தமிழக முதல்வராக காமராஜர் ஆட்சி செய்த காலம் அது...!
இரண்டு
பஸ் கம்பெனி முதலாளிகள், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,
காமராஜரைப் பார்க்க வந்திருந்தனர். 'ஐயா...! தமிழகத்தில் பஸ் கட்டணங்கள்
மிகவும் குறைந்த அளவில் உள்ளன. கம்பெனியை நடத்துவதில் லாபமும் அதிகம்
இல்லை. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்துங்கள்'' என்றனர்.
''சரி... உங்க கம்பெனியோட பேர் என்ன..? '' - என்று கேட்டார் காமராஜர்.
உடனே ஒருவர் '...டிரான்ஸ்போர்ட் சர்வீஸஸ்' என்றார், மற்றொருவர், ''... பஸ்
சர்வீஸஸ்'' என்றார்.
இதைக் கேட்டதும், ''சர்வீஸ்னு பேரு
வைச்சுருக்கீங்களே... இதுக்கு என்ன அர்த்தம்...? தமிழ்ல சேவைன்னு
சொல்லுவோம்... சேவைன்னா எந்த லாப நோக்கமும் இல்லாம, மத்தவங்களுக்கு
உதவறதுதானே..?
உங்ககிட்ட பஸ் தயாரிக்க வசதி இருக்கு. அந்த வசதிய
பொதுமக்களோட வசதிக்கு பயன்படுத்துங்க. அதுதான் உண்மையான சேவை.
அதைவிட்டுட்டு, லாபம் குறையுதேன்னு புலம்பாதீங்க!'' என்று அவர்களை
வழியனுப்பி வைத்தாராம் காமராஜர்...!
No comments:
Post a Comment