டு வந்தேனே’ என்று தனக்குள் மருகினார். ‘என்னை மன்னிச்சிடுப்பா’ என்று சூரியகுமாரைப் பார்த்துச் சொல்லாத குறையாகக் கையெடுத்துக் கும்பிட்டார், மன்னிப்புக் கோரும் தொனியில்!

பெரியவாளே வாய் திறந்து கேட்டதும், துணிப்பையில் இருந்து கொய்யாப்பழங்களை பரபரப்புடன் வெளியில் எடுத்தார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் இருக்கிற ஒரு காலி மூங்கில் தட்டில் அவற்றை வைத்தார்.

அந்தப் பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத் தன் கையில் எடுத்தார். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து நல்ல பழுத்த பழமாகக் காட்சி அளித்தது பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த கொய்யா. தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து அழுத்தினார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் ‘பொளக்’கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.

க்ஷண நேரத்துக்குள் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார் மகா பெரியவா. மற்றொரு பாதியை சூரியகுமாரிடம் கொடுத்து அவரையும் அவருடைய மனைவியையும் சாப்பிடச் சொன்னார்.

மிகுந்த பவ்யத்துடன் பெரியவா தந்த பிரசாதமான பாதி கொய்யாவை வாங்கிக்கொண்டார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதியிலேயே சாப்பிடும்படி உத்தரவானது. எனவே, பாதி கொய்யாவில் ஒரு பகுதியை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மறு பாதியைத் தான் சாப்பிட்டார்.

அங்கு கூடி இருந்த அனைவரும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள். ‘இந்தத் தம்பதிக்கு எப்பேர்ப்பட்ட ஆசி கிடைத்திருக்கிறது’ என்று நெகிழ்ந்து போனார்கள்.
அதன்பிறகு கொய்யாப்பழத்தின் சிறப்பு, அதன் மருத்துவ குணம், என்னென்ன நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையாற்றினார் மகா பெரியவா. சூரியகுமார் குடும்பம் உட்பட வந்திருந்த அனைவரும் இமை கொட்டாமல் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

‘கொய்யாப்பழ படலம்’ முடிந்தது. மகா பெரியவா எழுந்து தன் ஜாகைக்குச் சென்றார். பக்தர்கள் கன்னத்தில் போட்டு தரிசித்துவிட்டு, அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.

மதியம் ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் சூரியகுமார் குடும்பத்தினர்.
அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே கர்ப்பம் தரித்தார் சூரியகுமாரின் மனைவி.

பெரியவா தந்த பிரசாதத்தின் மகிமை அதுதான்.
அதுவும் பெரியவாளே விருப்பப்பட்டுக் கனவில் கேட்டு வாங்கி, திரும்பித் தந்த பிரசாதம் ஆயிற்றே!

பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்தோடு சூரியகுமார் தம்பதிக்குத் தாமதமாகப் பிறந்த ஒரே மகளான மதுராம்பிகா, தற்போது பொறியியல் படித்து வருகிறாள்

தபால் துறை உருவான வரலாறு..!

புராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை பொது மக்களும் பயன்படுத்துமாறு விரிவுபடுத்தினார். அத்துடன் தபால் அமைப்பை நிர்வகிக்க 'போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்' என்று ஒரு பதிவையையும் நியமனம் செய்தார்.

1837 இல் இந்தியத் தபால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல் தபால்தலை 1852இல் சிந்து பகுதி கமிஷனராக இருந்த பார்ட்டன் ஃபெரேரே என்பவரால் வெளியிடப்பட்டது.

'சிந்த் டாக்' எனும ்பெயரில் வெளியான இந்த தபால்தலையே ஆசியாவிலும் வெளியான முதல் தபால்தலை என்னும் சிறப்பைப் பெற்றது.

1854 அக்டோபர் ஒன்றில் இந்திய தபால் சேவை அதிகாரபூர்வமாக அமலில் வந்தது.

இந்தியாவில் தலைமைத் தபால் அலுவலகம், சப் தபால் அலுவலகம், எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் பிராஞ்ச் தபால் அலுவலகம் என்னும் நான்கு வகையான தபால் அலுவலகங்கள் உள்ளன.

பின்கோடு (Pincode)

1972 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் பின்கோடு அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்கோடு ஆறிலக்கம் கொண்டது. இடமிருந்து வலமாக, முதல் எண் தபால் அலுவலகத்தின் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கும். அதற்கடுத்து இரு இலக்கங்கள் துணை மண்டலத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் தபால் பிரிப்பு அலுவலகத்தையும் குறிக்கின்றன.

தற்காலத்தில் தபால்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. காரணம் தொழில்நுட்பம் மற்றும் பெருகிவரும் தொலைத்தொடர்பு சாதனங்கள். இதை தவிர்க்கும்பொருட்டு தபால்துறையுடன் பல திட்டங்களை தொடங்கி அதை செயல்படுத்தியும் வருகிறது அரசு. தபால்கள் அல்லாத இன்ஸ்யூரன்ஸ், தங்கம் விற்பது, சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது தபால்துறை. தபால் துறையில் அழிவிலிருந்து காக்க இத்தகைய திட்டங்கள் அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது?


முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது!

* தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

* எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?

“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

* முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

* பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?

“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

* கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?

“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

* முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?

“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

* மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?

“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

* முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?

“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

* முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?

“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

* கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?

“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட த்ர்க்ஷ 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், த்ர்க்ஷ 9000ஸீ என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

* உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?

“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

விளக்கம்: டாக்டர் ஜெ.ஹரிகரன்

நிழல் தந்த போதனை!

செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, ""நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன பலன் கிடைக்கும்?'' என்று கேட்டார்.

செல்வத்தால் புண்ணியத்தையோ மோட்சத்தையோ விலைக்கு வாங்க முடியாது என்பதை செல்வந்தருக்கு உணர்த்த எண்ணிய ஞானி, அவரைப் பகல் வேளையில் தன்னைப் பார்க்க வருமாறு சொன்னார்.

மறுநாள் மதியவேளை, செல்வந்தர் அவரைப் பார்க்க வந்தார். அவருடன் ஞானியும் நடக்க ஆரம்பித்தார். வெயில் அதிகமாக இருந்த நேரம் அது. செல்வந்தருடைய கால்களுக்கு வெயிலைத் தாங்கும் சக்தியில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார்.

செல்வந்தரின் நிலையைக் கண்ட ஞானி, ""அன்பரே, தங்கள் நடையில் ஏன் வேகம் குறைகிறது?'' என்று கேட்டார்.

""வெயில் காலைச் சுடுகின்றது. சூடு தாங்க முடியவில்லை...'' என்றார் அவர்.

உடனே ஞானி, ""உங்களது நிழல் தரையில் விழுகிறதே, அதிலேயே நடக்கலாமே...'' என்றார்.

செல்வந்தரும் தனது நிழலின் மீது கால்களை ஊன்றி நடக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் நிழல் நகர்ந்து நகர்ந்து சென்றதால் அவரால் முடியவில்லை. பலவாறு முயன்றும் அவரால் தனது நிழலில் நடக்க முடியவில்லை.

ஞானி சிரித்தார். செல்வந்தர், ""எதற்காக சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

"உங்களின் நிழலே உங்களுக்கு உதவவில்லை. நீங்கள் சேர்த்துள்ள செல்வம் எப்படி உங்களுக்குப் புண்ணியம் கிடைக்க உதவும்?'' என்று கேட்டார் ஞானி.

உண்மையை உணர்ந்து கொண்டார் செல்வந்தர்.
-த.ஜெகன், சரலூர்.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா.. ..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.. ..??? கடித்த இடம் சற்றுதடித்து(வீங்கி) காணப்படுகிறதா.. ?? கடுமையான வலி இருக்கிறதா..??? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். ..

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போத ும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகி றது

5.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம ்.

6.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.

7.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.

8.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

நன்றி : Saran GR.

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்..!

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

தெரிந்துக் கொள்வோம் - துளசி

அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.

1) இதன் வேறு பெயர்கள்:

துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்:- தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23. காக்காய்வலிப்புக் குணமாக.
24 .ஜலதோசம் குணமாக.
25. ஜீரண சக்தி உண்டாக.
26. தாதுவைக் கட்ட.
27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக.
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32. வாதரோகம் குணமாக.
33. காச்சலின் போது தாகம் தணிய.
34. பித்தம் குணமாக.
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38. மாலைக்கண் குணமாக.
39. எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42. வாந்தியை நிறுத்த.
43. தனுர்வாதம் கணமாக.
44. வாதவீக்கம் குணமாக.
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46. வாய்வுப் பிடிப்பு குணமாக.
47. இருமல் குணமாக.
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50. இளைப்பு குணமாக.
51. பற்று, படர்தாமரை குணமாக.
52. சிரங்கு குணமாக.
53. கோழை, கபக்கட்டு நீங்க.

Monday, February 11, 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

தலைவலி அதிகம் வராமல் தவிர்ப்பது எப்படி?

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும்.

இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

*இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

*தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

*இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

எளிய முறையில் கையாண்டால் :

1. பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

2. தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3. ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும்.

4. அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.

5. இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

இன்னும் 50 ஆண்டுகளில் தண்ணீருக்காக நாடுகளிடையே போர் மூளலாம் என்று பயப்படும் அளவுக்கு, நீரின் தேவை அதிகரித்திருக்கிறது. மக்களின் பயன்பாட்டுக்கான தேவை அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், விவசாயத் தேவைக்கான கட்டாயம் அதைவிட அதிகரித்திருக்கிறது.

இந்தியாவை நீர்வளம், நிலவளம் குறைந்த நாடு என்று கூறிவிட முடியாது. உலக நிலப்பரப்பில் 2.5% அளவும் நீர்வளத்தில் 4% அளவும் பெற்றுள்ளோம். உலக மக்கள் தொகை 700 கோடிக்கும் மேல். அதில் இந்திய மக்கள் தொகை சுமார் 121 கோடி. இது உலக அளவில் 17% ஆகும். மக்கள் தொகையில் சீனத்துக்கு அடுத்தும், நிலப்பரப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தும் இருக்கிறோம்.
உலகின் வருட சராசரி மழை அளவு சுமார் 840 மில்லி மீட்டர். இந்தியாவில் சராசரி மழை அளவு 1,150 மில்லி மீட்டர்.
உலகில் ஒரு நபருக்கு சராசரியாகக் கிடைக்கும் நீரின் அளவு 6,000 கன மீட்டர். ஆனால் இந்தியருக்குக் கிடைப்பது 2,000 கன மீட்டர்தான். அதிலும் தமிழ்நாட்டவருக்குக் கிடைப்பது 650 கன மீட்டர்தான்!

இந்தியாவில் 65% முதல் 70% வரையிலான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். அதாவது நீரையும் நிலத்தையும் நம்பி வாழ்கின்றனர்.

ஒரு நபருக்கு ஓராண்டில் கிடைக்கும் நீரின் அளவு 1,000 கன மீட்டர் முதல் 1,700 கனமீட்டர் வரை இருந்தால் அங்கு நீர் பற்றாக்குறை "சில சமயங்களில்தான்' ஏற்படும். 1,000 கன மீட்டருக்கும் குறைந்தால் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு உடல் ஆரோக்கியமும் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

கிடைக்கும் அளவு 500 கன மீட்டர் அல்லது அதற்கும் குறைவே என்றால் "வாழ்க்கையே கடினமாக' இருக்கும். 1,000 கன மீட்டர் அளவுதான் தண்ணீர் என்றாலே "தண்ணீர் தட்டுப்பாடு' என்பதற்கான அறிகுறி என்று உலக வங்கியும் சர்வதேச அமைப்புகளும் நிர்ணயித்துள்ளன. எனவே அங்கு நீர்வளத்தை மேம்படுத்த அரசு உடனடியாகக் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

விவசாயத்துக்கு நிலமும் நீரும் அவசியம். இதில் நிலப்பரப்பை மேலும் அதிகப்படுத்த முடியாது. இயற்கையில் என்ன கிடைத்ததோ அதுதான்; நீர் அளவை அதிகப்படுத்தலாம். காடுகளை வளர்த்தும் நதி நீரைத் தேக்கியும் வேறு வழிகளிலும் இதைச் செய்ய முடியும். இப்போதுள்ள நிலத்தில் பயிர்களைச் சுழற்சி முறையில் மாற்றுவதன் மூலமும் மேம்பட்ட சாகுபடி முறைகள், நீர்ப்பாசன வசதிகள் மூலம் உணவு உற்பத்தி அளவை 2 அல்லது 3 மடங்குகூட அதிகரிக்கச் செய்யலாம்.

நாட்டில் 350 லட்சம் எக்டேர் முதல் 400 லட்சம் எக்டேர் வரையிலான நிலம் தரிசாகவே கிடக்கிறது. நீர்வளத்தை மேம்படுத்தினால் இவற்றில் விவசாயம் செய்ய முடியும்.

ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காடாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் வனப்பகுதிகளின் மொத்த அளவு வெறும் 21%தான். வனவளம் கூடினால்தான் மழைப்பொழிவு அதிகரித்து நீர்வளம் பெருகும்.
நீர்வளத்தை இந்தியாவின் மிகப்பெரிய நதிகளின் வடிநிலப்பகுதிகளைக் கணக்கெடுத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை அந்த நதியில் பெருக்கெடுக்கும் நீரின் மொத்த அளவே அதன் நீர்வளமாகும்.

இந்தியாவில் 20 பெரிய நதிநீர் வடிநிலப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 20 லட்சம் எக்டேருக்கும் மேல் ஆயக்கட்டு கொண்ட வடிநிலங்கள் 12, நடுத்தர மற்றும் சிறிய வடிநிலப்பகுதி 8 என்று தரம் பிரித்திருக்கிறார்கள்.

20 நதிநீர் வடிநிலப்பகுதிகளிலும் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 1869.70 லட்சம் எக்டேர் மீட்டர் என்று மத்திய தண்ணீர் வளக் கமிஷன் (சி.டபிள்யு.சி.) 1993-ல் கணக்கிட்டுள்ளது.

அதைப் பரிசீலித்த "தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை' நாட்டின் நீர்வளம் 1952.90 லட்சம் எக்டேர் மீட்டர் என்று 1999-இல் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியது. ஒருங்கிணைந்த நீர் ஆதார வளர்ச்சித் திட்டங்களுக்கான தேசியக் கமிஷன் என்ற அமைப்பு இந்த கணக்கைப் போட்டிருந்தது.

நாட்டின் நீர்வளத்தை எந்த அளவு பயன்படுத்த முடியும் என்று தேசிய நீர்வளக் கமிஷன் ஆராய்ந்தது. இந்தியாவில் உள்ள 20 நதிநீர் வடிநிலப் பகுதிகளிலும் கிடைக்கும் நீரில் 35% தான் இப்போது பயன்படுத்தப்படுகிறது, 65% எதற்கும் பயன்படுத்தப்படாமல் கடலில் ஓடிக் கலக்கிறது என்று அது குறிப்பிட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக இப்படித்தான் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரைக் கொண்டு 760 லட்சம் எக்டேரில் பாசனம் செய்து உணவு தானியச் சாகுபடியை அதிகப்படுத்த முடியும்.

இந்திய நதிகளை இணைப்பதன் மூலம் 410 லட்சம் எக்டேர் மீட்டர் நீர் கிடைக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். இதில் 250 லட்சம் எக்டேர் மீட்டர் நீர், நதியின் மேற்பரப்புகளுக்கும் 160 லட்சம் எக்டேர் மீட்டர் நீர் நிலத்தடிக்கும் கிடைக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் நிலத்தடியில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு எவ்வளவு என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் 1994-95-இல் மதிப்பிட்டது. 432 லட்சம் எக்டேர் மீட்டர் என்று அது அறிந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளிலும் ஓடும் நீரின் அளவு 1,925.9 லட்சம் எக்டேர் மீட்டர். அதில் நிலத்தடி நீர் 432 லட்சம் எக்டேர் மீட்டர். மொத்தம் 2,386 லட்சம் எக்டேர் மீட்டர்.

ஆறு, குளம் மூலமாகப் பயன்படுத்தக் கூடிய நீர் 690 லட்சம் எக்டேர் மீட்டர். நிலத்தடி நீர் முலமாக 395.6 லட்சம் எக்டேர் மீட்டர்.
உலகில் கட்டப்பட்டிருக்கும் பெரிய அணைகளின் எண்ணிக்கை சுமார் 45,000. அதில் 46% சீனத்திலும் 14% அமெரிக்காவிலும் 9% இந்தியாவிலும் 6% ஜப்பானிலும் உள்ளன. இந்தியாவில் கட்டியுள்ள நீர்த்தேக்கங்கள், அணைகளின் அளவு குறைவு என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து நாம் அறிவது, இந்தியருக்கு ஆண்டு முழுக்கக் கிடைக்கும் சராசரி தண்ணீர் அளவு 1,450 கன மீட்டர்தான். ஆனால் சர்வதேச சராசரி 1,700 கன மீட்டர். அதிலும் பயன்படுத்தும் சராசரி நீரின் அளவு 660 கன மீட்டர்தான். எனவே நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீருக்குத் திண்டாட வேண்டிய நிலை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படக்கூடும். உணவு உற்பத்தியும் வெகுவாக பாதிக்கும்.

மேற்கூறிய காரணங்களால் நதிநீர் இணைப்பை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இப்போதுள்ள அனைத்து நீர் நிலைகளையும் மேம்படுத்தி நீர்த் தேக்க அளவைப் பல மடங்காகப் பெருக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
நிலப்பரப்பை அதிகரிக்க முடியாது. ஆனால் நீர் வளத்தை 2 வழிகளில் மேம்படுத்த முடியும்.

1. இப்போது கிடைக்கும் நீரில் கடலில் கலக்கும் பெருமளவு நீரைத் தேக்கிவைத்துப் பயன்படுத்த முடியும்.
2. காடுகளை வளர்த்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தி மழை வளத்தைப் பெருக்கி, நீர்வளத்தை மேலும் பெருக்கிக்கொள்ள முடியும்.

கிடைக்கும் நீரையும் இப்போதுள்ள பாசனப்பகுதியை மேம்படுத்தியும், தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட்டும் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் இரண்டையும் மேம்படுத்தலாம்.

நீர்வளத்தை மேம்படுத்த நதிகளை இணைப்பதுச் சிறந்த வழியாகும்.
மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் கேரள, கர்நாடக ஆறுகளை திசை திருப்பி கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தலாம்.
நகரங்களில் கழிவுநீரைச் சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கும் மரம் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் கடல் நீரைச் சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்குத் தரலாம். நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த மழைநீரைச் சேமிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உப்புச் சுவையுள்ள நீர்கூட குடிப்பதற்கு ஏற்றவகையில் உப்பு நீங்கப்பெற வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் நல்ல நீரில் விளையும் பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும்.
இவை எல்லாமே, மத்திய, மாநில அரசுகளுக்கு "உள்ள உறுதி' இருந்தால் சாத்தியமானவையே.

வட இந்திய நதிகளைத் தென்னிந்திய நதிகளோடு இணைப்பது போன்றவற்றுக்குத் தொழில்நுட்பமும் அதிக முதலீடும் தேவைப்படும். நிதி ஆதாரம் இப்போது அரசுகளுக்குப் பற்றாக்குறையாக இருப்பதால் முதலில் தென்னிந்தியாவில் - அதிலும் குறிப்பாக - தக்காணப் பீடபூமியில் உள்ள நதிகளை இணைப்பது, மேற்கு நோக்குப் பாயும் ஆறுகளை கிழக்காகத் திருப்பி நீரை அதிகம் தேக்குவது போன்றவற்றில் ஈடுபடலாம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. தீர்வில்லாத பிரச்னைகளே இல்லை. பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்கிற முனைப்பு வேண்டும். இனியும் அரசு மெத்தனமாக இருந்தால் தண்ணீர் பிரச்னை பூதாகரமாக வெடித்துவிடும்!

கட்டுரையாளர்: "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - கோவை' முன்னாள் டீன், மாநில திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்.

-நன்றி தினமணி

கொய்யாப் பழத்தின் அற்ப்புதம் !!!

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

Wednesday, February 6, 2013

தமிழக முதல்வராக காமராஜர் ஆட்சி செய்த காலம் அது...!

இரண்டு பஸ் கம்பெனி முதலாளிகள், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, காமராஜரைப் பார்க்க வந்திருந்தனர். 'ஐயா...! தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளன. கம்பெனியை நடத்துவதில் லாபமும் அதிகம் இல்லை. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்துங்கள்'' என்றனர்.

''சரி... உங்க கம்பெனியோட பேர் என்ன..? '' - என்று கேட்டார் காமராஜர். உடனே ஒருவர் '...டிரான்ஸ்போர்ட் சர்வீஸஸ்' என்றார், மற்றொருவர், ''... பஸ் சர்வீஸஸ்'' என்றார்.

இதைக் கேட்டதும், ''சர்வீஸ்னு பேரு வைச்சுருக்கீங்களே... இதுக்கு என்ன அர்த்தம்...? தமிழ்ல சேவைன்னு சொல்லுவோம்... சேவைன்னா எந்த லாப நோக்கமும் இல்லாம, மத்தவங்களுக்கு உதவறதுதானே..?

உங்ககிட்ட பஸ் தயாரிக்க வசதி இருக்கு. அந்த வசதிய பொதுமக்களோட வசதிக்கு பயன்படுத்துங்க. அதுதான் உண்மையான சேவை. அதைவிட்டுட்டு, லாபம் குறையுதேன்னு புலம்பாதீங்க!'' என்று அவர்களை வழியனுப்பி வைத்தாராம் காமராஜர்...!

அண்ணா என்கிற அந்த மாபெரும் தமிழினத் தலைவரின் நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகம் "அறிஞர் அண்ணா" என்று அன்பொழுக அழைக்கும், காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் நல்ல தமிழ் அறிஞராக விளங்கினார்.

தமிழ்த்தாயின் தலைமக்களுள் ஒருவரகாவும் தமிழினத்தின் தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டியவர் அண்ணா. தமிழ் மொழி – தமிழ் இனம் – என்று சிந்தனை – சொல் – செயல் என மூவகையாலும் எந்நேரமும் தமிழ்! தமிழ்! என வாழ்ந்திட்டவர் அண்ணா.

அண்ணாவின் வரலாறு

அறிஞர் அண்ணா 15.09.1909ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம் கொண்ட அண்ணா அரசியல், பொருளியல் என இரு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தம்முடைய தமிழ் அறிவினாலும் பேச்சு ஆற்றலினாலும் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர். ஆங்கிலத்திலும் அண்ணா பெரும் புலமை பெற்று விளங்கினார். 'யேல்' பல்கலைக்கழகம் இவருக்குச் 'சப்பெல்லோ சிப்' எனப்படும் உயரிய அறிஞருக்குரிய பட்டத்தை அளித்துச் சிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968ஆம் ஆண்டில் அண்ணாவுக்கு இலக்கிய முனைவர் (Doctor of Literature) பட்டத்தை வழங்கி அணி சேர்த்தது.

1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் ஆறாவது முதல்வராக அரியணையில் அமர்ந்தார் அண்ணா. தம்முடைய நேர்மைத் திறத்தாலும் கொள்கை உரத்தாலும் 'தென்னாட்டுக் காந்தி' என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப்போட்டார்; அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக்காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்படுத்திய ஆட்சியை வழங்கினார்.

பேச்சாற்றல்


தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

மொழிப்புலமை
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,



"No sentence can begin with because because, because is a conjunction.

எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தை ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."


என்று உடனே பதிலளித்தார்.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா

கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.

அண்ணாவின் பொன்மொழிகள்

இப்படியெல்லாம் பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அண்ணா அவர்களின் திருவாய்மொழிகள் புகழ்பெற்ற பொன்மொழிகளாக இன்றும் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் சில:-

1.கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு
2.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
3.கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
4.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
5.சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
6.மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை. 7.அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.
8.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9.இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
10.இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
11.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.


அண்ணாவின் மறைவு

அறிஞர் அண்ணா வாழ்ந்தது அறுபது ஆண்டுகள்தாம் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவராக விளங்கினார். 03.02.1969ஆம் நாளன்று அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தது தமிக்கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்யவியலாத மாபெரும் இழப்பாகும். அவரின் இழப்பை எண்ணி தமிழகமே அழுதது. அப்போது மலேசியாவில் மாபெரும் இரங்கல் கூட்டங்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டது. பேரா மமநிலத்தில் நடந்த ஒரு இரங்கல் கூட்டத்தில் மலேசியப் பாவலரேறு சா.சி.சு.குறிஞ்சிக்குமரனார் இரங்கற்பா வாசித்தார். அவரால் முழுமையாகப் படிக்க முடியவில்லை. கட்டுக்கடங்காத அழுகையும் கண்ணீரும் அவரை கட்டிப்போட்டன. அவரைக் கண்ட கூட்டத்தினர் அனைவரும் தேம்பித் தேம்பி அழுதனர். அண்ணாவின் மறைவில் மலேசியத் தமிழரின் வாழ்வும் ஒருகணம் இருண்டு போனது.

நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.[36]. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

(எஸ்.ராமன், சென்னை. நன்றி. தினமலர்)

பப்பாளி பழத்தின் அற்ப்புதம் !!!

17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!


பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்?

எல்லோருக்கும் வணக்கம், மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்.
— with Vishnu Priya Senthamarai Kannan.

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார்.தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்
மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை”

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ்ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.
’கலிங்கா பாலு’ என்னும்கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம்கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.

இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின்பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா- மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் – மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி- ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமானவிஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தைதமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில்நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள்உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

Tamil bell Found in New Zealand

நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ்எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.

கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம்.

அவருடைய இமெயில் முகவரி - kalingatamil@yahoo.co.in.

திருடனும் தெனாலி ராமனும்..

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.

''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்

''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..

''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...

திருடன் பிடிபடுகிறான்....

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

யுகங்களின் பண்புகள்

ஸநாதன தர்மப்படி யுகங்கள் (கால அளவு) நான்கு ஆகும். அவை கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் எனப்படும். இவைகள் வரிசைக்கிரமமாக ஒன்று முடிந்து ஒவ்வொன்றாக தோன்றும். இவை வேத கருத்துகள்.

யுகங்களின் பண்புகளை இங்கே பார்ப்போம்.

கிருதயுகம்
========

இறைவனை நேருக்குநேர் நிற்பது போல காணமுடியும். பேசமுடியும்.
புண்ணியம் செய்ய வாய்ப்பே இல்லை, ரொம்ப கஷ்டம். ஏனென்றால் எல்லாரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். தர்மம் செய்ய வேண்டும் எனில் அதைப்பெற்றுக் கொள்வோர்கள் கிடைப்பது மிகக்கடினம். சிறுபாவமும் பெரிய துன்பத்தைக் கொடுக்கும்.

திரேதாயுகம்
==========

இறைவனை கொஞ்சம் முயற்சி செய்தால் காணலாம். பேசலாம். மனிதர்களின் குணங்கள் 75 சதவிகிதம் நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். தர்மம் பெற்றுக் கொள்வோர்களுக்கு அதை வாங்க உபதானங்கள் கொடுத்தால் தான் தர்மம் முழுமையடையும்.

துவாபரயுகம்
=========

இறைவனைக்காண கடும் முயற்சி செய்ய வேண்டும். காண்பது அரிது, கடும் முயற்சியால் உணர முடியும். மனிதர்களின் குணங்கள் பாதி நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். பாவ புண்ணியங்கள் சரிசமமாக இருக்கும்.

கலியுகம்
=======

இறைவனை காண முடிவது சாத்தியமல்ல. ஆனால் புண்ணியம் செய்ய அதிக வாய்ப்பு. சிறு நல்ல செயலும் பெரிய புண்ணியத்தைக்கொடுக்கும். ஆனால் எல்லாச் செயலிலும் பாவம் புண்ணியம் சேர்ந்தே இருக்கும். இது தவிர்க்க இயலாதது. நல்லவர்களைக் காண்பது மிக அரிது. அவ்வாறுக் கண்டாலும் அவர்களிடம் ஒரு சில கெட்டவைகளும் இருக்கும்.
நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

அறிந்த விளக்கம் :
*******************

யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட, நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர்..


உண்மை அதுவல்ல..

அறியாத விளக்கம் :
*********************

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..


இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம் இங்கு பயன்படுகிறது...

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்..!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியு...ம் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.