Saturday, November 29, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 32

பொது அறிவியல்
961. கல்லீரல் (Spleen) வீங்கி பெரிதாகும் நோய் எது?
962. எய்ட்ஸ் நோயை கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன?
963. சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் ஜோடியாக காணப்படும் சுரப்பி எது?
964. நெஃப்ரான் எனப்படும் வடிகட்டிகள் உடலின் எந்த பகுதியில் காணப்படுகின்றன?
965. இரு வேறு பிரிவு ரத்தத்தை சேர்த்தால் என்னவாகும்?
966. முதல் சோதனை குழாய் குழந்தை பெற்ற பெண்மணி யார்?
967. சீனர்களின் ஊசி மருத்துவ முறையின் பெயர் என்ன?
968. இந்தியாவில் மருத்துவத்துக்காக வழங்கப்படும் விருது எது?
969. கடல் பற்றிய ஆராய்ச்சி படிப்பின் பெயர் என்ன?
970. ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் தோன்றும் நோய் எது?
971. மையோபியா என்பது என்ன?
972. சாதாரண வீட்டு ஈக்களால் பரவும் நோய்கள் எவை?
973. நமது உடலில் எத்தனை துளைகள் உள்ளன?
974. Oology என்பது எதைப்பற்றிய துறை?
975. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் எது?
976. பூமியை விட சூரியன் எத்தனை மடங்கு பெரியது?
977. பூமி சூரியனுக்கு மிக அருகில் எந்த மாதத்தில் வரும்?
978. நிலவில் முதல்முதலில் காலடி வைத்தவர் யார்?
979. விண்வெளியில் முதலில் பறந்தவர் யார்?
980. இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது?
981. நிலவுக்கு மனிதனை ஏந்திச்சென்ற விண்கலம் எது?
982. விண்வெளியில் முதலில் நடந்தவர் யார்?
983. விண்வெளிக்குச் சென்ற 135-வது வீரர் யார்?
984. ரஷ்ய விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன?
985. விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி யார்?
986. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
987. உலக கொசு ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
988. ஆகாய விமானங்களில் ஒளிச்செறிவைக் கட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடிகளாக பயன்படுவது எது?
989. வானம் நீல நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன?
990. D.D.T. என்பது என்ன?
991. கிளெப்டோமேனியா என்றால் என்ன?
992. ஊறுகாய் தயாரிப்பில் பயன்படும் அறிவியல் கொள்கை எது?
993. கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிபத்திரங்களையும் கண்டறிய உதவும் கதிர்கள் எவை?
விடைகள்
961. ஸ்பிலினோமெக்கலி 962. ELISA Test 963. அட்ரினல் சுரப்பி 964. இரு சிறுநீரகங்களில் 965. ரத்தம் கட்டிக்கொள்ளும் 966. லெஸ்லி பிரவுன் 967. அக்குபஞ்சர் 968. தன்வந்திரி 969. ஓசனோகிராபி (Oceanography) 970. லூக்கேமியா 971. கிட்டப்பார்வை குறைபாடு 972. டைபாய்டு, சீதபேதி 973. ஒன்பது துளைகள் 974. பறவைகளின் முட்டைகளைப் பற்றிய அறிவியல் 975. புதன் 976. 12 ஆயிரம் மடங்கு 977. டிசம்பர் மாதம் 978. நீல் ஆம்ஸ்ட்ராங் 979. யூரி ககாரின் 980. ஆரியபட்டா 981. அப்போலோ-II 982. அலெக்ஸி லியோல் 983. இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா 984. மிர் விண்வெளி நிலையம் 985. ஸ்வெட்லானா சவிட்ஸ்காயா (ஜூலை 25, 1984) 986. பிரிதிவி 987. ஆகஸ்ட் 20 988. போலராய்டு 989. ஒளிச்சிதறல் (Scattering of Light) 990. ஒரு பூச்சிக்கொல்லி (Insecticide) 991. பொருட்களை திருடும் ஒரு வகை நோய் 992. பிளாஸ்மாலைசிஸ் 993. அல்ட்ரா வயலட் கதிர்கள் 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 31

பொது அறிவியல்
926. மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது?
927. சிறுநீரில் அதிகம் காணப்படும் உப்பு எது?
928. உடலில் ஸ்டார்ச் எதுவாக மாற்றம் அடைகிறது?
929. இறந்த பிறகும் மனிதனின் உடலில் வளரும் பகுதிகள் எவை?
930. ரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது?
931. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்?
932. இன்சுலின் எங்கு சுரக்கிறது? 933. பிட்டியூட்டரி சுரப்பி எங்கு உள்ளது?
934. ஆரோக்கிய மனிதனின் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும்?
935. கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
936. குட்டி போட்டு இனத்தைப் பெருக்கும் மீன் இனம் எது?
937. மூளையே இல்லாத கடல்வாழ் உயிரினம் எது?
938. எந்த வைட்டமின் குறைவால் பெரி பெரி நோய் ஏற்படுகிறது?
939. விரைவாக குஞ்சுபொறிக்க உதவும் சாதனம் எது?
940. உடலமைப்பை பற்றிய அறிவியல் பிரிவின் பெயர் என்ன?
941. அறுவை சிகிச்சை கருவிகளை தூய்மையாக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?
942. அதிகமான ஒளியைக் கண்டு தோன்றும் பயத்தின் பெயர் என்ன?
943. ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
944. மனித உடலில் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கும்?
945. எத்தனை வயதுக்குப் பின்னர் மூளையின் வளர்ச்சி நின்று விடுகிறது?
946. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட உயிரி எது?
947. தோல் உரிக்கும் உயிரினங்கள் யாவை?
948. இறகு இல்லாத பறவை எது? 949. யானையின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
950. தன் தலையை முழுவதும் பின்புறமாக திருப்பக்கூடிய பறவை எது?
951. பசுவின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
952. பின்புறமாக படுத்து உறங்கும் உயிரினம் எது?
953. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன் எது?
954. அதிக வாழ்நாள் கொண்ட உயிரினம் எது?
955. போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் யார்?
956. பச்சையம் இல்லாத தாவரம் எது?
957. பாலை தயிராக்குவது எது?
958. எலும்புகளைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?
959. கரப்பான் பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிமக்கண்ணின் பெயர் என்ன?
960. உமிழ்நீரில் அடங்கியுள்ள ஆண்டிபாக்டீரியல் காரணி எது?
விடைகள்
926. நடுச்செவி எலும்பு 927. யூரியா 928. சர்க்கரை 929. நகம், உரோமம் 930. நுரையீரல் 931. 90 நாட்களுக்கு ஒருமுறை 932. கணையத்தில் 933. மூளையின் அடிப்பகுதியில் 934. 120/80 935. 22 நாட்கள் 936. திமிங்கலம் 937. நட்சத்திர மீன் 938. வைட்டமின் B1 939. இன்குபேட்டர் 940. அனடாமி (Anatomy) 941. ஜோசப் லிஸ்டர் 942. Photophobia 943. 100 முதல் 120 நாட்கள் வரை 944. 5 முதல் 6 லிட்டர் வரை 945. 15 வயதுக்கு மேல் 946. மண்புழு 947. பாம்பு, கரப்பான் பூச்சி, பட்டுப்பூச்சி 948. கிவி பறவை 949. 47 வருடங்கள் 950. ஆந்தை 951. நான்கு பகுதிகள் 952. மனிதன் 953. ஆல்புமின் 954. நீலத்திமிங்கலம் (500 ஆண்டுகள்) 955. ஜோனஸ் இ.சால்க் 956. காளான் 957. ஈஸ்டுகள் 958. ஓஸ்டியோலாஜி (Osteology) 959. ஓமட்டியம் 960. லைசோம்
பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்
1. நிமோனியா 2. காசநோய் 3. பிளேக் 4. காலரா 5. வயிற்றலைச்சல் 6. குன்னிறுமல் 7. டிப்தீரியா 8. தொழுநோய் வைரஸால் உண்டாகும் நோய்கள் 1. ராபீஸ் 2. சின்னம்மை 3. மீசில்ஸ் 4. பெரியம்மை 5. இன்புளூன்சா 6. டிம்ப்லர்
வைரஸால் உண்டாகும் நோய்கள்
1. ராபீஸ் 2. சின்னம்மை 3. மீசில்ஸ் 4. பெரியம்மை 5. இன்புளூன்சா 6. டிம்ப்லர் 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 30

பொது அறிவியல்
891. உயிரியலில் பூச்சியியல் பற்றிய படிப்பு எது?
892. உடலில் பித்தநீர் சுரக்கும் பகுதி எது?
893. உணவை தண்டில் சேமிப்பது எது?
894. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
895. வைட்டமின்-சி குறைபாடு காரணமாக வரும் நோய் எது?
896. பறவைகளைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
897. பச்சையம் இல்லாத தாவரம் எது?
898. ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் வாயு எது?
899. கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு எது?
900. தாவரத்தின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எது?
901. தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?
902. Horticulture என்பது என்ன?
903. ஆப்பிள் வெட்டிய சில நிமிடங்களில் அது பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது ஏன்?
904. பொதுவாக இரவு நேரங்களில் மலரும் பூ என்ன நிறத்தில் இருக்கும்?
905. மனித உடலில் உள்ள கழிவுநீக்க உறுப்புகள் யாவை?
906. நமது இதயம் நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கிறது?
907. குழந்தையின் இதயத் துடிப்பு வேகம் சாதாரண மனிதனை விட குறைவா? அதிகமா?
908. எல்லா ரத்தப் பிரிவினருக்கும் பயன்படும் ரத்தப்பிரிவு எது?
909. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
910. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எது?
911. மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
912. உடலில் எந்த பாகம் பழுதடைவதால் டயாலிசிஸ் செய்யப்படுகிறது?
913. பென்சிலின் மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
914. வைட்டமின்-டி குறைபாடு காரணமாக தோன்றும் நோய் எது?
915. AIDS என்பதன் விரிவாக்கம் என்ன?
916. சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் எப்படிப்பட்டவை?
917. ரத்தம் உறையாமைக்கு எந்த வைட்டமின் குறைபாடு காரணம்?
918. மஞ்சள் காமாலை நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?
919. பயோரியா நோய் தாக்கும் உறுப்பு எது?
920. வெறி நாய் கடியால் தாக்கப்படும் பகுதி எது?
921. Adam Apple என்பது என்ன?
922. ரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணம் எது?
923. மது குடித்தவன் தள்ளாடுவது ஏன்?
924. மனித உடலில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
925. ஆக்ஸிஜன் படகு என அழைக்கப்படுவது எது?
விடைகள்
891. Entomology 892. கல்லீரல் 893. இஞ்சி 894. அட்ரினலின் 895. ஸ்கர்வி 896. Ornithology 897. காளான் 898. ஆக்ஸிஜன் 899. ஜப்பான் 900. மகரந்தப்பைகள் 901. சூலகம் 902. தோட்டக்கலை 903. ஆப்பிளில் உள்ள பெர்ரஸ் (இரும்புச்சத்து) ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் 904. வெள்ளை 905. தோல், சிறுநீரகம், நுரையீரல் 906. 72 தடவை 907. அதிகமாக இருக்கும் 908. “ஓ” வகை ரத்தப்பிரிவு 909. “ஏபி” பிரிவு 910. இன்சுலின் 911. 75 சதவீதம் 912. சிறுநீரகம் 913. பென்சிலின் நொட்டேட்டம் 914. ரிக்கெட்ஸ் 915. Acquired Immuno Deficiency Syndrome 916. லேகியம், சூரணம், குளிகைகள் 917. வைட்டமின்-கே 918. கல்லீரல் 919. பல் ஈறுகள் 920. மூளை 921. தொண்டையில் உள்ள ஓர் உடல் உறுப்பு 922. ஹீமோகுளோபின் 923. சிறுமூளை பாதிக்கப்படுவதால் 924. 206 925. ஹீமோகுளோபின் 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 29

அறிவியல் மற்றும் பொது அறிவியல்
856. ஜிப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன?
857. சோடியம் கார்பனேட்டின் சாதாரண பெயர் என்ன?
858. அடர் குளோரிக் அமிலம், அடர் கந்தக அமிலம் கலந்த கலவை (3:1) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
859. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
860. பாலில் உள்ள அமிலம் எது? 861. ஸ்பிரிட் எனப்படுவது யாது?
862. சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது எது?
863. சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?
864. போட்டோ தொழிலில் பயன்படும் வேதிப்பொருள் எது?
865. அலுமினிய தாதுவின் பெயர் என்ன?
866. பழங்களை பழுக்கவைக்கும் வாயுவின் பெயர் என்ன?
867. பூமியில் தனித்து கிடைக்கும் ஓர் உலோகம் எது?
868. பென்சிலில் உள்ள வேதிப்பொருள் எது?
869. ஒளி புகுந்துசெல்லக்கூடிய உலோகம் எது?
870. மிகவும் லேசான வாயு எது?
871. "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" என்பது என்ன?
872. "Quick Silver" என அழைக்கப்படும் உலோகம் எது?
873. நியூட்ரான் இல்லாத தனிமம் எது?
874. 22 காரட் தங்கத்தில் தங்கத்தின் சதவீதம் என்ன?
875. "பச்சை துத்தம்" எனப்படுவது எது?
876. தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
877. மணலின் வேதிப்பெயர் என்ன?
878. சர்க்கரையின் வேதிப்பெயர் என்ன?
879. திண்ம நிலையில் உள்ள அமிலம் எது?
880. எப்சம் என்பது என்ன? 881. இரும்பின் முக்கிய தாது எது?
882. பித்தளையின் சேர்மங்கள் யாவை?
883. சூரியனில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை?
884. வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?
885. சிமெண்டில் கலந்துள்ள முக்கிய வேதிப்பொருள்கள் யாவை?
886. புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் எது?
887. மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
888. இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
889. டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
890. சாண எரிவாயுவில் உள்ள முக்கிய வாயு எது?
விடைகள்
856. கால்சியம் சல்பேட் 857. சலவை சோடா 858. ராஜதிராவகம் 859. சிட்ரிக் அமிலம் 860. லாக்டிக் அமிலம் 861. மெதில் ஆல்கஹால் 862. நைட்ரஸ் ஆக்சைடு 863. 24 காரட் 864. வெள்ளி நைட்ரேட் 865. பாக்ஸைட் 866. எத்திலின் 867. தங்கம் 868. கிராஃபைட் 869. மைக்கா 870. ஹைட்ரஜன் 871. ஜிப்சம் 872. பாதரசம் 873. ஹைட்ரஜன் 874. 91.6 சதவீதம் 875. நீரேற்றப்பட்ட பெர்ரஸ் சல்பேட் 876. ஃபார்மிக் அமிலம் 877. சிலிக்கன்-டை-ஆக்ஸைடு 878. சுக்ரோஸ் 879. பென்சாயிக் அமிலம் 880. மெக்னீசியம் சல்பேட் 881. ஹேமடைட் 882. தாமிரம், துத்தநாகம் 883. ஹீலியம், ஹைட்ரஜன் 884. ஜீரோ டிகிரி செல்சியஸ் 885. சுண்ணாம்பு, அலுமினா, சிலிகா 886. நிக்கோடின் 887. வைட்டமின்-டி 888. ஃபார்மால்டிஹைடு 889. யூக்கலிப்டஸ் 890. மீத்தேன்
பொது அறிவியல்
குரூப்-4 தேர்வு வினாக்களில் பொது அறிவியல் பாடத்திட்டத்தில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து குறைந்தபட்சம் 15 கேள்விகள் முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்படுவது முந்தை ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்தால் தெரிய வரும். சில வருடங்கள் இயற்பியல், வேதியியலில் 10 கேள்விகளும், சில ஆண்டுகள் தாவரவியல், விலங்கியலில் 10 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. கேள்விகள் எல்லாம் அடிப்படை அறிவியலில் இருந்து கீழ்க்கண்டவாறு கேட்கப்படுவதை அறிய முடிகிறது. இயற்பியல் - கண்டுபிடிப்புகள், சூரியன், சூரிய ஆற்றல், சூரிய கோள்கள், காந்தம், மின்சாரம், மின்அறிவியல், இயற்பியலின் அனைத்து அடிப்படை விதிகள், அவற்றின் செயல்பாடுகள் வேதியியல் - தனிமங்கள், அமிலம், காரம், பயிர்களுக்கான உரங்களின் வேதியியல் பெயர்கள், ஆக்சிஜனேசன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம் கார்பனேட், பயோ-டீசல், யுரேனியம், பிளிச்சிங் ஏஜெண்ட், குளோரோபாம், தங்கம், வெள்ளி, காட்மீயம், இயற்கை வாயு தொடர்பான விவரங்கள் தாவரவியல் - தாவர செல்கள், கிளைக்காலஜிஸ், புரோட்டோ பிளாசம், உணவுப்பயிர்கள், தாவரப்பெயர்கள், தாவரங்களின் சுவாசம், ஒளிச்சேர்க்கை உயிரியல் - நாளமில்லா சுரப்பிகள், ரத்தங்கள், வைட்டமின்கள், டிஎன்ஏ, மனித உடல் உறுப்பு நோய்கள் விவரம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் எனவே, தேர்வெழுதுவோர் 6-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொது அறிவியல் புத்தகங்கள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக குறிப்புகள் எடுத்துப் படித்தால் அறிவியல் கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் அளித்து தேர்வில் வெற்றிபெறலாம். 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 28

அறிவியல்
816. ஒலியைப் பற்றிய அறிவியல் பிரிவு எது?
817. காற்றின் ஈரப்பதத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?
818. 100 டிகிரி செல்சியஸ் எத்தனை டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம்?
819. செல்சியஸ் என்ற அலகை உருவாக்கியவர் யார்?
820. பாரன்ஹீட்டை உருவாக்கியவர் யார்?
821. அணு உலையில் பயன்படும் நீர் எது?
822. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது?
823. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
824. காற்றின் வேகத்தைக் காண உதவும் கருவியின் பெயர் என்ன?
825. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
826. கடலுக்குள் இருக்கும் பொருட்களை காண உதவும் கருவி எது?
827. ஸ்டவ் திரியில் எண்ணெய் மேலேறக்காரணம் என்ன?
828. மின்கலங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
829. அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
830. கடலின் அடியிலிருந்து மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண பயன்படும் கருவி எது?
831. மின்இஸ்திரி பெட்டியில் உள்ள மின்வெப்ப இழை எது?
832. பென்சில் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
833. தண்ணீர் குழாய்கள் குளிர்காலத்தில் வெடிப்பது ஏன்?
834. தெர்மாஸ் குடுவையில் வெப்பக்கதிர் வீசலைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எது?
835. மின்விளக்கில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
836. மத்திய சுரங்க ஆய்வு நிலையம் எங்குள்ளது?
837. கார் என்ஜினில் கார்பரேட்டரின் வேலை என்ன?
838. விமானங்களின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது?
839. வாகனங்களில் என்ஜினைக் குளிர்விக்க உதவும் சாதனம் எது?
840. கப்பல்களில் துல்லியமாக நேரத்தை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன?
841. வாகனங்களின் சக்கரத்துடன் இணைத்து வாகனம் எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதை கண்டறியும் கருவி எது?
842. யானை எந்த ஒலி மூலம் செய்தியை பரிமாறிக்கொள்கிறது
843. ஓசோன் படலம் குறையக் காரணமான வாயு எது?
844. அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
845. வளிமண்டல உயர் அடுக்குகளின் பெயர் என்ன?
846. குக்கரில் சமைக்கும்போது சமையல் விரைவாக நடப்பது ஏன்?
847. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
848. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?
849. எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
850. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?
851. அறிவியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
852. இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் எங்குள்ளது?
853. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
854. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?
855. அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர் யார்?
விடைகள்
816. Acoustics 817. Hygrometer 818. 212 டிகிரி பாரன்ஹீட் 819. ஆன்ரூஸ் செல்சியஸ் (1742, சுவீடன்) 820. கிரேபியல் டேனியல் பாரன்ஹீட் (1715, ஜெர்மனி) 821. கனநீர் 822. ரஷ்யா 823. சர் சி.வி. ராமன் 824. அனிமோ மீட்டர் 825. டெல்லி 826. சோனார் 827. தந்துகி கவர்ச்சி (நுண்துளை வழியே திரவம் தானாக மேலேறுதல்) 828. கந்தக அமிலம் 829. ஆட்டோவான் 830. பெரிஸ்கோப் 831. நிக்ரோம் 832. கிராபைட் 833. குளிரில் நீர் உறைந்து விரிவடைவதால் 834. வெள்ளி 835. டங்ஸ்டன் 836. தன்பாத் (பிஹார்) 837. காற்றுடன் பெட்ரோலை கலப்பது 838. டேகோ மீட்டர் 839. ரேடியேட்டர் 840. குரோனோ மீட்டர் 841. ஓடோமீட்டர் 842. குற்றொலி 843. குளோரோ புளுரோ கார்பன் (CFC) 844. சர் வில்லியம் ஹெர்ஷெல் 845. ஸ்ட்ரேடோஸ்பியர் 846. நீரின் கொதிநிலை உயர்த்தப்படுவதால் 847. பனாஜி (கோவா) 848. கிரகாம்பெல் 849. ரான்ட்ஜென் 850. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 851. பிப்ரவரி 28 852. கொடைக்கானல் 853. பாதோம் மீட்டர் 854. அமிலம் 855. ஜான் டால்டன் 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)