மாதம் ரூ.55 ஆயிரம் :
எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதச் சம்பளம், 8,000 ரூபாய்; ஈட்டுப்படியாக, 7,000
ரூபாய்; தொலைபேசி படியாக, 5,000; தொகுதிப்படியாக, 10 ஆயிரம்; அஞ்சல் படி,
தொகுப்பு படியாக, தலா, 2,500 ரூபாய்; வாகனப் படியாக, 20 ஆயிரம் ரூபாய்; ஒரு
எம்.எல்.ஏ.,வுக்கு மாதத்திற்கு மொத்தம், 55 ஆயிரம் ரூபாய்
வழங்கப்படுகின்றன.
இதுதவிர, சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் தினப்படியாக வழங்கப்படுகின்றன.

எல்லாம் இலவசம் : மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில்,
எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய, இலவச அனுமதிச்
சீட்டு வழங்கப்படுகின்றன, (இதுவரை யாரும் பஸ் பயணம்
சென்றதில்லையாம்).வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு
இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன. சட்டசபை
கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும்
குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு
மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளும் இலவசம்
போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவ சலுகை : மேலும், மத்திய அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில், இதயம், சிறுநீரகம், உடலின் வேறு ஏதாவது பாகம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரசு நிதியுதவி பெற உரிமையுள்ளது. ஆண்டுக்கு, 1,500 பெரிய கடித தாள்கள்; 3,700 சிறிய கடித தாள்கள்; பெரிய கவர்கள், 750; சிறிய கவர்கள், 1,500; ஹீரோ பேனா ஒன்று; டைரி ஒன்று; காலண்டர் இரண்டு வழங்கப்படுகின்றன.
'மாஜி'க்களின் சலுகைகள் : எம்.எல்.ஏ., ஒருவர், தொகுதிக்கு வெளியே எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வாடகை, அரசால் வழங்கப்படுகிறது.
பதவிக்காலத்தில் இறந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, பதவிக்காலம் முழுமைக்கும், மாதத்துக்கு, 1,000 ரூபாய், குடும்ப படியாக வழங்கப்படுகிறது.அக்குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த படியாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மரணமடைந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, ஓய்வூதியாக, மாதம், 6,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருடன், அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். அரசு மருத்துவமனையில், 'அ' அல்லது 'ஆ' பிரிவில் இலவசமாக தங்கி, சிகிச்சை பெறலாம். மேலும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மருத்துவப் படியாக வழங்கப்படுகிறது.
தினமலர் நாளிதழ் செய்திகள் - 22.03.2015

No comments:
Post a Comment