Monday, December 17, 2012

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம்

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பிளாஸ்டிசைசர்ஸ் எனப்படுபவை குறைவான ஆவியாகும் தன்மையுடைய கரிம எஸ்டர்களாகும். உணவுப்பொருட்கள் இப்பைகளில் எடுத்துச்செல்லும்போது, உணவுப்பொருட்களில் கலந்துவிடுகின்றன. இவைகளும் புற்றுநோயினை உருவாக்கக்கூடும்.

ஆண்டி ஆக்ஸடென்ட்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர்கள் கரிம மற்றும் கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களாகும். இவை வெப்பம் அதிகரிக்கும்போது இவைகளும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து வெளியேறி அதில் எடுத்துச்செல்லும் உணவுப்பொருட்களில் கலந்து உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

விஷத்தன்மையுடைய காட்மியம் மற்றும் காரியம் போன்ற தனிமங்கள் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகின்றன. இத்தனிமங்களும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து கரைந்து அதிலிருக்கும் உணவுப் பொருட்களை மாசுபடுத்துகின்றன. காட்மியம் சிறிதளவு உடலில் உறிஞ்சப்படும்போது இருதய வீக்கம், வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது. காரியம் நீண்ட நாட்களுக்கு உடலில் எடுத்துக்கொள்ளப்பட்டால் அது மூளைத் திசுக்களின் அழிவை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment