யுகங்களின் பண்புகள்
ஸநாதன
தர்மப்படி யுகங்கள் (கால அளவு) நான்கு ஆகும். அவை கிருதயுகம்,
திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் எனப்படும். இவைகள் வரிசைக்கிரமமாக
ஒன்று முடிந்து ஒவ்வொன்றாக தோன்றும். இவை வேத கருத்துகள்.
யுகங்களின் பண்புகளை இங்கே பார்ப்போம்.
கிருதயுகம்
========
இறைவனை நேருக்குநேர் நிற்பது போல காணமுடியும். பேசமுடியும்.
புண்ணியம் செய்ய வாய்ப்பே இல்லை, ரொம்ப கஷ்டம். ஏனென்றால் எல்லாரும்
நல்லவர்களாகவே இருப்பார்கள். தர்மம் செய்ய வேண்டும் எனில் அதைப்பெற்றுக்
கொள்வோர்கள் கிடைப்பது மிகக்கடினம். சிறுபாவமும் பெரிய துன்பத்தைக்
கொடுக்கும்.
திரேதாயுகம்
==========
இறைவனை கொஞ்சம்
முயற்சி செய்தால் காணலாம். பேசலாம். மனிதர்களின் குணங்கள் 75 சதவிகிதம்
நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். தர்மம் பெற்றுக்
கொள்வோர்களுக்கு அதை வாங்க உபதானங்கள் கொடுத்தால் தான் தர்மம்
முழுமையடையும்.
துவாபரயுகம்
=========
இறைவனைக்காண
கடும் முயற்சி செய்ய வேண்டும். காண்பது அரிது, கடும் முயற்சியால் உணர
முடியும். மனிதர்களின் குணங்கள் பாதி நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும்
இருக்கும். பாவ புண்ணியங்கள் சரிசமமாக இருக்கும்.
கலியுகம்
=======
இறைவனை காண முடிவது சாத்தியமல்ல. ஆனால் புண்ணியம் செய்ய அதிக வாய்ப்பு.
சிறு நல்ல செயலும் பெரிய புண்ணியத்தைக்கொடுக்கும். ஆனால் எல்லாச் செயலிலும்
பாவம் புண்ணியம் சேர்ந்தே இருக்கும். இது தவிர்க்க இயலாதது. நல்லவர்களைக்
காண்பது மிக அரிது. அவ்வாறுக் கண்டாலும் அவர்களிடம் ஒரு சில கெட்டவைகளும்
இருக்கும்.
நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம்.
No comments:
Post a Comment