Wednesday, August 31, 2016

மயக்க மருந்து (Anaesthesia) என்றால் என்ன?

அறுவை மருத்துவம் நடைபெறம் போது நோயாளிக்கு எந்தவித வலி உணர்வு இல்லாதிருக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் நுட்பத்துக்கு, மருந்துக்கு மயக்க மருந்து என்பார்கள்.
 
மயக்க மருந்தின் வகைகள்
 
லோகல் அனெஸ்தீஸியா (LA)
 
தோலின் மீதும் சவ்வின் மீதும் பூசப்படும் மருந்து அல்லது தோலின் கீழே செலுத்தப்படும் ஊசி மருந்து லோகல் அனெஸ்தீஸியா எனப்படும். இது பிற மயக்க மருந்துகளோடுஒப்பிடும் போது பாதுக்காப்பானதும் எணிமையானதும் மயக்க மருந்து வல்லுநர் உதவியற்ற நுட்பமாகும்.

ரீஜினல் அனெஸ்தீஸியா (RA)


உடலின் சில பாகங்களுக்கு நரம்புகளின் வழி வலி குறிப்புகள் பரவா வண்ணம் ஒன்று அல்லது பல ஊசி மருந்துகளை ரீஜினல் அனெஸ்தீஸியா என்பார்கள். இதன் விளைவாக உடலில் குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகும். நோயாளி உணர்வுடன் இருக்கம்போதே அவருக்கு அறுவை மருத்துவம் நடத்தலாம். அறுவை மருந்துவம் நடைபெறும் உடற்பகுதி பெரும்பாலும் மறைக்கப் பட்டிருக்கும். உணர்வுகளை அடக்கும் மருந்தும் தரப்படலாம். இதனால் நோயாளி அறுவை மருத்துவம் நடைபெறம் போது உறங்கி விடுவார். கை, கால், பிட்டம் முதலான இடங்களில் அறுவை மருத்துவம் நடைபெறம் போது ஸிகி தரலாம்.


பொது மயக்க மருந்து (General Anaesthesia)(GA)


தீவிர மயக்க மருந்தைப் பயன்படுத்தி நோயாளியை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு நிகி பயன்படும். வழக்கமான உறக்கத்தைப் போலன்றி இந்த ஆழ் உறக்கத்தின் போது நோயாளி பெயரிட்டு அழைத்தாலும், தொந்தரவு செய்தாலும் கூட விழிக்க மாட்டான். எனவே பொது மயக்க மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளி தன் சுற்றச் சூழ் நிலையையும், மிக முக்கியமாக அறுவை மருத்துவம் நடைபெறுவதையும் அதன் வலியையும் அறவே உணர மாட்டார். அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்க மருந்து வல்லுநர் உடன் இருந்த அறுவைக்குப் பின் ஏற்படும் வலியைப் போக்கும் நிவாரணத்தை அளிப்பார்.

No comments:

Post a Comment