Tuesday, February 26, 2013

தபால் துறை உருவான வரலாறு..!

புராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை பொது மக்களும் பயன்படுத்துமாறு விரிவுபடுத்தினார். அத்துடன் தபால் அமைப்பை நிர்வகிக்க 'போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்' என்று ஒரு பதிவையையும் நியமனம் செய்தார்.

1837 இல் இந்தியத் தபால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல் தபால்தலை 1852இல் சிந்து பகுதி கமிஷனராக இருந்த பார்ட்டன் ஃபெரேரே என்பவரால் வெளியிடப்பட்டது.

'சிந்த் டாக்' எனும ்பெயரில் வெளியான இந்த தபால்தலையே ஆசியாவிலும் வெளியான முதல் தபால்தலை என்னும் சிறப்பைப் பெற்றது.

1854 அக்டோபர் ஒன்றில் இந்திய தபால் சேவை அதிகாரபூர்வமாக அமலில் வந்தது.

இந்தியாவில் தலைமைத் தபால் அலுவலகம், சப் தபால் அலுவலகம், எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் பிராஞ்ச் தபால் அலுவலகம் என்னும் நான்கு வகையான தபால் அலுவலகங்கள் உள்ளன.

பின்கோடு (Pincode)

1972 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் பின்கோடு அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்கோடு ஆறிலக்கம் கொண்டது. இடமிருந்து வலமாக, முதல் எண் தபால் அலுவலகத்தின் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கும். அதற்கடுத்து இரு இலக்கங்கள் துணை மண்டலத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் தபால் பிரிப்பு அலுவலகத்தையும் குறிக்கின்றன.

தற்காலத்தில் தபால்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. காரணம் தொழில்நுட்பம் மற்றும் பெருகிவரும் தொலைத்தொடர்பு சாதனங்கள். இதை தவிர்க்கும்பொருட்டு தபால்துறையுடன் பல திட்டங்களை தொடங்கி அதை செயல்படுத்தியும் வருகிறது அரசு. தபால்கள் அல்லாத இன்ஸ்யூரன்ஸ், தங்கம் விற்பது, சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது தபால்துறை. தபால் துறையில் அழிவிலிருந்து காக்க இத்தகைய திட்டங்கள் அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment