Monday, December 17, 2012

ஆஞ்சியோஸ்பெர்ம்கள் - ஜிம்னோஸ்பெர்ம்கள்

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்:

 1. ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள் விதையுள்ள தாவரங்களாகும்.
2. இவை ஸ்பெர்மாட்டோஃபைட்டுகள் எனப்படும்.
3. மலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பிரிவைச் சேர்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடற்ற தாவர வகையாகும்.
4. ஏனைய தாவர வகைகளைவிட மிக அதிக எண்ணிக்கையிலும், அன்றாட வாழ்வில் நாம் காணும் தாவரங்களும், ஆஞ்சியோஸ்பெர்ம் வகையை சார்ந்தவையாகும்

ஜிம்னோஸ்பெர்ம்கள்

1. திறந்த விதைகள் கொண்ட தாவரங்கள் எனும் பொருள்படும்.
2. ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் சூல்பைக்குள் இல்லை.
3. டயானோசார்கள் காலத்தில் ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமி மீது மண்டிக்கிடந்தன.
4. ஜிம்னோஸ்பெர்ம்களின் வாழ்க்கைச் சுழலில் இரண்டு சிறப்பு நிலைகள் காணப்படுகின்றன. அவை இருமய ஸ்போராபைட்டு, ஒரு மய கேமிட்டோபைட்டு நிலைகளாகும்.
5. தாவர உடல் ஸ்போரோபைட் நிலையைச் சார்ந்தது ஆகும். ஸ்போராபைட்டுகள் பெரும்பாலும் வேர், தண்டு இலைகளைக் கொண்ட உயரமான மரங்கள் ஆகும்.
6. செக்கோயா என்னும் மரம் சுமார் 120 மீட்டர் உயரம் வரை வளரும்.
7. சில ஜிம்னோஸ்பெர்ம்களின் வேர்கள், வேர்ப் பூஞ்சைகளுடனும், நீலப் பசும்பாசிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன.
8. முதல் நிலை வாஸ்குலார் திசுக்களுடன் இரண்டாம் வாஸ்குலார் திசுக்களும் உள்ளன.

பேரண்டம்:

1. நட்சத்திரங்கள் தானாகப் பிரகாசிக்கும் தன்மை உடையன.
2. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். பகலில் தெரியும் ஒரே நட்சத்திரம் சூரியன்.
3. வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் தொலைவை அளக்க ஒளி ஆண்டு என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
4. ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
5. ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. தூரம் செல்கிறது.
6. சூரியனின் ஒளி புவியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
7. சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள நட்சத்திரம் - ஃபிராக்ஸியா செட்னாரி.
8. சூரியக் குடும்பம் உள்ள அண்டத்தைப் பால்வழி அண்டம் என்று குறிப்பிடுகின்றோம்.
9. பால்வழி அண்டமானது சுருள் போன்ற அமைப்பைக் கொண்டது.
10. 1994 ஆம் ஆண்டு ஷுமேக்கர் லெவி என்ற வால் நட்சத்திரம் வியாழன் கோள் மீது மோதியது.
11. சூரியன் பூமியை விட சுமார் 109 மடங்கு பெரியது.
12. சூரியன் பூமியில் இருந்து 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
13. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை - 6000 டிகிரி செல்சியஸ்.
14. சூரியனின்  மையப் பகுதியின் வெப்பநிலை 1 லட்சம் டிகிரி செல்சியஸ்.
15. சூரியனின் அதிகமான வெப்பம் அதன் அணுக்கரு இணைப்பின் மூலம் பெறுகின்றன.
16. சூரியனில் உள்ள இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும்போது அதிக வெப்பம் வெளிப்படுகின்றது.

தாவரவியல் - பொதுவானவை:

1. சதைக்கனி பொதுவாக வெடிக்காது.
2. இருபுறவெடிகனிக்கு சிறந்த எடுத்துக்காட்டு லெகூம் தாவரங்கள்.
3. ஒரு மலரின் இணையாத பல சூலிலைகளைக் கொண்ட சூலகத்திலிருந்து உருவாகும் கனி திரள்கனியாகும். எடுத்துக்காட்டு : நெட்டிலிங்கம்.
4. கருவுற்ற சூல், விதை எனப்படுகிறது.
5. ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை 2 லட்சம் முதல் 3 லட்சம் மடங்குகள் பெரிதாகக் காட்டும்.
6. நுண்ணோக்கிகளின் முக்கிய லென்சுகள், கண்ணருகு லென்சு, பொருளருகு லென்சு என்று இரண்டு வகைப்படும்.
7. செல்கோட்பாட்டை வெளியிட்டவர் ஸ்லீடன், ஸ்வான்.
8. செல், புரோட்டோபிளாசம் மற்றும் பிளாஸ்மா படலத்தால் ஆனது.
9. செல்சுவர் செல்லுலோசால் ஆனது.
10. விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் புற எல்லையாக அமைந்துள்ளது. இது கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது.
11. கோல்கை உறுப்புகள் சுரப்பி செல்களில் காணப்படும்.
12. ரைபோசோம் புரதம் தயாரித்தலில் காணப்படும்.
13. மைட்டோ காண்ட்ரியா ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது.
14. சென்ட்ரோசோம் செல்லின் ‘தற்கொலைப் பைகள்’ என்று அழைக்கப்படுகிறது.
15. உட்கரு உள்ள செல்களுக்கு யூகேரியோட் செல்கள் என்று பெயர். இவற்றின் அமைப்பினை ராபர்ட் பிரவுன் கண்டுபிடித்தார்.
16. உட்கருவில் செல் பிரிதல் மூலமாகவே செல்கள் உருவாகின்றன.
17. உட்கருவில் செல் பிரிதலில் காரியோகைனசிஸ், சைட்டோகைனசிஸ் என இரண்டு நிலைகள் உண்டு.
18. தாவரங்களில் வைரஸ் நோய்கள்: வாழையின் உச்சிக் கொத்து நோய், உருளையின் இலைச் சுருள் நோய், புகையிலையின் பல வண்ண இலை நோய்.
19. தாவரங்களில் பாக்டீரியா நோய்கள்: காரட்டில் மென் அழுகல் நோய், நெல்லின் பாக்டீரிய வெப்பு நோய்.
20. தாவரங்களில் பூஞ்சை நோய்கள்: கடுகுக் குடும்பத் தாவரங்களில் வெண்துரு நோய், கோதுமையில் கருத்துரு நோய், கரும்பில் செவ்வழுகல் நோய், உருளைக் கிழங்கில் பின்தோன்று வெப்பு நோய்.
21. முள்ளங்கியில் வெண்துரு நோய் அல்புகோ காண்டிடா என்னும் பூஞ்சையினால் உருவாகிறது.

கீரைகளின் பயன்கள் !!!!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.

இளந்தாய்மார்கள்
அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

தமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துதுடா சாமி!)

ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்

2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009)

1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட அகமுடையார்
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்
3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
6. அர்ச்சகர வேளாளர்
7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. ஆயிர வைசியர்
9. படகர்
10. பில்லவா
11. பொண்டில்
12. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
13. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
14. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
15. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
16. சௌத்திரி
17. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
18. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
19. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
20. தேவாங்கர், சேடர்
21. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
22. ஏனாதி
23. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
24. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
25. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
26. கங்கவார்
27. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
28. கௌண்டர்
29. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
30. ஹெக்டே
31. இடிகா
32. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர்(ஈழவர்), எழுவர், இல்லத்தார்
33. ஜெட்டி
34. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
35. கப்போரா
36. கைக்கோளர், செங்குந்தர்
37. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
38. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
39. கலிங்கி
40. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
41. கள்ளர் குலத் தொண்டைமான்
42. கால்வேலிக் கௌண்டர்
43. கம்பர்
44. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
45. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
46. கனியால வேளாளர்
47. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
48. கன்னடியநாயுடு
49. கற்பூர செட்டியார்
50. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
51. காசுக்கார செட்டியார்
52. கடேசர், பட்டம்கட்டி
53. கவுத்தியர்
54. கேரளமுதலி
55. கார்வி
56. கத்ரி
57. கொங்கு வைணவர்
58. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)
59. கோப்பல வேலம்மா
60. கோட்டேயர்
61. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
62. குடிகார வேளாளர்
63. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
64. குக வேளாளர்
65. குஞ்சிடிகர்
66. லம்பாடி
67. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
68. லிங்காயத் (ஜங்கமா)
69. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
70. மலயர்
71. மாலி
72. மானியகார்
73. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
74. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
75. மூப்பன்
76. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
77. நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
78. நகரம்
79. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
80. நன்குடி வேளாளர்
81. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
82. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
83. ஓதியா
84. ஊற்று வளநாட்டு வேளாளர்
85. ஓ.பி.எஸ்.வேளாளர்
86. உவச்சர்
87. பய்யூர் கோட்ட வேளாளர்
88. பாமுலு
89. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
90. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
91. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
92. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்
93. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
94. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
95. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
96. பொடிகார வேளாளர்
97. பூலுவ கவுண்டர்
98. பொராயா
99. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
100. புள்ளுவர் அல்லது பூலூவர்
101. புசலா
102. ரெட்டி (கஞ்சம்)
103. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
104. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
105. சாலிவாகனா
106. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
107. சவலக்காரர்
108. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
109. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
110. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
111. ஸ்ரீசயர்
112. சுந்தரம் செட்டி
113. தொகட்டா வீரசத்திரியர்
114. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
115. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
116. தொரையர்
117. தோரியர்
118. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
119. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
120. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
121. உரிக்கார நயக்கர்
122. வல்லம்பர்
123. வால்மீகி
124. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)
125. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
126. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
127. [வேளர்]]
128. வெள்ளாஞ்செட்டியார்
129. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
130. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
131. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
132. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)
133. யவன
134. ஏருகுலா
135. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
136. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)

(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.)

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்
மிகவும் பிற்பட்ட வகுப்பினர்

1. ஆண்டிப்பண்டாரம்
2. பெஸ்தா, சீவியர்
3. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
4. போயர், ஒட்டர்
5. தாசரி
6. தொம்மரா
7. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
8. இசை வேளாளர்
9. ஜம்புவானோடை
10. ஜங்கம்
11. ஜோகி
12. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
13. கொரச்சா
14. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
15. குன்னுவர் மன்னாடி
16. குறும்பர்
17. குறு உறனி செட்டி
18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
19. மோண்ட் கொல்லா
20. மவுண்டாடன் செட்டி
21. மகேந்திரா, மேதரா
22. முட்டலகம்பட்டி
23. நரிக்குறவர்
24. நோக்கர்
25. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
26. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
27. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. புன்னன், வேட்டுவ கௌண்டர்
30. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
31. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
32. சோழிய செட்டி
33. தெலுங்குப் பட்டி செட்டி
34. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
35. தொண்டைமான்
36. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
37. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
38. வேட்டைக்காரர்
39. வேட்டுவக் கௌண்டர்
40. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)
26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
27. ஜம்பவனோடை
28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
53. சாரங்கபள்ளி குறவர்கள்
54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
இதர வகையினர்
மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் 'முற்பட்ட' வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.

நன்றி: திரு. சுந்தரம்

தேவைகள் அறிந்து துணையாய் இருந்தால்...

வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன்.

ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர், “இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார்.

சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன.

மறுநாள் மீண்டும் கதவைத் தட்டினான் சிறுவன்.

கதவைத் திறந்து கத்த வாய் திறந்த பெரியவர் கண்கள் மலர்ந்தன.

சிறுவன் கைகளில் சின்னச் சின்ன நாய்க்குட்டிகள் இரண்டு.

பெரியவருக்குக் கிடைத்தது இரண்டு நாய்க் குட்டிகளும் ஒருபேரனும்..

தேவைகள் அறிந்து துணையாய் இருந்தால் சேவைகள் அதைவிட எதுவும் இல்லை...!

காக்கோரி ரயில் கொள்ளை!

இந்திய விடுதலைப் போர் காந்தியின் வழிகாட்டுதலில் பெரும்பாலும் சாத்வீகப் போராகத்தான் இருந்தது. எனினும் வெள்ளை அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களாலும் சுரண்டல் கொள்கைகளாலும் அதிகார ஆணவத்தாலும் வெறுப்புற்ற பொது மக்கள் ஆங்காங்கே ரகசியமாகப் புரட்சி இயக்கங்களையும் நடத்தினர். அந்த இயக்கங்கள் கொலை, கொள்ளை, பழிவாங்குதல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டன. அவற்றுள் ஒன்
று ரயில் வண்டிகளில் போகும் அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தல் ஆகும்.

1853-இல் முதல் ரயில் வண்டி பம்பாயிலிருந்து தாணாவுக்கும் அடுத்தது 1854-இல் ஹெளரா-ஹூக்ளிக்கு இடையிலும் விடப்பட்டது. 1900-க்குள் இந்தியாவின் பல பாகங்களும் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டன. அப்படி ஒரு வண்டி லக்னொவையும் ஷாஜஹான்பூரையும் இணைத்தது.

1897-இல் ஷாஜஹான்பூரில் பிறந்த பிஸ்மில் ராம் பிரசாத் இளமையிலேயே பள்ளிப் படிப்பை விட சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்ற விரும்பினான். அதற்குப் புரட்சி வழியைத் தேர்ந்தெடுத்தான். 1925-இல் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கல் அசோசியேஷன் என்ற அமைப்பைத் துவக்கினான். ஒருவனது கடுமையான உழைப்பினால் மற்றொருவன் பணக்காரன் ஆவதோ, ஒருவன் மற்றவனுக்கு எஜமானன் ஆவதோ தவறு. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே அந்த அமைப்பின் நோக்கம். ஆனால் புதிய அமைப்பை வளர்ப்பதற்கு வேண்டிய பணத்திற்கு எங்கே போவது? தன் நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அவர்களும் அவனைப் போல் 20-25 வயது இளைஞர்கள், எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர்கள்.

ஒருநாள் ராம்பிரசாத் ஷாஜஹான்பூரிலிருந்து ரயிலில் லக்னெü போய்க் கொண்டிருந்தான். வண்டி பல ஸ்டேஷன்களில் நின்றது. நின்ற இடங்களில் எல்லாம் பணப் பைகள் ஏற்றப்பட்டதைக் கண்டான். "இந்தப் பணத்தையெல்லாம் நாம் எடுத்துக் கொண்டால் என்ன?' என்ற எண்ணம் திடீரென அவனது உள்ளத்தில் பளிச்சிட்டது.
லக்னொவிலிருந்து ஊருக்குத் திரும்பிய பின் சில நெருக்கமான நண்பர்களை ஷாஜஹான்பூருக்கு வருமாறு சொல்லி அனுப்பினான். அவர்களும் வந்தார்கள்.

அஷ்ஃபகுல்லா கான் செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். ராம் பிரசாதைவிட மூன்று வயது சிறியவன். இருவருக்கும் சொந்த ஊர் ஷாஜஹான்பூர். லாஹிரி ராஜேந்திரநாத் காசியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தான். தட்சிணேஸ்வரில் வெடிகுண்டு தயாரிப்பதைக் கற்றான். தாய்நாட்டு பக்தி மிகுந்தவன். மற்றொரு நண்பன் ரோஷன் சிங்கும் ஷாஜஹான் பூரைச் சேர்ந்தவனே-

பிஸ்மில் ராம் பிரசாத் தன் திட்டத்தை விவரித்தான்:

"ஷாஜஹான்பூர் - லக்னொ மெயில் வண்டியில் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கார்டு வண்டியில் பணம் ஏற்றப்படுகிறது. கார்டைத் தவிர விசேஷமாகக் காவல் எதுவுமில்லை. ரயிலை நிறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வது மிக எளிதாகச் செய்யக்கூடியது. அரசாங்கப் பணம் கொடுங்கோலர்களான ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து பறிக்கும் பணம்தான். அதை எடுத்து நமது அமைப்பை வளர்ப்போம். மக்களுக்கு உதவுவோம். மற்றொரு முக்கியமான விஷயம். நாம் ரயிலில் பயணம் செய்யும் நமது மக்களுக்கு எந்தவிதமான தொல்லையும் தரக்கூடாது.''

விவாதத்திற்குப் பின், ஆள் பலம் தேவை என்பதால் மேலும் நெருங்கிய சிலரைச் சேர்த்துக் கொள்வதென்றும், அந்த வண்டியைப் பல நாட்கள் ஆழ்ந்து கவனித்து அதன்பிறகு தான் திட்டத்தை அமல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பல நாட்கள் அந்த மெயில் வண்டியை கூர்ந்து கவனித்து, அது வரும் நேரம், ஸ்டேஷன்களில் நிற்கும் நேரம், கார்டு, வண்டி, அங்கே பணம் வைக்கப்படும் இடம், வைக்கப்படும் முறை, வண்டியில் உடன்வரும் காவல் ஏற்பாடுகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பின்னர், காக்கோரி ரயில் நிலையத்துக்கருகில் ஜனசஞ்சாரமற்ற இடத்தில் ரயிலை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடித் தப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.

1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் 8 ரயில் வண்டி ஷாஜகான்பூரிலிருந்து லக்னொயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வண்டி காக்கோரியை நெருங்கிய நேரத்தில் புரட்சிக்காரர்களில் ஒருவன் அபாயச் சங்கிலியை இழுக்க, ரயில் நின்றது. அதன் காரணத்தை அறியும் பொருட்டு விரைந்து வந்த ரயில்வே கார்டை செயலற்றவராகச் செய்துவிட்டு, புரட்சிக்காரர்கள் கார்டு வண்டியிலிருந்த பணப் பெட்டியின் பூட்டை உடைத்து, அதிலிருந்து அரசாங்கப் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு லக்னொவுக்குத் தப்பியோடினர்.

உண்மையில் வண்டியை நிறுத்திப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பத்தே பத்து பேர்தான். உடனடியாக அரசாங்கம் தீவிர விசாரணையில் இறங்கியது. ஷாஜஹான்பூர், ஆக்ரா, அலகாபாத், காசி, கொல்கத்தா, எட்டாவா, ஹர்டோய், கான்பூர், லாகூர், லக்கிம்பூர், லக்னொ, மதுரா, மீரட், ஓரை, பூனா, ராய்பரேலி, ஷாஜஹான்பூர், டெல்லி, பிரதாப்கர் ஆகிய பதினெட்டு இடங்களிலிருந்து 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதன் முதலாக 1925 செப்டம்பர் 26-ந்தேதி ஷாஜஹான்பூரில் பிஸ்மில் ராம்பிரசாத், ரோஷன் சிங் மற்றும் ஏழு பேர் போலீசாரிடம் சிக்கினார்.

ராஜேந்திரநாத் லாஹிரி கல்கத்தாவில் பிடிபட்டான். அஷ்ஃபகுல்லாகான் பத்து மாதங்களுக்குப் பின் வழக்கு முடிந்து தீர்மானிக்கப்பட்ட பிறகே டெல்லியில் கைது செய்யப்பட்டு, மீண்டும் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை பெற்றான். ஷாஜஹான்பூரைச் சேர்ந்த பனாரசிலாலும், இந்து பூஷன் மித்ராவும் அப்ரூவர் ஆனார்கள். ஐந்து பேர் தலைமறைவானார்கள். அவர்களில் இருவர் பின்னர் பிரபலமானார்கள். சந்திரசேகர் ஆசாதும், கேசவ் சக்கரவர்த்தி என்ற பெயரில் மறைந்து வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவாரும்.

சந்திரசேகர் ஆஸாத் 1928-ல் ஹிந்துஸ்தான் புரட்சி இயக்கம் துவங்கினார். 1931 பிப்ரவரி 27-ம் நாள் போலீஸ் தாக்குதலில் மாண்டார்.

சரியான சாட்சியங்கள் இல்லாததால், வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் பேரில் (ராம்பிரசாத் பிஸ்மல்லும் பிறரும்) செக்ஷன் 121-ன் கீழ் (பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தல்), செக்ஷன் 120 (அரசியல் சதி), செக்ஷன் 396 (கொள்ளையும் கொல்லையும்), செக்ஷன் 302 (கொலை) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. வழக்கு 1926 மே 21-ந் தேதி தொடங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட இளம் தேச பக்தர்கள் சார்பில் பிரபலமான தலைவர்கள் கோவிந்த வல்லப பந்த், மோகன் லால் சக்சேனா, சி.பி.குப்தா, சுஜீத் பிரசாத் ஜெயின் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு வழக்கை நடத்தியது. மோதிலால் நேரு, மாளவியா, மகமது அலி ஜின்னா, லாலா லஜபத் ராய், ஜவஹர்லால் நேரு, கணேஷ் சங்கர் வித்யார்த்தி, சிவ பிரசாத் குப்தா, ஸ்ரீபிரகாசா, ஆசார்ய நரேந்திர தேவ் ஆகியோர் ஆதரவளித்தனர். சிறப்பு செஷன்ஸ் நீதிபதி ஒ.ஹாமில்டன் வழக்கை விசாரித்தார், பண்டிட் ஜகத் நாராயண் முல்லா சர்க்கார் தரப்பு பிராசிகியூட்டர்.

இன்று போல் அல்லாமல் வழக்கு ஒரே ஆண்டுக்குள் முடிந்துவிட்டது. ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திர நாத் லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறருக்கு மூன்றாண்டுகளிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
நாடெங்கும் இத்தண்டனைகளை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

1927 செப்டம்பர் மாதத்தில் மத்திய சட்டசபை உறுப்பினர்கள் 78 பேர்கள் கையொப்பமிட்ட ஒரு விண்ணப்பத்தை பண்டிட் மதன் மோகன் மாளவியா அரசுக்கு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் 16-ந் தேதி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, இங்கிலாந்து மன்னருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. 1927 டிசம்பர் 19-ம் தேதிக்குள் தூக்குத் தண்டனைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற கடுமையான உத்தரவோடு கருணை மனு பிரிவு கெüன்சிலால் நிராகரிக்கப்பட்டது.

1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் ரயில் கொள்ளையினால் எழுந்த இந்திய மக்களின் எதிர்ப்புக் குரல் 1927 டிசம்பரில் நிகழ்ந்த தூக்குத் தண்டனைகளால் அடங்கியது.

தேசபக்த புரட்சிக்கார வாலிபர்களின் ரத்தத்தால் மேலும் நனைந்து சிவப்பாக்கியது பாரத மண், அவர்களது நினைவில் காக்கோரியில் ஒரு நினைவு மண்டபம் எழுந்துள்ளது.

ராம் பிரசாத் ஒரு கவியும் கூட, அவன் பாடிய வரிகள் பிரசித்தமாகிவிட்டன. அதுவே இப்பாடல் வரிகள்:
பிஸ்மில், ரோஷன், லாஹிரி, அழ்ஃபகுல்லா கொடுங்கோன்மையால் உயிரிழக்கின்றனர். ஆனால் அவர்களது ரத்தத்திலிருந்து அவர்களைப் போன்று நூற்றுக்கணக்கானவர் தோன்றினார்கள்.

-மு.ஸ்ரீனிவாஸன் (தினமணி)

இன்று வசம்பு பற்றிய தகவல்...

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

# இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது...!

மறைந்துவரும் மனித உறவுகள்

பொருளாதாரத் தேவை, ஆன்மிகத் தேடல், மன நிம்மதி காண வழிகள், சமூகத்தில் பாதுகாப்பு, சமுதாயத்தில் அங்கீகாரம் என பல தளங்களில் மனிதர்கள் வேகமாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இந்த வேகத்தில் மனித உறவுகள் மறைந்து அல்லது மறந்து வருவது குறித்து அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதனை வெளியில் காட்டிக் கொள்வதில் தயக்கம் உள்ளது.

முன்பு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்றால், வரவேற்பு அறையில் பல கறுப்பு -வெள்ளை புகைப்படங்கள் இருக்கும்.

"புகைப்படத்தில் இருப்பது எனது அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம், மாமா, அத்தை, சித்தி'' என வீட்டில் உள்ளவர்கள் பெருமையுடன் கூறுவார்கள்.

இப்போது தலைமுறை இடைவெளி காரணமாக பெரும்பாலான கிராமத்து வீடுகளிலும், தங்களது பிள்ளைகள், மருமகன், மருமகள், பேரன், பேத்தி புகைப்படங்களை மட்டுமே காட்சிக்கு வைத்துக் கொண்டு உறவுகளைச் சுருக்கிவிட்டனர். மற்றவர்கள் ஆல்பங்களுக்குள் மறைந்துவிட்டனர்.

நகரங்களில் கேட்கவே வேண்டாம். உடன் பிறந்தவர்களின் புகைப்படங்களையே வீட்டில் மாட்டி வைத்திருப்பதில்லை. ஏன் இந்த மாற்றம்? கல்யாணம், சடங்கு, காது குத்துதல் போன்ற விழாக்களை நமது முன்னோர்கள் ஏன் அமைத்தனர்?

அந்த விழாக்களில் உறவினர்கள் கூடி, பேசி தங்களது அனுபவங்களையும், பழக்க வழக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சிகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான். எந்த ஒரு நிகழ்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியே தனி தான்.

முன்பு திருமண விழா என்றால் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு முன்பே உறவினர்கள் கூடி விடுவார்கள். கோலமிடுவது, இட்லிக்கு மாவு ஆட்டுவது, பொருள்கள் வாங்கச் செல்வது என பல வேலைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து செய்துவந்தனர்.

இப்போது திருமணம் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் என இருந்தால் 9.30 மணிக்கு வந்து, திருமணம் முடிந்ததும், உணவு அருந்தினாலும், அருந்தாவிட்டாலும் மறு விநாடியே, "வேலை உள்ளது செல்கிறேன்'' எனக் கூறி, சென்று விடுகிறார்கள்.

தற்போது உள்ள திருமண வீட்டில் திருமண நாள் மாலையில் உடன் பிறந்தவர்கள் கூடத் தங்குவதில்லை. அந்த அளவுக்கு வேகமாக மக்கள் இயங்கத் தொடங்கி விட்டனர். மனித உறவுகள் என்பது மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டாடுவதற்குத்தான் என்பதை மனிதர்கள் மறந்து வருவது வருத்தத்திற்கு உரியது.

எவ்வளவு வேலைகள் இருந்தாலும், குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்குங்கள். மனைவி, குழந்தைகளுடன் அந்த நேரத்தில் இருந்து சிரித்துப் பேசி மகிழுங்கள் என உளவியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அதே போல, உறவினர்களுடனும் விழாக்களில் பார்க்கும் போது சிறிது நேரத்தைச் செலவிடுங்கள். அதில் உங்களுக்கு ஒரு மனநிம்மதி கிடைக்கும்.

"சந்தோஷம் பனித்துளி போன்றது, சிரிக்கும்போதே உலர்ந்து விடுகிறது'' என அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

விழாக் காலங்களில் உறவினர்களைப் பார்த்துச் சந்தோஷப் புன்னகை புரியக்கூட நாம் நேரம் ஒதுக்குவதில்லை. வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதையும் மீறி நாம் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். அதுபோலத்தான் மனித உறவுகளும். சண்டை சச்சரவுகள் இருக்கும். அதை ஒதுக்கிவைத்துவிட்டு, மகிழ்ச்சிக்கு மரியாதை கொடுப்போம்.

- எஸ். பாலசுந்தரராஜ்(தினமணி)

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டி
ப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.

நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.

இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.

அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம்

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பிளாஸ்டிசைசர்ஸ் எனப்படுபவை குறைவான ஆவியாகும் தன்மையுடைய கரிம எஸ்டர்களாகும். உணவுப்பொருட்கள் இப்பைகளில் எடுத்துச்செல்லும்போது, உணவுப்பொருட்களில் கலந்துவிடுகின்றன. இவைகளும் புற்றுநோயினை உருவாக்கக்கூடும்.

ஆண்டி ஆக்ஸடென்ட்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர்கள் கரிம மற்றும் கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களாகும். இவை வெப்பம் அதிகரிக்கும்போது இவைகளும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து வெளியேறி அதில் எடுத்துச்செல்லும் உணவுப்பொருட்களில் கலந்து உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

விஷத்தன்மையுடைய காட்மியம் மற்றும் காரியம் போன்ற தனிமங்கள் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகின்றன. இத்தனிமங்களும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து கரைந்து அதிலிருக்கும் உணவுப் பொருட்களை மாசுபடுத்துகின்றன. காட்மியம் சிறிதளவு உடலில் உறிஞ்சப்படும்போது இருதய வீக்கம், வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது. காரியம் நீண்ட நாட்களுக்கு உடலில் எடுத்துக்கொள்ளப்பட்டால் அது மூளைத் திசுக்களின் அழிவை ஏற்படுத்தும்.

மார்கழி மாதம்

மார்கழி மாதம் பிறந்து விட்டது . இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இவற்றை, "சூன்ய மாதம்' என்கின்றனர்.

"சூன்யம்' என்றால், "ஒன்றுமில்லாதது' எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவ
த்தை (இறைவனைச் சரணடைதல்) கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.

மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்' என்று வடமொழியில் சொல்வர். 'மார்கம்" என்றால், வழி - "சீர்ஷம்' என்றால், உயர்ந்த - "வழிகளுக்குள் தலைசிறந்தது' என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்...' என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.

அவள் தியாகச் செம்மலும் கூட. திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள். கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்; அவள் மறுத்து விட்டாள்.

"ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப் படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் செல்லவே மாட்டேன்...' என்றாள். பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள். ஆண்டாள் எனும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்.

திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகப் பெருமானும், தியாகச் செம்மலாகத் திகழ்ந்தார். அவர், மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். சிறந்த அறிஞரான அவரை, பாண்டிய மன்னன் தன் அமைச்சராக்கி, அழகு பார்த்தான். அரசாங்கப் பணியை விட, ஆண்டவன் பணியே உயர்ந்ததெனக் கருதி, அதை உதறியவர், சிவபெரு மானின் குரு வடிவ தரிசனம் பெற்றார். ஆவுடையார் கோவில் திருப்பணியை திறம்பட நடத்தினார். திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எனும் தலைப்பில், தித்திக்கும் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்களைப் பாடி, நோன்பிருந்த பெண்கள், சிவ பக்தர்களை கணவனாக அடையும் பாக்கியம் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினர்.

மார்கழி மாத நோன்பு, தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், கோவில்களில் வழிபாடு வழிவழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை, 4:30 மணிக்கே எழுந்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும்.

"இறைவா... என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து...' என வணங்குங்கள்; இறைவன் நல்லருள் தருவான்.

- தி. செல்லப்பா (வாரமலர்)

டிசம்பர் 17 [December 17]....

நிகழ்வுகள்

  • 1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
  • 1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
  • 1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
  • 1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
  • 1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • 1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.
  • 1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
  • 1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
  • 1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
  • 1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

  • 1908 - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் (இ. 1980)
  • 1959 - ரஞ்சகுமார், ஈழத்தின் சிறுகதையாசிரியர்
  • 1972 - ஜோன் ஆபிரகாம், இந்திய நடிகர்

இறப்புகள்

  • 1947 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (பி. 1879)
  • 1967 - ஹரல்ட் ஹோல்ட், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் (பி. 1908)

சிறப்பு நாள்

  • பூட்டான் - தேசிய நாள் (1907)
  • ஐக்கிய அமெரிக்கா - ரைட் சகோதரர்கள் நாள்
  • பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

Tuesday, December 11, 2012

சித்தர்கள் வகுத்த வர்மக்கலை

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ...ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை ம
ுழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.


இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் "அக்கு பஞ்சர்" போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும். ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.


தலைப்பகுதி வர்மங்கள் (37)
1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர வர்மம்
9.பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
1.உதிர்க் கால வர்மம்
2.பள்ளை வர்மம்
3.மூத்திர கால வர்மம்
4.குத்து வர்மம்
5.நேர் வர்மம்
6.உறுமி கால வர்மம்
7.ஆமென்ற வர்மம்
8.தண்டு வர்மம்
9.இலிங்க வர்மம்
10.ஆண்ட கால வர்மம்
11.தாலிக வர்மம்
12.கல்லடைக் கால வர்மம்
13.காக்கடை கால வர்மம்
14.புச வர்மம்
15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
1.மேல் சுருக்கி வர்மம்
2.கைக்குழி காந்தாரி வர்மம்
3.மேல்க்கைப் பூட்டு வர்மம்
4.கைச் சிப்பு எலும்பு வர்மம்
5.பூணூல் கால வர்மம்
6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
7.கச்சை வர்மம்
8.கூச்ச பிரம்ம வர்மம்
9.சங்கு திரி கால வர்மம்
10.வலம்புரி இடம்புரி வர்மம்
11.மேல் சுருக்கு வர்மம்
12.மேலாக கால வர்மம்
13.கீழாக கால வர்மம்
14.தட்டேல்லு வர்மம்
15.மேலஅண்ட வர்மம்
16.நாயிருப்பு வர்மம்
17.கீழ் அண்ட வர்மம்
18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
1.வலம்புரி இடம்புரி வர்மம்
2.தல்லை அடக்க வர்மம்
3.துதிக்கை வர்மம்
4.தட்சணக் கால வர்மம்
5.சுழுக்கு வர்மம்
6.மூட்டு வர்மம்
7.மொளியின் வர்மம்
8.கைக்குசத்திட வர்மம்
9.உள்ளங்கை வெள்ளை வர்மம்
10.தொங்கு சதை வர்மம்
11.மணி பந்த வர்மம்
12.திண்டோதரி வர்மம்
13.நடுக்கவளி வர்மம்
14.சுண்டு விரல் கவளி வர்மம்
15.மேல் மணிக்கட்டு வர்மம்
16.விட மணி பந்த வர்மம்
17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
1.முதிர கால வர்மம்
2.பத்தக்களை வர்மம்
3.ஆமைக்கால வர்மம்
4.பக்க வர்மம்
5.குழச்சி முடிச்சி வர்மம்
6.சிறுவிரல் கவளி வர்மம்
7.சிரட்டை வர்மம்
8.கால் மூட்டு வர்மம்
9.காலக் கண்ணு வர்மம்
10.நாய்த் தலை வர்மம்
11.குதிரை முக வர்மம்
12.கும்பேறி வர்மம்
13.கண்ணு வர்மம்
14.கோணச்சன்னி வர்மம்
15.கால வர்மம்
16.தட வர்மம்
17.கண் புகழ் வர்மம்
18.அனகால வர்மம்
19.பூமிக் கால வர்மம்
20.இடுப்பு வர்மம்
21.கிழிமேக வர்மம்
22.இழிப் பிழை வர்மம்
23.அணி வர்மம்
24.கோச்சு வர்மம்
25.முடக்கு வர்மம்
26.குளிர்ச்சை வர்மம்
27.குசத்திட வர்மம்
28.உப்புக் குத்தி வர்மம்
29.பாதச் சக்கர வர்மம்
30.கீழ் சுழி வர்மம்
31.பதக்கல வர்மம்
32.முண்டக வர்மம்

நன்றி♥.

வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்...

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள்.

மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம்.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம் எந்த ஒரு செயலுக்கு தீர்வு இல்லாமல் இருக்காது. அதுப்போல் தான் வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், கொழுப்புகள் கரைந்து, அழகான ஸ்லிம்மான தோற்றத்தைப் பெறலாம். சரி, அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா....

கருப்பு பீன்ஸ் :
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேரிக்காய் :
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாப்கார்ன் :
ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும் சிறந்தது. ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட, அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பையும் வராமல் தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு :
அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

வேர்க்கடலை:
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதைகள்:

கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

வெள்ளை டீ (White Tea) :

நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

ஆப்பிள் :

சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது. இந்த ஆசிட் உடலில் சென்றால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும். ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.

குசம்பப்பூ :

எண்ணெய் (Safflower Oil) உடலில் தொப்பை ஏற்படுவதற்கு காரணமே உண்ணும் உணவுகள் தான். ஆனால் அதே உணவுகளில் சில உணவுப் பொருட்கள் உடல் எடையை குறைத்து, தொப்பை ஏற்படாமல் தடுக்கும். அதிலும் சாலட்டில் சேர்க்கப்படும் குசம்பப்பூ எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஓர் ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் குசம்பப்பூ எண்ணெயை உடலில் சேர்த்தால், நிச்சயம் தொப்பையைத் தடுக்கலாம் என்று சொல்கிறது

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்

கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.
வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !''

நன்றி
பரமக்குடி சுமதி

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்:-

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!


சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் ளாக்டோ இருக்கிறது.
தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

டிசம்பர்ல உலகம் அழியப்போகுது

டிசம்பர்ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.....
'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு.....

காலைல எந்திருச்சு,குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல;

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல..

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல;

Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல..

Client பேசற englisha subtitle இல்லாம புரிஞ்சுக்க தேவ இல்ல...

TVya போட்டாலே வர்ற, 'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல...

கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல...

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க தேவ இல்ல...

டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல...

சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது...

'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல...

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல...

வருமகோட்ல வாழ்ற ஹீரோ.. எருமமாட்ல பொழப்பு நடத்தற ஹெரோஇனே... நடுரோட்ல accident ஆகி சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல...

ஒரு படம் ஓடிருச்சுன்னா .. "3 நாள்ல 44 கோடி வசூல்.. 4 நாள்ல 56 கோடி வசூல்.. 2 nd டே மேட்னி showla சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......" இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' - இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125 பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும்.. குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்..வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்..பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்..கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

உலகம் அழியட்டும்....

நரகம் சொர்க்கமானது எப்படி?

அது பிதுர்லோகம்.துர்வாச முனிவர் வருகிறார் என்றதும், அங்கிருந்த நம் மறைந்த மூதாதையர்களாகிய அத்தனை பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் பிதுர்லோகத்தில் காலடி எடுத்து வைத்தார் துர்வாசர். அவரை பிதுர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்று மகிழ்ந்தனர்.

திடீரென்று, “அய்யோ... அம்மா...” என்று கூக்குரல்கள்! அது வந்த திசையைக் கூர்ந்து நோக்கினார் துர்வாசர். இப்போது, அந்த அவலக்குரல்களின் வேகம் இன்னும் அதிகரித்திருந்தது.

“அங்கே என்ன நடக்கிறது?” என்று கேட்பது போல், அருகில் நின்ற பிதுர்களை ஏறிட்டார் துர்வாசர்.

“மகா முனிவரே! பூலோகத்தில் பாவம் செய்தவர்கள் எப்படியும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அவர்களின் பாவங்களை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்டவையே நரகங்கள்! அவற்றுள் முக்கியமானது கும்பீபாகம் என்னும் நரகம். சிவ துரோகிககள், குரு துரோகிககள், கடவுள் இல்லை என்று சாடுபவர்கள், மோக வெறியால் பெண்களை சீரழித்தவர்களுக்கு அங்கே தண்டனை வழங்கப்படும். எமதூதர்கள் அவர்களுக்கு பல்வேறு தண்டனைகளை கொடுப்பார்கள். அவற்றின் வேதனை தாங்க முடியாமல்தான் அங்கே கத்துகிறார்கள்...” என்று விளக்கம் கொடுத்தார்கள், பிதுர்கள்.

அவர்கள் இப்படிச் சொன்னதும், துர்வாசருக்கு கும்பீபாகம் நரகத்தை பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. உடனே, கும்பீபாகம் அமைந்திருந்த இடத்தை நோக்கி நடந்தார். அதற்குள் என்னதான் நடக்கிறது என்று எட்டிப் பார்த்தார்.

பூலோகத்தில் பாவத்தை தாராளமாகச் சேர்த்தவர்கள் அங்கே நரக வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

“அய்யோ பாவம்...” என்பது போல் நெற்றியை சுருக்கிக் கொண்டு, அங்கிருந்து பிதுர்லோகத்திற்கு மீண்டும் திரும்பினார். சிறிதுநேரத்தில் பிதுர்லோகத்தில் இருந்தவர்களிடம் விடை பெற்றுவிட்டு புறப்பட்டார்.

துர்வாசர் சென்ற அடுத்த நொடியே கும்பீபாகம் நரகத்தில் ஒரேயடியாக மாற்றம் நிகழ்ந்தது. அங்கிருந்து அதுவரை வந்து கொண்டிருந்த அவலக் குரல்கள் திடீரென்று மறைந்து போயின. மாறாக, மகிழ்ச்சியில் திளைப்பவர்களிடம் இருந்து வெளிப்படும் சந்தோஷ ஆரவாரம் அங்கிருந்து வந்தது. பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த எம தூதர்கள், தாங்கள் தண்டனை கொடுத்தவர்கள் திடீரென்று ஆரவாரத்துடன் எழுந்து மகிழ்ந்து ஆடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்த நிமிடமே எமதர்மராஜனுக்கு தகவல் போனது. கும்பீபாகம் நரகத்தில் நடந்த மாற்றங்கள் பற்றி கூறப்பட்டது. அவருக்கும் அதிர்ச்சி! ஆனாலும், அது உண்மையாக இருக்குமா? என்று சின்ன சந்தேகம். கும்பீபாகம் நரகத்திற்கு வந்து அதை உறுதி செய்து கொண்டார்.

கும்பீபாகம் நரகத்தில் நடந்த அற்புதத்தைக் காண தேவேந்திரன் தலைமையில் தேவர்களும் வந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் அதுபற்றிக் கூற... அவர் சிவபெருமானிடம் நடந்ததைக் கூறி தனது வியப்பை வெளிப்படுத்தினார்.

சிவபெருமான் கண்களை மூடி ஒருகணம் யோசித்துவிட்டு விஷ்ணுவைப் பார்த்தார்.“என் பக்தனான துர்வாசரால் ஏற்பட்ட மாற்றம்தான் இது. கும்பீபாகம் நரகத்தில் பாவிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது என்று அவர் பார்த்ததால் இப்படி நிகழ்ந்துள்ளது.

அதற்கு காரணம் அவர் தனது நெற்றியில் தரித்திருந்த திருநீறுதான். அவர், நெற்றியை சுருக்கி பாவிகளைப் பார்த்து வேதனைப்பட்ட போது, திருநீறு துகள்கள் காற்றில் பறந்து கும்பீபாகம் நரகத்தில் விழுந்தன. அந்த திருநீறுவின் மகிமையால் அங்கு அதுவரை நடந்த கொடுமைகள் மாறி, அந்த நரக லோகமே சொர்க்க லோகமாக மாறிவிட்டது...” என்று ஒரு விளக்கம் கொடுத்தார் சிவபெருமான்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக இன்னொரு கும்பீபாகம் நரகத்தை உருவாக்கி, தனது பணியை வழக்கம் போல் செய்யத் தொடங்கினார் எமதர்மராஜன்.

முதுமையை தடுக்கும் பலாப்பழம்

மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.

நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.

அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

Tuesday, December 4, 2012

டி.இ.டி - உயிரியல்

1. இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம், விசை, உந்தம், எடை போன்றவை திசை அளவுருகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
2. ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் முடுக்கம் எனப்படும். இதன் அலகு மீவி2 ஆகும்.
3. ஒரு கனமான சிறிய உலோகக் குண்டு மீட்சித் தன்மையற்ற, எடையற்ற நூலால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனி ஊசல் ஆகும்.
4. மையப் புள்ளியிலிருந்து ஊசல் குண்டு அடையும் பெரும் இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.
5. தனி ஊசலின் அலைவு நேரம், ஊசல் குண்டு செய்யப்பட்டுள்ள பொருளையோ அல்லது குண்டின் நிறை மற்றும் உருவத்தையோ பொருத்தத்தல்ல.
6. அலைவு நேரம் ஊசலின் வீச்சைப் பொருத்ததல்ல.
7. ஓரலகு பரப்பில் செங்குத்தாக செயல்படும் இறுக்கு விசையே அழுத்தம் ஆகும்.
8. புவியைச் சுற்றியுள்ள காற்று உறையே வளிமண்டலம் எனப்படும்.
9. உயரம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறையும்.
10. ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது ஏற்படும் காற்றின் எடையே ஒரு வளிமண்டல அழுத்தம் ஆகும்.
11. ஒரு வளிமண்டல அழுத்தம் 0.76 மீட்டர் பாதரச தம்பம் ஆகும்.
12. வளிமண்டல அழுத்தத்தை அளவிட பாரமானிகள் பயன்படுகின்றன
13. மை நிரப்பும் கருவி, நீர் இரைக்கும் பம்பு, வடிகுழாய், உறிஞ்சி குழாய், மருந்தேற்றும் ஊசி போன்றவை காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகள் ஆகும்.
14. ஃபார்ட்டின் பாரமானி என்பது வளிமண்டல காற்றின் அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.
15. சீரான மிக குறுகிய துவாரம் கொண்ட கண்ணாடிக் குழாய் நுண்புழைக் குழாய் எனப்படும்.
16. நுண்புழைக் குழாயில் திரவத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் நுண்புழை நிகழ்வு எனப்படும். திரவத்தின் பரப்பு இழுவிசை என்ற பண்பினாலேயே இந்நிகழ்வு ஏற்படுகிறது.
17. நுண்புழை ஏற்றத்தினால் மரங்களிலும் தாவரங்களிலும் நீர் மேலே உறிஞ்சப்படுகின்றன.
18. பொருள்களை வெப்பப்படுத்தும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.
19. ஒரு பொருளின் வெப்பநிலை என்பது, அதில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வெப்ப ஆற்றலின் அளவாகும். அது பொருளின் வடிவத்தை சார்ந்ததில்லை.
20. வெப்பமும்,வெப்பநிலையும் ஒன்றல்ல, அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகளைக் குறிக்கின்றன.

பென்னி குயிக்

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுக்கு உயிர் கொடுத்தவர் பென்னி குயிக். அந்த மாபெரும் மனிதரைப் பல குடும்பங்கள் தெய்வமாக மதித்தன. இன்றும்கூட பல வீடுகளில் தங்கள் முன்னோர் படங்களுடன் பென்னி குயிக் படத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர். ஆனால், இந்த அளவுக்கு அந்த மாமனிதரை தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் இன்றும்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பென்னி குயிக்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறாக இல்லை. அவரைப் பற்றி அறிந்த பொறியாளர்கள் மத்தியில் மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். சிறு அளவில் கருத்தரங்குகளில் பேசப்படுகிறார். இப்போது, இந்த மணிமண்டபம் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருப்பதன் மூலம், தமிழர் அனைவருக்கும் குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு இந்த மாபெரும் மனிதரின் அளப்பரிய சேவை மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார்.

இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

தெருச் சாக்கடை திட்டத்துக்கும்கூட 10 விழுக்காடு எதிர்பார்க்கும் இந்த நாளில், தன் சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடிக்க பென்னி குயிக் முற்பட்டதன் காரணம், நம்மவர்களைவிட ஆங்கிலேயரான அவர் இந்த மக்களின் வேதனையைப் புரிந்துகொண்டவர் என்பதுதான். அணுக முடியாத காட்டுப் பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, எத்தகைய வெள்ளம் வந்தாலும் தாங்கி நிற்கும் அளவுக்கு இந்த அணையைப் புவியீர்ப்பு விசை அணையாகக் கட்டினார். அதாவது, அணையில் 156 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கும்போது, அணையைத் தகர்த்து வெளியேற முட்டுகின்ற நீரின் விசையைத் தாங்கும் அளவுக்கு, அணையின் மொத்த எடை (அல்லது நிறை) இருக்கும் வகையில் அமைக்கப்படுவதே புவியீர்ப்பு விசை அணை! கற்களாலும் சுண்ணாம்பாலும் அமைந்த இந்த அணையின் நிறை மேலும் கூட்டப்பட்டுள்ளதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. ஆனால், 156 அடி உயரத்துக்கு நீர் தேக்காமல், தற்போது 132 அடி உயரம்தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது அணை நீரின் விசை மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், கேரளத்தின் அழுகுணிக் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

தமிழர் வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணிப்பு செய்த பென்னி குயிக் மணிமண்டப வளாகம், தமிழகத்தின் சிறுவிவசாயிகளுக்கு தங்கள் பகுதி நீராதாரத்தை எப்படிச் செவ்வனே பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லித் தரும் வளாகமாக மாறட்டும்.

திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

இந்திய இளைஞர்களின் மனதில் ஒரு முன்மாதிரி மனிதராக வீற்றிருப்பவர் திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவருடைய எளிமையால் இந்தியர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam), 1931 ம் வருடம் அக்டோபர் 15 ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை பெயர் ஜெய்னுலாப்தீன்(Jainulabdeen), தாயார் பெயர் அஷியம்மா(Ashiamma). இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானியான அ
ப்துல் கலாம், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 லிருந்து 2007 வரை இருந்துள்ளார். இந்திய வேண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அப்துல் கலாமின் பள்ளிப்பருவம்

அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்துள்ளார். இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமின் தந்தை இந்து மத தலைவர்களிடமும் மிகுந்த அன்புகொண்டிருந்தார். அப்துல் கலாமின் குழந்தை பருவத்தில் அவருடைய குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்தன. அதற்க்காக அப்துல் கலாம் தன் பள்ளிப்பருவத்தில் வீடு வீடாக நாளிதழ் விநியோகம் செய்து தன் குடும்ப சுமையை குறைத்துள்ளார். வகுப்பில் சராசரி மாணவனாக இருந்தாலும் அவருடைய கடின உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்தார்.

அப்துல் கலாமின் கல்லூரி பருவம்

பள்ளிப்படிப்பை முடித்த அப்துல்கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளரான சுஜாதா, அப்துல் கலாமுடன் செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தனர். 1954 ம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்ற அப்துல் கலாம் தன்னை ஒரு இயற்பியலாலராக திருப்தியடையவில்லை. 1955 ல் சென்னைக்கு வந்து வான்வெளி பொறியியல் படித்தார். 1960 ம் ஆண்டு MADRAS INSTITUTE OF TECHNOLOGY ல் பொறியியல் பட்டம் பெற்றார்.

கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானி அப்துல்கலாம்

பொறியியல் பட்டம் பெற்ற அப்துல் கலாம் DRDO வின் AERONAUTICAL DEVELOPMENT ESTABLISHMENT ல் தலைமை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு அவர் இந்திய ராணுவத்திற்கு ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்தார். “இந்தியாவின் ஏவுகணை மனிதன்” ஏற்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 1998 ம் ஆண்டு நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் , மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சிறப்பு பேராசிரியராக உள்ளார்.

1981 ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருதும், 1990 ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும், 1997 ம் ஆண்டு பாரத ரத்னா விருதும் பெற்றார். உலகளவில் 30 பல்கலைகழகங்கள் அப்துல் கலாமிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

2002 ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தும், பிரம்மச்சாரியான அப்துல் கலாமின் எளிமை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததில் வியப்பில்லை.

முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர் பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள்

இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய தமிழர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு இந்த மாதத்தின் நினைவாஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன
்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.

இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார் கோவை, கொடுமுடியில் 1908 அக்டோபர் 11 அன்று பாலாம்பாளின் புதல்வியாக சுந்தராம்பாள் பிறந்தார். கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மை குடும்பம். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண்வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ பாடலை அருமையாகப் பாடி ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது.

அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கே.பி.எஸ் பாடல் இசைத்தட்டுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை.

அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர்.

சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார். திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
“சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண் கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.
தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.