Tuesday, September 29, 2015

புரட்டாசி மாதம் நான் வெஜ் சாப்பிடக்கூடாது ஏன்? - அறிவியல் பூர்வமான தகவல்கள்!!!



புரட்டாசி மாதம் வந்துவிட்டால் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் காத்திருக்கும். நல்ல செய்தி அம்மாக்கள் தினந்தோறும் கோவிலுக்கு செல்வது, கெட்ட செய்தி வீட்டில் அசைவத்திற்கு தடை விதிப்பது. ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்றால் கூட அம்மாவின் கோவம் கலந்த பாசமான கட்டளை நம்மை தடுத்துவிடும்.

 காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் - ஆய்வில் தகவல்!
 
வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது ஏன் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடக் கூடாது? பெருமாளை வணங்க செல்வதனால் என்பதற்காகவா? பிறகு ஏன் வேறு மாதங்களில் கோவிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிடுகிறோம்? இந்த புரட்டாசி மாத விரதம் மற்றும் அசைவம் ஒதுக்குவதன் பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணங்களும், உடல்நலம் சார்ந்த விஷயங்களும் உள்ளடங்கி இருக்கிறது....

காலநிலை வேறுபாடு
 
புரட்டாசி மாதத்தில் வெயிலும், காற்றும் குறைந்து, மழை ஆரம்பிக்கும் காலமாகும். ஆனால், பூமி குளிரும் அளவு மழை பொழிவு இருக்காது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து இருந்த வெப்பத்தை பூமி குறைக்க ஆரம்பிக்கும்.

சூட்டை கிளப்பிவிடும்

மழை ஆரம்பிக்கும் போது பூமியின் சூடு மெல்ல, மெல்ல குறைந்து, சூட்டை வெளியே கிளப்பிவிடும் காலம் இது. ஆகையால் இது வெயில் காலத்தை விடவும் கெடுதல் தரக்கூடியது.

அசைவம் வேண்டாம்
 
ஏற்கனவே, பூமியில் இருந்து உஷ்ணம் வெளிவருவதால், இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டையும் அதிகப்படுத்தி, உடல் நலத்தை சீர்கெடுக்கும்.

வயிறு மற்றும் செரிமானம்
 
இவ்வாறு சூடு அதிகரிப்பதால் வயிறு மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் வேண்டாம் என்று நமது முன்னோர்கள் ஒதுக்கி
இருக்கிறார்கள்.

காய்ச்சல், சளி பிரச்சனை
 
சரியாக பெய்யாத மழை, மற்றும் தட்பவெப்பநிலை மாறுதல் போன்றவற்றால் நோய் கிருமிகள் தாக்கம் அதிகரித்து காய்ச்சல், சளி போன்ற உடல்நல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்,
இதை துளசி கட்டுப்படுத்தும். இதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து, பெருமாளுக்கு உகந்த மாதமாய் வைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.

முன்னோர்களின் அறிவியல் ஞானம்

வெறுமென எதையும் செய்யாமல், அதற்கு ஓர் கட்டுபாடுகள் வைத்து, மக்கள் அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று தான் இவ்வாறான செயல்களை முன்னோர்கள் செய்துள்ளனர். ஆன்மிகம் என்பதை தாண்டி, அதன் பின்னணியில் மருத்துவம் மற்றும் அறிவியல் இருப்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய சரித்திர தகவல்கள்!

ஔரங்கசீப், முகலாய பேரரசின் முக்கியமான பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியனருக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்தார் ஔரங்கசீப். இவரை “ஆலம்கீர்” என்றும் அழைத்து வந்தனர். பாரசீக மொழியில் ஆலம்கீர் என்றால் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என்று பொருள்.


இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பெரும் ஆட்சி செய்துவந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் என்ற பெருமைக்குரியவர் ஔரங்கசீப். முகலாய மன்னர்களில் அக்பரும், ஔரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது….

ஔரங்கசீப்பின் ஆட்சி பரப்பளவு ஔரங்கசீப் தன் ஆட்சி பரப்பளவு கந்தகாரில் தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினர். இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது என கூறப்படுகிறது.

சிவாஜியின் சமக்காலத்தில் ஔரங்கசீப் இவரது சமகாலத்தில் தான் சிவாஜி ஓர் பலமிக்க மராட்டிய பேரரசை தக்காணத்தில் வழிநடத்தி வந்தார். ஔரங்கசீப் இராஜாவாக இருந்த காலத்தில் தான் சிவாஜி உயிரிழந்தார்.
சிவாஜியின் இறப்பிற்கு பின் ஔரங்கசீப் மராட்டிய சிவாஜி இறந்த பிறகு, மராட்டிய நாட்டை பிடித்தது மட்டுமில்லாது, சிவாஜியின் மகனான சம்பாஜியையும் சிறைப் பிடித்தார் ஔரங்கசீப் .

இராசாராமோடு போர் மேலும் சிவாஜியின் மகன் சம்பாஜியை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் இருந்த சில கோட்டைகளையும் கைப்பற்றினார் ஔரங்கசீப்.

செஞ்சிக்கு தப்பிய இராசாராம் இந்த போரின் போது தப்பித்து செஞ்சிக்கு சென்றார் இராசாராம். இது போன்று, மாராட்டியரோடு ஏறத்தாழ தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக போரிட்டு வந்துள்ளார் ஔரங்கசீப்.

தக்காண பீடபூமி தென்னிந்தியாவின் நிலப் பகுதிகளை தக்காண பீடபூமி என்று கூறுவதுண்டு. வட இந்தியா, தென்னிந்தியாவை பிரிக்கும் விந்திய மலைத்தொடரை தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தது ஔரங்கசீப்பின் காலத்தில்.

செஞ்சியை வென்ற ஔரங்கசீப்பின் தளபதி ஔரங்கசீப்பின் தளபதி சூல்பிகார் கான் என்பவர் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். இதனால் அகம் மகிழ்ந்து போன ஔரங்கசீப், அந்த பகுதியின் ஆளுநராக (நவாப்) சூல்பிகார் கானையே நியமித்தார்.

ஐதராபாத் தலைநகர் முகலாயப் படைகள் வெற்றி கொண்ட பகுதிகளுக்கு தலைநகராய் ஐதராபாத்தை அறிவித்தார் ஔரங்கசீப். இவருக்கு கீழ் அதிபராக இருந்து ஐதராபாத்தில் ஆட்சி செய்தவர்களே ஐதராபாத் நிசாம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஔரங்கசீப்பின் பெருமை இவ்வாறு சிறப்பான முறையில் ஆட்சி மேலாண்மை செய்து வந்ததன் காரணமாகவே ஔரங்கசீப் பேரரசால் இந்தியாவின் பெரும் பகுதியை வெற்றிக் கண்டு ஆட்சி செய்ய முடிந்தது. இதனால் தான் இவர் இந்தியாவை ஒருங்கிணைத்த முதல் பேரரசர் என்ற வரலாற்று புகழுக்கு சொந்தக்காரர் ஆனார்.

மிகவும் எளிமையானவர் ஔரங்கசீப் பல வரலாற்று ஆசிரியர்கள் ஔரங்கசீப் மிகவும் எளிமையான அரசர். இவர் செல்வத்திற்கு மயங்கியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலும் வெள்ளை உடைதான் அணிவாராம். இவரது தலைப்பாகையில் கூட ஒரே ஒரு கல் தான் பதிக்கப்பட்டிருந்தது எனவும் சில வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. தனக்கென மாளிகை கூட காட்டியதில்லையாம் ஔரங்கசீப்.

ஔரங்கசீப்பின் உடல்வாகு இவர் மிகவும் உயரமானவர் எல்லாம் இல்லை, ஔரங்கசீப்பின் மூக்கு கொஞ்சம் பெரியதாக இருக்குமாம், கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு கொண்டவர் தான் ஔரங்கசீப் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எப்போதுமே எளிமையாக தான் இருப்பாராம் ஔரங்கசீப்.
ஔரங்கசீப்பின் இறப்பு 1707ம் ஆண்டு மார்ச் மாதம் ஓர் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீப்பின் உயிர் பிரிந்தது.

ஔரங்கசீப்பின் உயில் “தன் கையால் தொப்பி செய்து விற்ற பணத்தில் தன் உடல் மீது போர்த்த வேண்டிய கஃபன் துணியை வாங்குங்கள். என் கையால் எழுதிய திருக்குர்ஆன் எழுத்து பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு தானமாய் வழங்குங்கள். எந்த ஆடம்பரமும் இன்றி என் உடலை அருகில் இருக்கும் இடுகாட்டில் அடக்கம் செய்யுங்கள்” என்று ஔரங்கசீப் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் அப்பேர்ப்பட்ட வசனம்

நமது வைகைப்புயல் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் அப்பேர்ப்பட்ட வசனம் தான் இது:

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…”

இது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும் என என் பட்சி சொல்லிற்று. சரி அலசித்தான் பார்ப்போமே என்று கூகுள்'ல என் தேடலை ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ புகுந்து நெளிந்து வளைந்து ஒரு வழியா அந்த விளக்கம் ஒரு வடிவம் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, அடடடா! யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், மேலும் படியுங்கள்…

இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....??

குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்…

அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில் ஆகி மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.
இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” என்ற விடுகதைக்கான விளக்கம்.

இது தான் சாக்குன்று யாராவது அந்த படத்தில் வரும் இன்னொரு விடுகதைக்கு விளக்கம் கேட்டால் என்ன செய்வது என பதறினேன். யாமிருக்க பயமேன் என மீண்டும் கூகிள் கைகொடுத்தது…

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…”
இதற்கும் புராணத்தை வைத்து விளக்கிவிடலாம். ரொம்ப முத்தீருச்சின்னு நினைக்கிறேன்(!).

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். சரி, சட்டை எதற்காக போடுகிறோம்? நெஞ்சை மறைப்பதற்கு. தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது, அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள் சரிதான்...??

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?

ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.
இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…" என்பதற்கான சிறந்த விளக்கம்…
ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொலவடை உண்டு;

“If you can’t convince them,
Just confuse them!”.

அதாவது, உங்கள் பதில் ஒருவருக்கு திருப்தி அளிக்காது என்று தோன்றினால், அவர் மறுகேள்வி எழுப்பாத வண்ணம் அவரை குழப்பிவிட வேண்டும்.
ரொம்ப சீரியஸான வாழ்க்கைக்கு நடுவில் இந்த மாதிரி நகைச்சுவைகள் தரும் தெம்பே தனி.

Monday, September 28, 2015

கோவை வெள்ளலுாரைச் சேர்ந்த, டேனியல் ஏசுதாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்த தகவல்கள்

மாதம் ரூ.55 ஆயிரம் : எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதச் சம்பளம், 8,000 ரூபாய்; ஈட்டுப்படியாக, 7,000 ரூபாய்; தொலைபேசி படியாக, 5,000; தொகுதிப்படியாக, 10 ஆயிரம்; அஞ்சல் படி, தொகுப்பு படியாக, தலா, 2,500 ரூபாய்; வாகனப் படியாக, 20 ஆயிரம் ரூபாய்; ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு மாதத்திற்கு மொத்தம், 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றன. 

இதுதவிர, சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் தினப்படியாக வழங்கப்படுகின்றன.

எல்லாம் இலவசம் : மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய, இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன, (இதுவரை யாரும் பஸ் பயணம் சென்றதில்லையாம்).வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன. சட்டசபை கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளும் இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மருத்துவ சலுகை : மேலும், மத்திய அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில், இதயம், சிறுநீரகம், உடலின் வேறு ஏதாவது பாகம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரசு நிதியுதவி பெற உரிமையுள்ளது. ஆண்டுக்கு, 1,500 பெரிய கடித தாள்கள்; 3,700 சிறிய கடித தாள்கள்; பெரிய கவர்கள், 750; சிறிய கவர்கள், 1,500; ஹீரோ பேனா ஒன்று; டைரி ஒன்று; காலண்டர் இரண்டு வழங்கப்படுகின்றன.

'மாஜி'க்களின் சலுகைகள் : எம்.எல்.ஏ., ஒருவர், தொகுதிக்கு வெளியே எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வாடகை, அரசால் வழங்கப்படுகிறது.

பதவிக்காலத்தில் இறந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, பதவிக்காலம் முழுமைக்கும், மாதத்துக்கு, 1,000 ரூபாய், குடும்ப படியாக வழங்கப்படுகிறது.அக்குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த படியாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மரணமடைந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, ஓய்வூதியாக, மாதம், 6,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருடன், அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். அரசு மருத்துவமனையில், 'அ' அல்லது 'ஆ' பிரிவில் இலவசமாக தங்கி, சிகிச்சை பெறலாம். மேலும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மருத்துவப் படியாக வழங்கப்படுகிறது.

தினமலர் நாளிதழ் செய்திகள் - 22.03.2015

சகுனி பற்றி படித்தது ...

காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன் சகுனி.துரியோதனனின் தாய் காந்தாரியின் தம்பி ஆவார் சகுனி..

காந்தாரியின் முதல் கணவருக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதால், நுணுக்கமாய் அன்றைய சோதிடப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை..

பீஷ்மரின் உத்தரவில் ஆட்டுக்கிடாய் விவாகாரம் மறைக்கப்பட்டு திருதராஷ்டிரரை மணம் முடிக்கிறார் காந்தாரி ..பிறகு விவரம் அறிந்த பிதாமகர் என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்" என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார் பிதாமகர் பீஷ்மர்..

ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்."நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் "நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்...


வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், "இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார்.


சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்" என்றார்.


சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டு நிறைவேற்றினான்..


இறுதியில் சகதேவனால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். சகுனியின் மகன் உல்லூகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டான்...

படித்தது........

Wednesday, September 23, 2015

பெண்கள் மனதை அறியும் கருவி கண்டுபிடிப்பு (வீடியோ )

ரொம்ப காலமாவே எல்லா ஆண்களும் எதிர்பார்த்த கருவி அறிமுகம்
இதனை மனதில் ஒன்று நினைத்துவிட்டு வெளியே ஒன்று பேசும் பெண்களுக்காகவே கண்டறியப்பட்ட கருவி என்றும் சொல்லலாம்.
இது முக்கியமாக திருமணமான ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லாம் .

Tuesday, September 22, 2015

பண்டையகால தமிழர்களின் கருவி வளரி !!!


வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

அமைப்பு

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட பூமராங்
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

எறியப்படும் முறைகள்

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன்சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் வளரி

“வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது

நன்றி ‘
ஜெய்வந்த் செலவகுமார்

நீதி கதைகள் பாகம் 3

#‎ரசமான_விவாதம்‬’ :
பெரியவாளின் சமையல் விளக்கம்.

"குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும்
சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.
மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.
இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.

அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்…

ஆனால் இது இல்லை என்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத் தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம்.

நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?

இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.
இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம், மோர், பட்சணம், இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பல விதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்த பின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர்
தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?”

என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து
விட்டார் மஹான்.
குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்
நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை,
இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.

Monday, September 21, 2015

வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் - சிறப்பான விளக்கம்

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...
நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....
உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய ( கஞ்சிக்கு கையேந்து) உத்யோகத்துக்கு போ....

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???

எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன???

நீதி கதைகள் பாகம் 2

மூன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் ஸ்கார்ப்பியோ காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. மூன்று பேரும் இறந்துவிடுகின்றனர்.

இவர்களின் மரணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் எமதர்மராஜா அவர்களை எமலோகத்திற்கு கூட்டிச்செல்கிறான்.

எமராஜா முதல் இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கிறார். கடைசியாக வந்தவரை நரகத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

"இது என்ன அநியாயமான தீர்ப்பாகவுள்ளது. அவர்களும் தான் நிறைய குற்றங்கள் செய்து உள்ளனர். மக்கள் பணத்தில் சொத்துக்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

என்னை மட்டும் ஏன் நரகத்திற்கு அனுப்பினீர்கள்"? என அவர் கேள்வி எழுப்பினார்.

சரி உங்களுக்கு நான் ஒரு டெஸ்ட் வைக்கிறேன். அதில் பாசாகிறவர்கள் சொர்க்கத்திற்கு பெயில் ஆகிறவர்கள் நரகத்திற்கு என்றார் எமதர்மராசா. மூவரும் ஒத்துக் கொண்டனர்.

எமராசா முதலாமவரிடம் இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்ற கேள்வியை கேட்டார். 1947 என்று சரியான விடையை சொன்னார். அவர் பாசாகிவிட்டதால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இரண்டாமவரிடம் சுதந்திரப் பேராட்டத்தின்போது எத்தனைபேர் இறந்தனர். மூன்று விடைகளில் ஒன்றை தேர்தெடுக்கலாம் என்றார். 1,00,000 / 2,00,000 / 3,00,000. AA -2,00,000 என்ற சரியான விடையை தேர்தெடுத்ததால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மூன்றாமவரிடம் சுதந்திரப் பேராட்டத்திற்காக இறந்த இரண்டு இலட்சம் பேர்களின் பெயர்களை எழுதுக என்றார் எமதர்மராசா.
அவருக்கு பதில் தெரியாததால் பெயிலாகிவிட்டார். நரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

‪#‎கதையின்_நீதி‬ : தலைமை(MANAGEMENT) என்ன முடிவெடுக்கிறதோ அதை எப்படியும் செயல்படுத்தியே தீரும்.

நீதி கதைகள் பாகம் 1


ஒரு மீனவன் ஆற்ங்கரையில் உட்கார்ந்து கொண்டு டேப்ரிக்கார்ரடரில் மீன் பற்றிய பாடல்களை பாட விட்டுக் கொண்டிருந்தான்..! பக்கத்தில் கூடை நிறைய மீன்கள் கிடந்தன.
அவன் மீன் பிடித்ததாகவே தெரியவில்லை...!! நீண்ட நேரம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு இது விநோதமாக தெரியவே, மெல்ல அவனிடம் வந்து.....
நீ என்ன பண்ணீட்டு இருக்கன்னு கேட்டார்...!!
அவன், 'கூடைய பாத்தீங்கல்ல' தெரியலையா மீன் புடிச்சிட்டு இருக்கேன்னு சொன்னான்..!?
அவர் குழம்பிப் போய் வலையும் இல்லை..!! தூண்டிலும் இல்லை..!!! இவ்வளவு மீன் பிடிச்சிருக்கன்னா...??? எப்படிப்பான்னார்...!!
உங்களுக்கு பதில் சொல்லும் போது என்னோட தொழில் பாதிக்கும், ஆனா எப்படியும் உங்களுக்கு தெரிஞ்சிக்கனும்னா.?
நூறு ரூபா குடுங்க சொல்லுரேன்னான்..!!
ஆர்வம் தாங்காம அவரும் நூறு ரூபாய் கொடுத்து விட்டு, இப்ப சொல்லுன்னாராம்...!!
அது ஒன்னுமில்லீங்க மீன் பத்தி இந்த பொட்டீல பாட்டு போட்டுருக்கேன்ல, அத கேட்டு மீன் மயங்குச்சுனா வெறும் கையாலயே புடிச்சி கூடைல போட்டுறலாம்னு காத்துட்டு இருக்கேன்னான்.!
அதை கேட்ட அவர், மேலும் குழப்பமாக, நீ சொல்லுறது நம்புறமாதிரியே இல்லையே'ன்னாராம்...?
அப்புடி எவ்வளவு மீன் பிடிச்சிருக்க...? இந்த கூடைல இருக்கிற மீன் எல்லாம் இப்படித்தான் பிடித்ததான்னு கேட்டார்.
அவன் சிரித்துக் கொண்டே, இந்த கூடைல இருக்குறது வலைபோட்டு புடிச்சது, வலைய மடிச்சி வீட்டுல வச்சிட்டுவர என் மனைவி போயிருக்காங்க அவ திரும்பி வர ரெண்டு மணி நேரமாகும்...!!
அது வரையில சும்மா இருக்காம இந்த முறையில உங்களோட சேர்த்து....!! இன்னைக்கு இதுவரைக்கும் பத்து மீன் புடிச்சிருக்கேன்னு சொன்னான்...!!!!

Saturday, September 19, 2015

எறும்பு - சில தகவல்கள்


 

எறும்பின் அளவுக்கு அது ஓடும் வேகத்தோடு கணக்கிட்டால் அதே அளவில் மனிதன் ஓடினால் ஒரு பந்தயக் குதிரையின் வேகம் இருக்க வேண்டும். தன்னுடைய உடல் எடையைப் போல 20 மடங்கு அதிகமான எடையை எறும்புகளால் தூக்க முடியும்.

 

எறும்புகளுக்கு சாதாரணமாக ஆயுள் 45-60 நட்கள்.  ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை கூட வாழும். (அட!)


எறும்புகளுக்கு பல சிறு கண்களைக் கொண்ட இரு பெரிய கண்கள். இரண்டு வயிறுகள். ஒன்று அதன் பசிக்கு. இன்னொன்று மற்ற எறும்புகளுக்கு பகிர்ந்து கொடுக்க. 



 

இதன் ரத்தம் நிறமற்றது.

 

ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication)


ராணி எறும்பு இடும் முட்டைகளைப் பாதுகாக்கும் வேலைக்கார எறும்புகள் மிகவும் சுத்தமானவை. எந்த அளவு என்றால் உதாரணத்துக்கு அந்தக் காலனியில் இருக்கும்/சேரும் குப்பைகளைக் கொண்டுபோய் அதற்கென்று இருக்கும் பகுதியில் போடும் இயல்புடையன. 

 

ஒவ்வொரு எறும்புக் குழுவுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. இதை வைத்தே அன்னியர் உள்ளே வந்தால் அவை அவர்களை அறிகின்றன. ராணியை இழந்த எறும்புக் கூட்டம் சில மாதங்களே பிழைத்திருக்கும். வேலைக்கார எறும்புகளால் இனப் பெருக்கம் செய்ய முடியாது.



சிப்பாய் எறும்புகளும் உண்டு. ராணியைப் பாதுகாக்கவும், பக்கத்து எறும்புக் குழுக்களைத் தாக்கி ஆக்கிரமிக்கவும், அங்கிருக்கும் முட்டைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து அடிமை எறும்புகளை உருவாக்கவும் செய்கின்றன.
 



 

சில எறும்புகள் நீந்தும். சில எறும்புகள் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கடியில் தாக்குப் பிடிக்கும். சில எறும்புகளுக்குக் கண்கள் கிடையாது. எறும்பு அடிக்கடித் தூங்கிவிடும் பழக்கமுடையது. எறும்பின் எதிரி மனிதன் அல்ல, எறும்பேதான்!
 

பூச்சி வகைகளிலேயே பெரிய அளவிலான மூளை எறும்புக்குத்தான்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் ஒரு திரவத்தை (ஃபார்மிக் ஆசிட்) உமிழும் எறும்புகளைச் சில பறவைகள் தங்கள் சிறகில் ஏற்றிக் கொள்கின்றன. தங்கள் இறகுகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து இந்த வகையில் அவை பாதுகாத்துக் கொள்கின்றன.

எறும்புகளுக்குக் காதுகள் கிடையாது. அதிர்வுகளைக் கொண்டே சப்தங்களை அறிகின்றன.

நுரையீரல் இல்லாததால் உடம்பில் உள்ள சிறு துளைகள் வழியே ஆக்சிஜன் உள் செல்வதும், அதே துளைகள் வழியாகவே கார்பன் டை ஆக்சைட் வெளிவருவதும் நிகழ்கின்றன.

பெரு நாட்டில் மழைக்காடுகளில் வாழும் செஃபலோடிஸ் ஏட்ரியஸ் இனமே முதன் முதலில் கண்டறியப்பட்ட சறுக்கும் எறும்பாகும். 


 

ஏதோ ஒரு காரணத்தால் மரத்தில் இருந்து இவை கீழே விழ நேர்ந்தால் பல நூறு அடி கீழே போவதோடு நீரில் விழுந்து உயிர்விடவோ அல்லது வேறு விலங்குக்கு இரையாகவோ நேரிடலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எறும்புகள் கீழே விழ நேர்கையில் தங்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி (பிற எறும்புகளுக்குப் பார்வைத் திறன் குறைவென்பதாலேயே ஃபெரமோன்களைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பின் தொடர்கின்றன.) மரத்தின் தண்டுப் பகுதியைச் சரியாக வந்தடைகின்றன.




தான் வசிக்குமிடத்திலிருந்து 200 மீட்டர் - 655 அடி -  இரை தேடிச் செல்லும் ஒருவகைப் பாலைவன எறும்புகள் எப்படி வழி தொலையாமல் மறுபடி இருப்பிடத்தை அடைகின்றன என்று இங்கு  படித்தேன்.

தஞ்சை வேங்குராயன் குடிகாடு பகுதியில் உள்ள வீடுகளில் படையெடுக்கும் எறும்புகளால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று வீடியோவுடன் செய்தி தினமலரின் இந்தப் பக்கத்தில்!


எறும்பைப்பற்றி ஒளவையார்....  !
  • வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
             எறும்புந்தன் கையாலெண் சாண்.
  • அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?
நன்றி 
http://kasusobhana.blogspot.in/