Saturday, September 19, 2015

மிக உயர்ந்த சன்மானம்


நமது நாட்டில் மிக உயர்ந்த சன்மானம் அல்லது கௌரவப்பட்டம், பாரத சர்க்காரால் கொடுக்கப்படுவது, எது என்றால் அதுதான் "பாரத ரத்னா". நம் பள்ளியில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மாணவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்குப் பரிசு கொடுப்பதுப்போல் நம் நாட்டிலும் ஒவ்வொரு பிரிவிலும் மிகச் சிறந்து விளங்கி நம் பாரதத்திற்குப் பெருமை சேர்க்கும் சிலருக்கு இந்தப்பட்டம் அளிக்கபடுகிறது. இந்தப் பழக்கம் 1954ல் ஆரம்பித்தது. இந்தப் பட்டங்களில் மிக உயர்ந்தது பாரதரத்னா.
அதன் பின் வருவன பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ.

முதன் முதலாக பாரதரத்னா என்ற பெரிய கௌரவமான பட்டம் பெற்றவர் திரு சி.வி. ராமன் என்பவர். இவர் பெரிய விஞ்ஞானி. திரு ராஜகோபாலசாரியார் அவர்களுக்கும், புகழ்பெற்ற இகனாமிஸ்ட் அமர்த்யாசென்னுக்கும் கிடைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிகல் பாடும் திரு பீம்சென் ஜோஷி என்ற மஹாராஷ்டிரியருக்கும் இது கிடைத்துள்ளது. மதர் தெரிசாவுக்கும் இந்தப்பட்டம் வழ்ங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் பலர் இந்தக் கௌரவப்பட்டம் பெற்றிருக்கின்றனர். அவர்கள் திரு காமராஜர், திரு எம்.ஜி. ராமச்சந்திரன், திருமதி எம்.எஸ். சுப்பலட்சுமி மற்றும் திரு சி. சுப்பிரமண்யம்.
சிலர் பாரதம் அல்லாது ஆனால் பாரதத்தின் கொள்கையைக்கொண்டு அதற்காகப் பாடுபட்டவர்கள் உண்டு. அவர்களுக்கும் இந்தப் பட்டம் கிடைத்திருக்கிறது. அவர்கள் திரு கான் அப்துல் கபர் கான் மற்றும் திரு நெல்சன் மண்டலா.
திருமதி ரோமிலா தாப்பருக்கு இரண்டு தடவைகள் 1992லும் பின் 2002லும் பத்மபூஷண் பட்டம் கிடைத்தும் அதை அவர் பெற்றுக்கொள்ளவில்லை. இவர் பெரிய ஹிஸ்டாரியன். இதே போல் திரு கே. சுப்ரமண்யம் என்பவரும் இந்தப் பட்டம் வாங்க மறுத்துவிட்டார். அவரும் இந்திய சர்க்காரில் வேலை செய்து வந்ததால் {civil servant} மறுத்துவிட்டார். ஜனதா பார்டி ஆட்சி செய்யும் நேரத்தில் இந்தக் கௌரவப் பட்டத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது {1977லிருந்து 1980 வரை}
சில வருடங்கள் பாரதரத்னா அவார்ட் பொருத்தமான நபர் கிடைகாததால் கொடுக்கப்படாமலும் இருந்தது. ஒரு சம்யம் திரு சுபாஷ்சந்த்ரபோஸுக்கு பாரதரத்னா வழ்ங்கப்பட்டது. ஆனால் அதுபேரில் பிரச்சனை மனபேதம் ஏற்பட்டது. சிலர் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் சிலர் அவர் இல்லை என்றும் வாதாடினர். இதனால் அவருக்கு வழ்ங்க இருந்த பட்டம் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுவரை இந்த விருது பெற்றவர்கள்:
திரு டாகடர் ராதாகிருஷ்ணன் அவர்கள்
திரு பகவன்தாஸ் அவர்கள்
திரு விஸ்வேஸ்வரய்யா அவர்கள்
திரு ஜவஹர்லால் நேருஜி
திரு கோவிந்தவல்லபபந்த அவர்கள்
திரு டாக்டர் கே. கர்வே அவர்கள்
திரு பிதன் சந்தர ராய் அவர்கள்
திரு புருஷோத்தமதாஸ் டாண்டன் அவர்கள்
திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள்
திரு டாக்டர் ஜாகிர் ஹுசேன் அவர்கள்
திரு பாண்டுரங்க வாமன் கானே அவர்கள்
திரு லால்பஹாதூர் சாஸ்த்ரி அவர்கள்
திருமதி இந்திராகாந்திஜி
திரு டாக்டர் வி.வி. கிரி அவர்கள்
திரு ஆசார்ய வினோபாபாவே அவர்கள்
திரு கான் அப்துல் கபர் கான் அவர்கள்
திரு எம்.ஜி.ஆர். அவர்கள்
திரு அம்பேத்கர் அவர்கள்
திரு வல்லபபாய் படேல் அவர்கள்
திரு மொரார்ஜி தேசாய் அவர்கள்
திரு அப்துல் கலாம் ஆஜாத் அவர்கள்
திரு ஜே.ஆர்.டி. டாடா அவர்கள்
திரு சத்யஜித்ரே அவர்கள்
திரு அப்துல் கலாம் அவர்கள்
திரு குல்ஜாரிலால் நந்தா அவர்கள்
திருமதி அருணா ஆசப் அலி அவர்கள்
திரு சி. சுபரமண்யம் அவர்கள்
திரு ஜயப்பிரகாஷ் நாராயண் அவர்கள்
திரு பண்டிட் ரவிசங்கர் அவர்கள்
திரு கோபிநாத் போர்டோலை அவர்கள்
திருமதி லதா மங்கேஷ்கர் அவர்கள்
திரு பிஸ்மில்லகான் அவர்கள்
திரு பீம்சேன் ஜோஷி அவர்கள்
கடைசியாக இதை வாங்கியவர் திருமதி சம்ஷாத் பேகம், ஹிந்தியில் பாடல்கள் பாடியவர்.
இந்தப்பரிசு பார்க்க எப்படி இருக்கும்?
இது ஒரு தங்கப் பதக்கம். இதனுடைய வடிவம் அரச இலை போன்று இருக்கும். ஒரு பக்கம் சூரியனும் அடுத்தப்பக்கம் சிங்கம் போன்ற சின்னம், சூரியன் இருக்கும் பக்கம் பாரதரத்னா என்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். புத்தர் ஒரு அரசமரத்தின் கீழேயே தான் யார் என்பதை உணர்ந்தார். அவரின் உள்ளொளி தெரிந்தது, தவிர அரசமரம் ஹிந்துக்களின் புனித மரங்களில் ஒன்று.
பத்ம பூஷண், பத்மஸ்ரீயில் முன் பக்கம் தாமரையும் பின் பக்கம் சிங்கமும் இருக்கும். இந்த வருடம் பெரிய இலக்கியத் தமிழ் மேதை எழுத்தாளர் திரு ஜெயக்காந்தன் அவர்களுக்கு பத்மபூஷண் பட்டம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment